Natchathiram Nagargirathu is beautifully made film with interesting characters and storyline. Pa. Ranjith made this strong political film with artistic presentation. Its unique, trendsetter & a very new experience.
Watch it in @netflix
வந்தியதேவனாக கார்த்தி,
குந்தவியாக திரிஷா,
நந்தினியாக ஐஸ்வர்யாராய்,
அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி
பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி
மிகப்பொருத்தமான அற்புதமான கதாபாத்திர தேர்வு, நடிப்பு. அதுவும் திரிஷாவின் best role in her careerனு சொல்லும் அளவு இருந்தது அவரது கேரக்டர்.
எனக்கு படம் பார்க்கும் முன்பே பெரும்பாலான அத்தனை கேரக்டர்களும் அவங்க குணங்களும், மொத்த கதையும் அதன் நகர்வுகளும் நல்லாவே தெரிந்துமே படத்தில் ஒரு GRIP இல்ல. முதல்காட்சியில் வரும் ஆதித்த கரிகாலனின் போரும், வந்தியதேவன் அருள்மொழிவர்மன் சண்டையிடும்போதும் விறுவிறுப்பே இல்லை.
ஒவ்வொரு கேரக்டரையும் ரொம்ப அழகா பொறுத்தமா வடிவமைச்சு இருக்காங்க. நிச்சயமா இதற்கு மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கும். ஆனா ஒரு காட்சியிலுருந்து அடுத்த காட்சி மாறுவதும், எமொசனல் கனெக்ட்டோ, சில ஆழமான சூழ்ச்சியோ பகையோ படத்தில் சரியா காட்டவில்லை என்றே தோணுது.
எங்கு பார்த்தாலும் படத்தை ஆஹா ஓஹோவென்று புகழ்வதை இப்போ கவனித்தேன். படமாக எடுத்த முயற்சியை நிச்சயம் பாராட்டலாம், ஆனா படத்தில் எங்கேயுமே அடுத்து என்ன நடக்குமென்ற சுவாரஸ்யம் சுத்தமா இல்லை. மணி சார் என்னமா எடுத்திருக்கார்னு நினைச்சா மட்டும் போதுமா, விறுவிறுப்பு வேண்டாமா??
Watched #PonniyinSelvan1
Really appreciate ManiRatnam for successfully attempt this 70 year old Novel into a movie.
But this film struggle to convey the core & characters of the story who doesn't know it already. Still its worthy to celebrate whoever involved in this project.