முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீ நுண்மி நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அறிந்து கவலை அடைந்தேன். விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். தவிர்க்க முடியாதவற்றைத் தவிர மற்றச் சுற்றுப் பயணங்களை தள்ளி வைத்து விட்டு முழுமையாக ஓய்வெடுக்க வேண்டுகிறேன்.
@mkstalin
பேரறிவாளனுக்கு பிணை - நீதியானதும் முன்மாதிரியானதுமான தீர்ப்பு! உச்ச நீதிமன்ற ஆணையை வரவேற்கிறேன். மற்றுமுள்ள ஆறு பேர்களுக்கும் உடனடியாக அதே நீதி கிடைக்க ஆவன செய்து உதவுமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.
இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அங்கு வாய்ப்பின்றி தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்க்கும் உண்மையை உணராமல் தமிழக மாணவர்கள் இந்தி படித்தால் பிற மாநிலங்களில் வேலை கிடைக்கும் என்று ஆளுநரும், தலைமை நீதிபதியும் கூறுவது தமிழக மாணவர்களுக்குத் தவறான வழிகாட்டுதலாக அமையும
நீதிநாயகம் சந்துரு அவர்களுக்கு அறிஞர் அம்பேத்கர் விருதினை தமிழக அரசு வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கவும், நிலை நிறுத்துவதுமான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
தொன்றுதொட்டு சாதி, மத வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது பொங்கல் பெருவிழாவாகும். இந்நன்னாளில் உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா இலங்கையின் நட்பு நாடாக இருக்கும் போது யாருக்கு எதிராக இந்த இராணுவ உதவிகளை இந்தியா இலங்கைக்கு அளிக்கிறது? சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இலங்கை தொடர்ந்து நீடித்து வரும்போது இத்தகைய உதவிகளை இந்திய அரசு அளிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். (5/5)
இந்தியாவுக்கு மிக அருகில் சீன அபாயத்தைக் கொண்டு வந்தவர் இராசபக்சே ஆவார். மேலும் இந்தியாவில் பயிற்சி பெறும் வெளிநாட்டு வீரர்களில் 50% இடங்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு அளிக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது. (4/5)
வங்கக் கடலிலும் இந்து மாக்கடலிலும் பெருகி வரும் சீன அபாயத்தைத் தடுப்பற்காகவே இந்த உதவி அளிக்கப்படுவதாக கூறியிருப்பது கேலிக் கூத்தாகும். இலங்கையில் அம்பன்தொட்டா துறைமுகம் கட்டுவதற்கும் கடற்படைத் தளம் அமைப்பதற்கும் சீனாவுக்கு இடம் கொடுத்ததின் மூலம் (3/5)
இலங்கை இராணுவத்தை நவீன மயப்படுத்த 500 இலட்சம் டாலர் உதவியை இந்திய அரசு வழங்கும் என தலைமையமைச்சர் மோடி – இலங்கை தலைமையமைச்சர் இராசபக்சே நடத்தியப் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (2/5)