தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் ஊடகங்கள் செய்தியை வெளியிடுவதில் நடந்துள்ள மாற்றங்கள்:
1. முதலமைச்சர் வசம் உள்ள பொறுப்பான துறையில் குற்றம் நடந்திருந்தால் அது திமுக ஆட்சி என்றால் எங்கள் தலைவர் மீது குற்றம் சொல்வார்கள், ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் தலைமைச் செயலாளர்தான் பொறுப்பு என்கிறார்கள்.
@SuVe4Madurai
2. மதுபான கடைகளில் MRP விலையை விட அதிகம் பெற்றால் திமுக ஆட்சியில் அத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் குற்றவாளி! ஆனால் விஜய் ஆட்சியில் தற்போது கடை விற்பனையாளர்கள் தான் குற்றவாளி.. @actorvijay
3. ஆணவப்படுகொலை நடந்தால் திமுக ஆட்சியில் அதற்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை ஆனால் விஜய் ஆட்சியில் ஆணவப் படுகொலை நடந்தால் அது குடும்பத்தகராறு. @thirumaofficial@VanniTamizhVCK
4. சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் போராடினால் திமுக ஆட்சியில் ஊழியர்களுக்கு எதிரான ஆட்சி தற்போது அதே துப்புரவு பணியாளர்கள் விஜய் ஆட்சியில் இன்று போராடுகிறார்கள் எந்த ஊடகமும் அதைப்பற்றி எழுதவில்லை.
@beemji
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
இப்போ கடைசி 10 வருஷமாக குழந்தையிலே MMR , chickenpox vaccine வந்து விட்டது. ஸ்கூல் பசங்களுக்கு சரியான வயதில் பூஸ்டர் டோஸ் போட சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கு, அம்மை வந்தவர்களுக்கு தங்குவதற்கு மண்டபம் எல்லாம் கோமாளித்தனம்
விசிக MLA ஜோதிமணி சட்டப்பேரவைக்கு வர Car கேக்கலாம்..
ஆனா Ph.D படிக்க மலேசிய பல்கலைக்கழகம் சென்று, உலகளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் பயணித்து, பல்வேறு நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த மாநாடுகளில் கலந்துகொள்ளும் தமிழ்நாடு அரசின் Scholarship-க்கு தேர்ச்சிப் பெற்ற ஒரு தலித் மாணவரை எதற்காக Shoe, Laptop எல்லாம் வாங்கினார் என்று ஏளனமாக கேள்வி எழுப்பி, ஒரு தலித் மாணவரின் மாண்பை குலைக்க தவெகவினரும், தவெகவிடம் கொள்கையை அடியோடு அடகுவைத்த விசிகவினரும் தொடர்ந்து இவ்வளவு தரம்தாழ்ந்து செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசு உதவித்தொகை பெறும் ஒரு மாணவரிடம், விடுபட்ட ஆவணங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் Email வாயிலாகக் கேட்பதுதானே ஒரு முறையான நிர்வாகம்? மாணவர் தொடர்ந்து அனுப்பிய Mail-களுக்கு எந்தப் பதிலும் அளிக்காமல், ஊடகங்களில் அவர் தன் தவிப்பைக் குரலாக எழுப்பும்வரை மௌனம் சாதித்துவிட்டு, இப்போது அவர் தொடர்பான தனிப்பட்ட விவரங்களை ஒரு 'Press Release' மூலம் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?
இப்படி ஒரு விளிம்புநிலை மாணவரின் தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்துவது, இணையத்தில் வலம்வரும் Virtual Abusers-களுக்கும், Route Mafia-க்களுக்கும் Weapon Supply செய்வதற்காகவா?
பாதிக்கப்பட்ட தலித் மாணவருக்கு உதவ எதையும் செய்யாமல், வெறும் அமைச்சர் பதவிக்காக கொள்கையை விற்று கோட்டைக்குச் சென்ற 'முன்னாள் சமூகநீதிப் போராளி' @VanniTamizhVCK அவர்களுக்கும், விசிகவின் (தவெக பிரிவு) தலைவருக்கும் எமது வன்மையான கண்டனங்கள்.
"பில் அனுப்பலன்னு சொல்றது அப்பட்டமான பொய்!" - அமைச்சர் வன்னியரசுவின் முகத்திரையைக் கிழித்த தலித் மாணவர்!
மலேசியாவில் மனித மூளை மற்றும் நரம்பியல் குறித்து மிக முக்கியமான பிஎச்.டி ஆராய்ச்சி செய்து வரும் விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு, கடந்த 5 மாதங்களாக ஆராய்ச்சி நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது இந்த ரீல்ஸ் மோக தவெக அரசு.
பணமில்லாமல் அந்த மாணவர் வெளிநாட்டில் தவித்து வரும் நிலையில், அவருக்கு உதவ வேண்டிய சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு, "மாணவர் பில் சமர்ப்பிக்கவில்லை" என்று சமூக வலைதளங்களில் பச்சைப் பொய் ஒன்றைக் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 21 அன்றே அனைத்து பில்களையும் சமர்ப்பித்துவிட்டு, பலமுறை அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பியதோடு, அமைச்சருக்கும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு முறை அவசரக் கடிதம் அனுப்பியதாக அந்த மாணவர் ஆதாரங்களோடு அமைச்சரின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
தவறு செய்த அதிகாரிகளைத் தட்டிக்கேட்க வக்கற்ற ஒரு அமைச்சர், பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர் மீதே பழியைப் போட்டுத் தப்பிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
8 பட்டியலின அமைச்சர்கள் என்று வெற்று விளம்பரம் தேடும் முதலமைச்சர் விஜய், தலித் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் தனது அமைச்சரின் இந்த செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
தாங்கள் பதவியில் இருப்பதற்காக ஒரு தலித் மாணவரின் உழைப்பையும், கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் இந்த #SofaModel அரசின் நாடகங்களை மக்கள் மன்றம் நிச்சயம் தண்டிக்கும்.
என் குழந்தைப்பருவத்தில் ஆசிரியர்களான என் பெற்றோர்களின் அரசியலைக் கேட்டும் வாசித்தும் வளர்ந்தவள் நான்
18வயதில் மாணவர் சங்கத்தில் சேர்ந்து அரசியலை கூர்மைப்படுத்திக் கொண்டேன்
என் வாழ்நாளில் விஜயைப் போல மோசமான கார்ப்பரேட் கிரிமினல் அரசியல்வாதியை பார்த்ததே இல்லை
#கேவலமானஅரசியல்
நயினார் நாகேந்திரன் பேசியது தவறு என்றால்,
"எங்க அப்பாவை காணோம்" என்று நடிகன் பேசியது அதைவிட அயோக்கியத்தனமானது.
தன் தந்தையை பொதுவெளியில் நடிகன் நக்கல் செய்ததற்கு உதயநிதி வருத்தப்படமாட்டாரா?
அவர்களது குடும்பம் கவலைப்படாதா?
நடிகனுக்கு நக்கல் பண்ண முடியுமென்றால்
அந்த உரிமை நயினார் நாகேந்திரனுக்கும் உண்டு.
நடிகனைப் போல் கேடுகெட்ட உடல்மொழியில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவரும் பேசியதில்லை.
நயினார் பேசியதற்கு நடிகனின் குடும்பத்திற்கு இழுக்கு என்றெல்லாம் பில்டப் பண்ண தேவையில்லை. ஏனெனில் நடிகனும் குடும்பத்தோடு இல்லை.
சங்கீதாவை "அதெல்லாம் ஒர்த் இல்லை" என்று நடிகன் பேசியதும், தற்குறி கூட்டம் சங்கீதாவை கேவலமான வார்த்தைகளால் குதறி தள்ளியதும் சங்கீதா குடும்பம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்?
நடிகன் பேசியதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டு
நயினார் பேசியதற்கு கண்டனம் என்றால்,
கண்டிச்சுட்டு போ.
நயினார் பேசியது சரியே.
4 நாட்களுக்கு முன்பு BBC Tamil ஊடகம் மேதாது அணை சர்ச்சையாவதன் பின்னணி என்ன? எனும் பெயரில் 13 நிமிடங்கள் கொண்ட கள ஆய்வு வீடியோ ஒன்றை YouTube தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகவிலேயே மேகதாட் அணை கட்ட சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒரு செய்தியை அறிந்துகொள்ள முடிந்தது.
முக்கியமான ஒரு முயற்சி அவசியம் பார்க்கவும் லிங்க் முதல் கமெண்ட்டில் தருகிறேன்.
இந்த வீடியோவில் வினோதமான இன்னொரு தகவல் உள்ளது…
பற்றி எரியும் இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசு தரப்பின் முடிவை தெரிந்து கொள்ள BBC தொடர்பு கொண்ட போது, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி மற்றும் கர்நாடக நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கெளரவ் ஆகியோர் தங்களது மாநிலத்தின் தரப்பு முடிவையும் நியாயங்களையும் விளக்கி இருக்கிறார்கள்.
அதேபோல தமிழ்நாடு அரசு தரப்பின் முடிவை தெரிந்து கொள்ள BBC தொடர்பு கொள்ள முயன்று இருக்கிறார்கள். “தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர், செயலாளர்களுடைய அதிகாரப்பூர்வ கருத்துக்களை நேரடியாக நம்மால் கேட்டுப் பெற முடியவில்லை”என்று வீடியோவில் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
திமு கழக பொதுசெயலாளர் துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த காலங்களின் விவாதங்களையும் போராட்டங்களையும் உரிமைக்குரல்களையும் நினைத்துப்பார்க்கிறேன்.
எப்பேற்பட்ட கும்பலிடம் தமிழ்நாடு சிக்கி இருக்கிறது… கொடுமை 😰
கிறித்துவம் பற்றி நேற்று எழுதிய பதிவில் ஒரு இந்துத்துவர் வந்து 'அதை எழுதியதுடன் கூடவே, இந்து மதம் மட்டும்தான் சாத்வீகமான மதம் என்றும் ஒரு வரி எழுதி இருக்கலாம்,' என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
இந்து மதம் குறித்த முழுமையான தெளிவு இருப்பதால் அப்படிச் சொல்ல மனம் வரவில்லை. தலித் ஒடுக்குமுறைகள், சூத்திரர்களுக்கெதிரான கொடுமைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்று கடந்த 3,000 ஆண்டுகளாக இந்து மதம் அரங்கேற்றிய வன்முறைகள் ஏராளம். குறிப்பாக தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை என்பது வரலாறு காணாத குரூரம். அதற்கு இந்து மதத்தின், புனித நூல்களின் அங்கீகாரம் முழுமையாக இருந்திருக்கிறது. பகவத் கீதையிலேயே கிருஷ்ணர் தலித்துகளை அவலமான சொற்களில் வருணிக்கிறார். தலித் ஒடுக்குமுறை என்பது கறுப்பின அடிமை முறைமையை விட பன்மடங்கு மோசமானது என்பதைத்தான் என் புத்தகம் ஆதாரங்களுடன் பேசுகிறது. சூத்திரர்கள் எதிர்கொண்ட கொடுமைகள் பற்றிப் பேசுகிறது.
இன்றுமே பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பான்மையானவை இந்து மதத்தின் புனித நூல்களின் தாக்கத்தால் அரங்கேறுபவைதான். இன்றளவும் நிலவும் பிராமண உயர்வுவாதம் ஏற்படுத்தும் சமத்துவமின்மை குறித்துப் பேசுகிறது. அந்த உயர்வுவாத பிராமணர்கள் இந்துத்துவ இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை அதிகார மையத்தில் வைத்து தேசத்தின் செக்யூலர் கட்டமைப்பைக் குலைக்கிறார்கள்.
இந்த மதம் அமைதியைப் பேணும் மதம், அந்த மதம் அமைதியைப் பேணும் மதம் என்று பீற்றிக் கொள்வது பற்றி ரிக்கி ஜெர்வாய்ஸ் ஒன்று சொல்வார். ஒரு மதத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் நடத்தையைப் பார்த்தால் தெரிந்து விடும். 'Because the fundamentalists of the religion of peace will be extremely peaceful!' என்பார்.
ஒரு மதத்தின் அடிப்படையான போதனைகளை முழுமையாகப் பின்பற்ற முனைபவர்கள்தான் அடிப்படைவாதிகள் எனப்படுபவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைவாதிகள் ஆஃப்கானில், ஈரானில் இருக்கிறார்கள். இந்து மதத்தின் அடிப்படைவாதிகள் இந்து மகா சபா, பஜ்ரங் தளங்களில் இருக்கிறார்கள். கிறித்துவத்தின் அடிப்படைவாதிகள் அமெரிக்க பைபிள் பெல்ட் மாநிலங்களில், ஐரோப்பிய நியோ நாஜி இயக்கங்களில் இருக்கிறார்கள். யூத மதத்தின் அடிப்படைவாதிகள் இஸ்ரேலின் மதவாத ஜியோனிசக் கட்சி, யூத சக்தி போன்ற கட்சிகளில் இருக்கிறார்கள். இவர்கள்தான் தத்தமது மதங்களின் போதனைகளை முழுமையாகப் பின்பற்ற முயன்று கொண்டிருப்பவர்கள்!
இந்த லிஸ்டில் உள்ள எந்த மூஞ்சியிலாவது உங்களுக்கு 'சாத்வீகம்' தென்படுகிறதா?
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
அமுதனின் மரணம் — கேள்விகள் கேட்கத் துணிந்த ஒரு மாணவனின் உயிருக்கு யார் பொறுப்பு?
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விடுதிக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர், துறைத்தலைவர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோரிடம் தகவல் அளித்ததாகக் கூறப்படும் மூன்றாம் ஆண்டு மாணவர் அமுதன், 20-க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் மற்றும் போதைப் பொருள் தொடர்புடைய இளைஞர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதாக அவரது தந்தை ஊடகங்களிடம் கதறியிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இது வெறும் ஒரு மாணவனின் மரணம் அல்ல.
தவறைத் தட்டிக் கேட்ட ஒரு மாணவனுக்கு கிடைத்த தண்டனையா இந்த மரணம்?
கல்லூரி நிர்வாகத்திடம் மாணவன் அமுதன் அளித்த தகவல்கள் உண்மையில் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டனவா?
“உனக்கும் எனக்கும்தான் தெரியும். வெளியே யாருக்கும் தெரியாது. தைரியமாகப் போ” என்று கூறிவிட்டு, அந்த மாணவனிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசியவிடப்பட்டிருந்தால், அந்தத் தகவல் கசிவுக்கு பொறுப்பானவர்கள் மீது கொலைக் குற்றத்தைவிடக் குறையாத அளவுக்கு கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டாமா?
ஒரு மாணவன் உண்மையைச் சொன்னதற்காகவே உயிரிழக்க வேண்டிய நிலை என்றால், நாளை எந்த மாணவன் போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் கொடுக்கத் துணிவான்?
மாணவர்கள் கொடுக்கும் புகார்கள் ரகசியமாகக் காக்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். இல்லையெனில், கல்லூரிகளுக்குள் நடக்கும் போதைப் பொருள் விற்பனை, ராகிங், பாலியல் அத்துமீறல், வன்முறை என எந்தக் குற்றத்தையும் மாணவர்கள் வெளியில் சொல்ல அஞ்சுவார்கள்.
எனவே, இந்தச் சம்பவத்தில் கொலை செய்தவர்கள் மட்டுமல்ல — தகவல் எவ்வாறு கசிந்தது? யார் கசியவிட்டார்கள்? யாருடைய அலட்சியத்தால் ஒரு மாணவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது? என்பதும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, மாணவன் அமுதனிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
கல்லூரி வளாகத்துக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எப்படி நுழைந்தன?
யார் விற்றார்கள்?
யார் வாங்கினார்கள்?
யார் பாதுகாத்தார்கள்?
யார் தகவலை கசியவிட்டார்கள்?
யார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்க வேண்டும்.
உண்மையை வெளிக்கொண்டு வராமல், சம்பவத்தை வெறும் “கோஷ்டி மோதல்” என்று சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர் சொல்வது பொறுப்பற்ற அலட்சியம்.
ஒரு மாணவன் கொல்லப்பட்டிருக்கிறான்.
அவனது குடும்பம் கதறுகிறது.
கல்லூரி வளாகத்தில் போதைப் பொருள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால் பதில் — “கோஷ்டி மோதல்”!
இது தான் TVK அரசின் போதை ஒழிப்பு லட்சணமா?
இது தான் TVK அரசு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் லட்சணமா?
மாணவர்களின் உயிரைவிட முதல்வர் விஜய்க்கு அரசியலும், விளம்பரமும், சினிமா சந்திப்புகளும் முக்கியமா?
சினிமா நடிகர்களை சந்திப்பதிலும், புகைப்படம் எடுப்பதிலும் காட்டப்படும் ஆர்வத்தில் ஒரு பகுதியாவது, தமிழ்நாட்டின் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பதில் காட்டப்படுமா?
அமுதனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
உண்மையைச் சொன்ன மாணவன் கொல்லப்பட்டான் என்ற குற்றச்சாட்டு உண்மையானால், அந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து, குற்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அமுதனுக்கான நீதி என்பது ஒரு மாணவனுக்கான நீதி மட்டுமல்ல — நாளை உண்மையைப் பேசப் போகும் ஒவ்வொரு மாணவனுக்குமான பாதுகாப்பு.
#JusticeForAmuthan
#StopDrugsInColleges
#StudentsSafety
தமிழ் கா.அமுதரசன்
மாணவர் அணி- மாநில துணைச் செயலாளர்
திமுக
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
கடந்த மூன்று மாதங்களில் எத்தனை முறை டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் சுற்றிலந்துள்ளீர்கள் @vinothravi11 ?
இத்தனைக்கும் கும்பகோணம் உங்கள் தொகுதி, வேறு யாரை விடவும், குறுவையில், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வலி கூடுதலாக உங்களுக்கு தெரியவேண்டும்.
நிதிநிலை அறிக்கையை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்று வழிபடவில்லை என யார் உங்களிடம் அழுதார்கள்?
இதுதான் உங்கள் மதசார்பற்ற நிலையா முதல்வரே ?
@TVKVijayHQ@CMOTamilnadu
ஆட்சிக்கு வந்த பிறகு நல்ல பெயர் எடுப்பார் என்றார்கள். இவர் தமிழ்நாட்டு அரசு திட்டங்களின் நல்ல பெயர்களை எல்லாம் எடுக்கிறார்.
நான் முதல்வன், விடியல் பயணம், தாயுமானவர்....