தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசே
@CMOTamilnadu இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!
தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.
ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது. சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
“தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
எத்தனை பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுகிறது என்ற புள்ளிவிவரங்களை நீதிமன்றங்கள் வெளியிட முடியுமா?
மாட்டுக்கறியை இஸ்லாமியர்கள் மட்டும் தான் சாப்பிடுகிறார்கள் என்பதை நீதிமன்றத்தால் நிரூபிக்க முடியுமா?
ஆனால் மாட்டுக்கறியை தினந்தோறும் அல்லது வாரந்தோறும் அதிகமாக சாப்பிடும் பல லட்சம் ஹிந்து குடும்பங்களை எங்களால் காண்பிக்க முடியும்.
இதே போன்றதொரு உத்தரவை ஒவ்வொரு தீபாவளியன்றும் போடுமா நீதிமன்றம்?
தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவையில் ஒட்டு மொத்தமாக எட்டு தலித் பிரதிநிதிகள் என்பது வரலாற்றில் இல்லாத எண்ணிக்கை. இதை திராவிடர் கழகம் கி. வீரமணி, தலித் முரசு புனித பாண்டியன், சுப. வீரபாண்டியன் போன்றவர்கள் கூட கொண்டாட மறுக்கிறார்கள். இதையே திமுக செய்திருந்தால் வாயை மூடியே இருக்க மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, தமிழகமே வியக்கும் வண்ணம் எட்டு அமைச்சர்களும் எளிமையாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்ற வாழ்த்துகள். CM விஜய் செய்தது tokenism இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.
இந்தியாவில்
பெண்களின் ஒழுக்கமும்
முஸ்லிம்களின் நாட்டுப்பற்றும்
தலித்துகளின் திறமையும்
கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
தலித் அமைச்சர்கள் தடம் புரள மாட்டார்களா என்று காத்திருப்பவர்களை காலம் முழுவதும் காத்திருக்க வையுங்கள். All the best 👍
@CMOTamilnadu@TVKVijayHQ
ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டது தான், திருமா கூட்டணியை விட்டு வெளியே சென்ற அடுத்த நொடியே திமுக தன்னோட சாதிவெறி முகத்தை வெளிப்படுத்தும்.
பல சாதிவெறியர்கள் சமூகநீதி முகமூடி அணிந்து இருப்பது தான் திமுக
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்: “நன்றி உணர்வு” அல்ல, “அதிகாரத்தில் பங்கு” தான் முக்கியம்
“ஜெய் பீம்” என்பது ஒரு சாதாரண கோஷமல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று நினைவு, சமூக எதிர்ப்பு, அரசியல் தன்னம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடு. அந்த முழக்கத்தின் பின்னால் இருக்கும் பீமா கொரேகான் வரலாறு இந்திய சமூக அமைப்பின் ஆழமான முரண்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது.
1818 ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் போரில், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய மஹர் சமூகத்தினர், மராட்டிய சித்பவன் பார்ப்பன பேஷ்வா ஆட்சிக்கு எதிராக போராடினர். இதை சிலர் “வெளிநாட்டு ஆட்சிக்கு ஆதரவு” என்று மட்டும் பார்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இந்த நிகழ்வின் அர்த்தம் வேறுபட்டது.
அந்த காலத்தில் பேஷ்வா ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மனிதர்களாக கூட மதிக்கப்படவில்லை. சமூக அவமதிப்பு, பொருளாதார சுரண்டல், கல்வி மறுப்பு, கலாச்சார ஒடுக்குமுறை போன்றவை அவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தன. இப்படிப்பட்ட சூழலில், அந்த ஆதிக்க அமைப்பை பலவீனப்படுத்திய எந்த சக்தியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாய்ப்பாகவே தோன்றியது.
இதன் மூலம் ஒரு முக்கியமான அரசியல் உண்மை வெளிப்படுகிறது: ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் என்பது “நன்றி உணர்வின் அரசியல்” அல்ல; அது “வாழ்வாதாரத்தின் அரசியல்”. தங்களை நூற்றாண்டுகளாக மனித மரியாதையின்றி வாழ வைத்த சமூக அமைப்புக்கு அவர்கள் எதற்காக நிரந்தர விசுவாசம் காட்ட வேண்டும்?
இதையே தற்போதைய அரசியல் சூழலிலும் பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் மாநிலங்களிலும் ஆளும் வர்க்கங்கள் மாறினாலும், சமூக மற்றும் பொருளாதார அதிகாரம் சில வர்க்கங்களிடமே குவிந்திருக்கிறது என்ற உணர்வு இன்னும் பல ஒடுக்கப்பட்ட மக்களிடையே நிலவுகிறது. அதனால் அவர்கள் எந்தக் கட்சியுடன் இணைய வேண்டும் என்பது கொள்கை சார்ந்த தூய்மையால் மட்டுமல்ல; தங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம், அதிகாரத்தில் பங்கு, சமூக பாதுகாப்பு, வளர்ச்சி வாய்ப்பு கிடைக்கிறதா என்பதாலும் தீர்மானிக்கப்படுகிறது.
இதனால் தான், “யார் எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு தருகிறார்களோ அவர்களுடன் நாங்கள் இருப்போம்” என்ற மனநிலை உருவாகிறது. இது வாய்ப்புவாதம் அல்ல; நீண்டகால ஒதுக்கப்பட்ட வரலாற்றின் விளைவு. அரசியலில் பங்கேற்பு இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பதைக் கற்ற அனுபவ அரசியல் இது.
மேடைகளில் சமூகநீதி பேசுவது எளிது. ஆனால் அமைச்சரவை, கொள்கை முடிவெடுக்கும் இடங்கள் போன்ற அதிகார மையங்களில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உண்மையான இடம் வழங்கப்படுகிறதா என்பது முக்கியமான அளவுகோல்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை புரிந்துகொள்ள, அவர்களின் வரலாற்று அனுபவத்தை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக சமூக ஒதுக்கல், அவமதிப்பு, வன்முறை, மறுப்பு ஆகியவற்றை எதிர்கொண்ட மக்களிடம் “நன்றி உணர்வு” கேட்பதற்கு முன், இந்த சமூகம் அவர்களுக்கு என்ன கொடுத்தது என்பதையும் கேட்க வேண்டியது அவசியம்.
எங்கிருந்தோ வந்த பிரிட்டிஷ் ராணுவம் மராட்டா சித்பவன் பிராமனர்களை வீழ்த்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையாக இருந்தது.
அதே போல பிரிட்டிஷ் ராணுவம் ஒடுக்கப்பட்ட மக்களை கை விட்ட போது அவர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் அவர்கள்தான்.
தற்போது வரை இந்திய, மாநில ஆளும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களை சமூக, பொருளாதார, கலாச்சார ரீதியாக சுரண்டியே வருகிறார்கள்..
இந்த ஆளும் வர்க்கத்தினை வீழ்த்த யார் வந்தாலும் அவர்களோடு ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்வார்கள்.
எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் யாருக்கும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை..
பாஜகவோ, தவெகவோ யார் எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுத்தாலும் நாங்கள் வாங்கி கொள்வோம்.. எங்களுக்கு அவி பாகம் எங்கிருந்து கிடைக்குமா அங்கிருந்து வாங்கி கொள்வோம்.
ஏனெனில் நாங்கள் இந்த சமூகத்தால் கை விடப்பட்டவர்கள்.
எங்களை ஏமாற்றினால் எங்களுக்கு கவலை இல்லை சுமார் ஈராயிரம் ஆண்டு இதே தான் நிலைமை.
பாஜகவோ, தவெகவோ ஏமாற்றினால் அவர்களின் தோல்வியும் எங்களால்தான்.
திக,திமுக,எறா மீச மற்றும் உள்ள அனைத்து முற்போக்கு முண்டங்களும் தவெக வில் தலித்துக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை பேச அருகதை அற்றவர்கள்.
#TVK #Ministry #TVKVijayHQ #dmk
விடுதலை சிறுத்தைகளை நோக்கி நன்றி கெட்டவர்கள், துரோகிகள் என்று திமுக இணையதள வாசிகள் எழுதுகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால் தான் 69 சதவீதம் தலித் வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆனால் தலித் மக்கள் மீது ஜாதிய வன்கொடுமைகளும், ஜாதிய படுகொலைகளும் நிகழும் போது ஜாதிய சக்திகளுக்கு ஆதரவாக இருந்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால்தான் திமுகவுக்கு 43 சதவீதம் தலித்துகளின் வாக்குகள் கிடைத்திருக்கிறது.
தலித்துகளின் வாக்கைப் பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தலித்துகளுக்கு துரோகம் செய்த திமுக மீண்டும் விடுதலை சிறுத்தைகளின் துணையோடு தலித்துகளின் வாக்கை பெற்று தற்போது 59 இடம் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
நன்றி கெட்டவர்கள், துரோகிகள் என்ற பெயர் திமுகவுக்கு பொருத்தமாக இருக்குமா? விடுதலை சிறுத்தைகளுக்கு பொருத்தமாக இருக்குமா ?
- முருகன் கண்ணா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. து. ரவிக்குமார், பொதுச் செயலாளர்
திரு. எம். சிந்தனைச்செல்வன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
தேர்தல் முடிவுகள்:
------------------
சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மைக்கான அறப்போர் மாபெரும் வெற்றி!
விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ்மக்களுக்கு மனமார்ந்த நன்றி!
-----------------------------
சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான அளவில் வெற்றிகளை வழங்கியுள்ள மக்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கு காட்டுமன்னார்குடி மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு இடங்களில் வெற்றியையும் எஞ்சிய ஆறு தொகுதிகளில் கணிசமான வாக்குகளையும் அளித்துள்ள வாக்காளர்களுக்கும் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் யாவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
காட்டுமன்னார்குடி தொகுதியில்
33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின் தாய்மடி' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அத்தொகுதிவாழ் பொதுமக்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.
ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெக'வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை.
இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதேபோல 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினர் அனைவருமே தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக தற்போது 19 இடங்களை இழந்து நிற்கிறது. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து நின்றதற்காக மக்கள் அளித்துள்ள படிப்பினை ஆகும். அதிமுக தலைமையிலான பாஜக அணியின் இந்த வீழ்ச்சி, எமது முயற்சியால் விளைந்தததேயாகும்.
இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெக'வை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக,அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது. அதாவது, திமுக அணிக்கும் தவெகவுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை யாவும் அதிமுக தலைமையிலான சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் வலதுசாரி அரசியலுக்குத் துணைபோகும் கும்பலுக்கும் இடமில்லை என்பதை மிகவும் வலுவாக மீள்உறுதி செய்துள்ளது.
(1/2)
(2/2)
எனவே, திமுக தலைமையிலான எமது கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான அறப்போரில் யாம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். பாஜகவின் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது. வலதுசாரி அரசியலின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. இனி எக்காலத்திலும் இம்மண்ணில் சங் பரிவார்கள் வாலாட்ட இயலாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாதியவாத, மதவாத, இனவாத கும்பலின் பிற்போக்குத்தனமான திரிபுவாத அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதுவும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய நுட்பமான அரசியலை இத்தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ள வாக்காளப் பொதுமக்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் மனம்நிறைந்த நன்றியையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
(2/2)
புதுச்சேரி மாநிலத்தில் தனித்துப் போட்டி!
----------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான -கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றோம்.
தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிக'வுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேடபு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிக'வுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் .
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 21 வயதிற்குட்பட்டவர்கள்.
நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவ வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன.
1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகளால் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும்.
சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று
காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் @thirumaofficial அவர்கள் தெரிவித்துள்ளார்,
இதை கவனத்தில் கொண்டு
தமிழக அரசு @CMOTamilnadu
உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!! @Neelam_Culture@mkstalin@tnpoliceoffl