" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் @DKShivakumar தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும்,
அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?
மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ?
தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.
காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது.
கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu@AIADMKOfficial
#பொய்க்கால்_குதிரை_அரசு
முன்னாள் தமிழக முதல்வர்,
எங்கள் இதயதெய்வம் ,
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் துணைவியார் திருமதி. ஜானகி இராமச்சந்திரன் அம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று,
புரட்சித் தலைவரின் தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பைப் போற்றி வணங்குகிறேன்.
திருமதி. ஜானகி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2024-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு, அவர்தம் முழுவுருவப் படம் நமது தலைமைக் கழகக் கூட்ட அரங்கில் நிறுவப் பெற்றிருப்பதை இத்தருணத்தில் பெருமையொடு நினைவு கூர்கிறேன்.
@AIADMKOfficial
இல்ல புரியல...???😳
Dr PTR - •Doctor of Philosophy (Ph.D.) •Master of Business Administration (MBA) •Master of Science (M.S.) •Bachelor of Technology (https://t.co/kMDhImojTf.)
Thangam Thennarasu - Bachelor of Engineering
Sengottaiyan - S.S.L.C.
Meanwhile செங்கோட்டையன் as Finance Minister- GDP na என்னது பா? DGP ah 😁
#தற்குறி
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் எடப்பாடியார்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் காவல் அரண், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
வரலாறு திரும்புகிறது!
2011-ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியது @JuniorVikatan. ஆனால், அத்தனைக் கணிப்பையும் பொய்யாக்கி அஇஅதிமுக கூட்டணி 203 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது!
15 ஆண்டுகளுக்கு பிறகு, 2026 தேர்தலுக்கும் அதையே கூறுகிறது விகடன்.
2011 வரலாறு மீண்டும் திரும்பும்!
210 இடங்களில் @AIADMKOfficial கூட்டணி வெல்லும்!
“எடப்பாடி K பழனிசாமி எனும் நான்” என்ற மந்திர வாக்கியம் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கும்!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK
@EPSTamilNadu@AIADMKOfficial
Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats.
We have not only lost the golden opportunity given by Honourable Prime Minister Thiru. @narendramodi Avl to
get 50% more seats ..,
but @mkstalin being a puppet and not understanding the crux of the opportunity, you blindly opposed it.
If delimitation had been done based on 2011 census, we would have lost 9 MP seats. Because of your mindless opposition to the bill, the delimitation will now be based on 2026 census and we will lose even more MP seats.
Further, in 1998, Hon’ble Puratchi Thalaivi Amma, has brought women’s reservation bill under then PM Vajpayee ji leadership. During that time, your own INDI Alliance partners ensured that the bill did not get passed. This time around, you have killed that very spirit by opposing the bill and have done greatest injustice not only to #TamilNadu but also to the women all across India.
Thiru. @mkstalin Avargale, what exactly are you celebrating? The damage you have done to Tamil Nadu’s future or the greatest opportunity that you ruined for the women empowerment ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
இன்றைய தினம், #சேப்பாக்கம்_திருவல்லிக்கேணி, #ஆயிரம்விளக்கு, #இராயபுரம், #துறைமுகம்#திருவிகநகர், #எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரிகள் தான் தீர்மானிக்கின்றனரே தவிர, நானல்ல.
இத்தனை நாள் மக்கள் பிரச்சனைகளை நான் பேசியபோது பதில் சொல்லாமல் இருந்த கருணாநிதி குடும்பம், இவர்கள் கதையைப் பேசியதும் புலம்பித் தள்ளுகிறார்கள்.
கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்ததை நானாக சொல்லவில்லை. கவிஞர் கண்ணதாசன் சொன்னதைத் தான் நான் மேற்கோள் காட்டினேன்.
அதேபோல், நான் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் தான் தானாக வந்து "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்று மாட்டிக்கொள்கிறார்கள்.
தங்களை சொன்னால் வரும் கோபம், ஒரு நாளாவது மக்களுக்காக வந்ததா?
இது ஒன்று போதும், திமுக-விற்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை நிரூபிக்க!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
உங்களை பற்றி தவறாக பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
நீங்கள் எங்களை பற்றி ஒரு வார்த்தை பேசினால் எங்களால் பத்து வார்த்தை திருப்பி பேச முடியும்.
தேர்தல் களத்தில் நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது எனது எதிரிகள் தானே தவிர நான் இல்லை.
@Udhaystalin .
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
#அண்ணாநகர், #வில்லிவாக்கம், #கொளத்தூர்#பெரம்பூர் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
ஆட்சிக்கு முன் பறந்த கறுப்பு பலூன் எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் குடையாக மாறியது தான் பொம்மை வேந்தரின் மாடல்!
இப்படி மாறி மாறி நாடகமாடுவது ஏன்? இவர்களுக்கு மடியிலே கணம், வழியிலே பயம்!
இவர்களுடைய நாடகத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களும் நம்பவில்லை; தமிழக மக்களும் நம்பவில்லை!
வாக்களிக்கும் மக்களிடம் நாடகம் நடக்காமல், நல்லது மட்டுமே செய்யும் @AIADMKOfficial ஆட்சியை அமைப்பது என்பதே தமிழக மக்கள் எடுத்துவிட்ட திடமான முடிவு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும்,
தமிழகத்தில் தினசெய்தியாகி
விட்ட நிலையில்,
சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் இருந்த பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?
வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#Can_SHE_LiveInTN
@AIADMKOfficial