திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
பொதுவெளியில் அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது.
அதை மறைப்பதற்காக அவர் தொடர்ந்து சொல்லி வரும் கருத்துகள், வடிகட்டிய பொய்கள் என்பதும் தெளிவாகிறது.
எனவே அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
#DismissPowderMinister
🖤❤️ இதுதான் திமுக... ❤️🖤
ஒரு அழைப்பு இல்லை...
ஒரு கட்டளை இல்லை...
ஒரு செலவும் கழகத்திலிருந்து இல்லை...
ஆனால்...
ஆயிரம் இதயங்கள் தானாக இணைகின்றன.
நூற்றுக்கணக்கான கைகள் தானாக உழைக்கின்றன.
இலட்சக்கணக்கான மனங்களில்
திராவிட சிந்தனை மீண்டும் மலர்கிறது.
பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல...
புகழ் பெற வேண்டும் என்பதற்காக அல்ல...
"கலைஞர் விதைத்த விதை காய்ந்து விடக்கூடாது..."
"அண்ணா காட்டிய பாதை மறைந்து விடக்கூடாது..."
"தலைவர் ஸ்டாலின் கட்டியெழுப்பும் தமிழ்நாடு மேலும் உயர வேண்டும்..."
என்ற ஒரே உணர்வுக்காக...
சொந்த பணம் செலவழித்து,
சொந்த நேரத்தை அர்ப்பணித்து,
சொந்த குடும்ப நேரத்தைக்கூட தியாகம் செய்து
மக்களிடம் செல்கிறார்கள்.
இதை பார்த்து கழகம் சொல்வது ஒன்றே...
"நன்றி!"
மக்கள் சொல்வது ஒன்றே...
"இந்த இயக்கம் எங்கள் குடும்பம்!"
அரசியலில் வெற்றியை வாங்க முடியும்...
அன்பை வாங்க முடியாது.
அந்த அன்பை 75 ஆண்டுகளாக சம்பாதித்த இயக்கம்...
இதுதான் திமுக! 🖤❤️
#DMK #DravidianModel #DravidianMovement #IdhuthanDMK #TamilNadu #GenZDMKMeet #GenYZDMKMeet #GenXDMKMeet #4DForum @mkstalin
'உலகத்திலேயே காரில் சென்று மாரத்தான் முடித்த முதல் முதலமைச்சர் விஜய்தான்'
போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் கில்லி சரத் பதவி விலகக் கோரி போரட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவினர் வெளியிட்ட வீடியோ
💥#தவெக ஆட்சிக்கு மதிப்பெண் போடக்கூடிய அளவுக்கு இன்னும் அவர்களின் பணிகள் தொடங்கவில்லை என சொன்னதுடன் காரணங்களை பட்டியலிட்ட @ThamimunansariM
MLA அவர்கள் 🔥 🔥
📌 3 வயது குழந்தை முதல் 93 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு சிலர் கொ**லையும் செய்யபட்டுள்ளனர்
📌 130 க்கும் அதிகமான கொ**லைகள் நடந்துள்ளது
💥6 மாதம் கால அவகாசம் நலத்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தான்
சட்டம் ஒழுங்குக்கு இல்லை
முதல்வர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணாவுக்கு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி (Special Representative of Tamil Nadu in New Delhi) வழங்கப்பட்டுள்ளது, இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.
இந்தப் பதவி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவதாகும்.
( இந்த பதவி அமைச்சர் பதவிக்கு இணையானது)
#WATCH | தி.மு.க-வினர் சாலை மறியல்!
சென்னை, புரசைவாக்கம் பகுதியில் த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலகக்கோரி தி.மு.க மாணவரணி சார்பில் நடந்து வரும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மாணவரணிச் செயலாளர் வீரமணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“மாத்திரை தயார்.. அமைச்சர் மாத்திரையை பொடியாக்க தயாரா, தூய சக்தியா.. போதை சக்தியா” போன்ற முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#DMKProtest | #Sekarbabu | #Sarathkumar | #TVKFailed | #KalaignarSeithigal
இவரு யாருன்னு தெரியுதா ?
#DummyCM Assembly உள்ள பட்டா கத்தி ஆக்ஷன் பண்ணிட்டு இருந்தப்ப,
பின்னாடி சைனா மீசை வச்சிட்டு பயங்கரமா சிரிச்சிட்டு இருந்த ஆசாமி ,
என்ன சொல்றார் பாருங்க ,
மக்கள் பெரிய ஊழல்வாதிகள் என Style ஆக சொல்றார் ,
அதாவது ,
மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கிட்டாங்களாம் ,
வாங்கிட்டு வேற எங்கயோ குத்தினாங்களாம்..
எப்படி ..
ஓட்டு போட்ட
மக்களுக்கு எவ்வளவு மரியாதை பாருங்க ?
நம்ம கேள்வி ,
1.Ambulance மாதிரி
அந்த "108" தொகுதியில் மட்டும் எப்படி மக்கள் அப்படி குத்தினாங்க ?
2.மீதி 126 தொகுதி மக்களும் இவருக்கு ஊழல்வாதி இல்லை போல ,
3. Sofaவுக்கு ஓட்டு போட்ட எல்லா மக்களும் ஊழல்வாதிகள் என்றால் ,
தமிழ்நாட்டு மக்கள் 1,72,00,000 பேர் ஊழல் செய்து இருக்காங்க ,
4. அப்படியானால் 31% மக்கள் ஊழல் செய்ததா ஒரு (சைனா மீசை) அமைச்சர் சொல்றாரு ,
இது மக்களை இழிவு படுத்தவா ?
இல்ல ..
இவர்களுக்கு ஓட்டு போட்ட
வாக்காளர்களை அசிங்கப்படுத்தவா ?
இனியும் பேசுவார்கள் .,
இன்னமும் பேசுவார்கள் .
இதெல்லாம் .,
கேட்க நல்லா இருக்கு இல்ல
🤦🤦🤦
கொள்கைக்காக தி.மு.க-வில் இணைந்துள்ளீர்கள்!
ஒரு தேர்தல் முடிந்தால் வெற்றி பெற்ற இயக்கத்தை நோக்கி, ஆளுங்கட்சியை நோக்கி செல்வார்கள். ஆனால், நீங்கள் பதவிக்காக அல்ல, பொறுப்புக்காக அல்ல, கொள்கை உணர்வோடு எதிர்க்கட்சியான தி.மு.க-வில் இணைந்துள்ளீர்கள். இது பாராட்டுகுரிய செயல்.
- மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#MKStalin #DMK #Chennai #DMKMembers #Tamilnadu #KalaignarSeithigal
#WATCH | “இதே ஒரு சாதாரண மனிதன் இதை பண்ணிருந்தா முதல்ல கைது பண்ணிட்டுதான் விசாரணையே தொடங்கி இருப்பாங்க”
போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சரண்யா பேட்டி
#SunNews | #TVKVijay | #DMKProtest | #GhilliSarath
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
#GenZ திமுகவினரைக் குறி வைத்து சோதனைகள்; கைதுகள் ஆளுங்கட்சியின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்துவோம்!
தஞ்சை மாவட்டக் கழக முன்னாள் இளைஞர் அணி நிர்வாகி டி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பேச்சு :
தஞ்சை மாவட்டத்தின் இளைஞர் அணி துணை அமைப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணன் ராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி முத்து, சகோதரி பிரியதர்சினி இணையருடைய திருமணத்தை உங்களின் முன்னிலையில் நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திருவோணம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக வருகை தந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் எனக்குக் காலையிலிருந்து மிகச் சிறப்பான ஏற்பாடுகளை, வரவேற்பை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. ஆனால், இங்கு இருக்கக்கூடிய உடன்பிறப்புகள் உங்களின் எழுச்சியை, உற்சாகத்தை பார்க்கும்பொழுது, ஆளுங்கட்சியாக இருக்கும்போது எவ்வளவு எழுச்சியாக இருந்தோமோ, எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதைவிட இன்னும் வேகமாக நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்.
அண்ணன் ராஜேந்திரன் அவர்களைப் பற்றி உங்களிடத்தில் நான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்தவர்தான். அவரைப் பற்றி ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1979-ஆம் ஆண்டே தன்னைக் கழகத்தோடு இணைத்துக்கொண்டவர்தான் அண்ணன் ராஜேந்திரன் அவர்கள். இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கென்ன கூடுதல் பெருமை என்றால், அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் இளைஞர் அணியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டவர், ஆளாக்கப்பட்டவர். எனவே, எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன்.
அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளராக, பிறகு மாவட்ட இளைஞர் அணியின் துணை அமைப்பாளர் என்று பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டத்திலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கக் கூடியவர்தான் அண்ணன் திரு ராஜேந்திரன் அவர்கள்.1990–ஆம் ஆண்டு நம் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில்தான் அண்ணன் ராஜேந்திரன் அவர்களின் திருமணம் நடந்தது. இன்றைக்கு அண்ணனுடைய மகன் திருமணத்தை நான் நடத்தி வைக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
சோஃபா மாடல் கொடுமைகள்
இன்றைக்கு இந்த புதிய ஆட்சி, சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு நாடு என்ன நிலைமையில் இருக்கிறது என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக, சட்டமன்ற நிகழ்வுகளை இன்றைக்கு அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆளுங்கட்சி வரிசையில் இருக்கக்கூடியவர்கள் அடிக்கின்ற கூத்துகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும் நேரலையில், நேரிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த கொடுமைகள் எல்லாம் நேரில் பார்க்கின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
தேசிய கீதம் இரண்டு முறை பாடுகிறீர்களே, தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் ஏன் ஒரு முறைதான் பாடுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு முதலமைச்சரிடமிருந்து பதில் கிடையாது. இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்கள் எல்லாம் அவைக்குள் வந்த உடனே, எதிரில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் பார்த்து வணக்கம் வைப்பார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் அவைக்குள் வந்த உடனே, எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா இருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முதல் வேலையாக வைத்திருக்கிறார். அதனால், எங்களுக்கெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த அவைக்குள் நாங்கள் நுழைந்த உடனே, இது என்ன சட்டமன்றமா, இல்லை சினிமா திரையரங்கமா, இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டா என்று கேட்கும் அளவுக்கு இன்றைக்கு சட்டமன்றத்தை ஆளுங்கட்சியினர் மாற்றி வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து தன்னுடைய நடிப்புத் திறனை ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டு இருக்கிறார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஆள்கிறார்!
அதுமட்டுமல்ல, அவைக்குள் கதை சொல்கிறேன் என்று எதை எதையோ உளறிக்கொண்டு இருக்கிறார். நம் தலைவரை அவர் தேடிக்கொண்டு இருக்கிறாராம். நம் தலைவர் என்றைக்குமே தேடிக் கண்டுபிடிக்கிற இடத்தில் இருந்தவர் இல்லை. எப்பொழுதுமே மக்களோடு மக்களாக இருந்தவர்தான், இன்றைக்கும் இருப்பவர்தான் நம் தலைவர். மக்களின் இதயத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் இருக்கிறார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தில்லாக, தெம்பாகப் போய் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி சொன்னவர் நம் தலைவர் அவர்கள் என்பதை இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்கள் மறந்துவிட்டார். ஆனால், பெரம்பூர் தொகுதியில் இவர் வெற்றி பெற்றாரே, இதுவரைக்கும் ஒரு முறையாவது சென்று மக்களுக்கு நன்றி சொன்னாரா என்று பார்த்தீர்கள் என்றால், நிச்சயம் கிடையாது.
மிசா காலத்தில் காவல்துறை தேடியபோது தானாக சென்று கைதானவர் நம் தலைவர் அவர்கள். நம் தலைவருடைய பெயரை எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இப்படிப் பல்வேறு திட்டங்களில் நம் தலைவர் அவர்கள் இருக்கிறார். இந்தத் திட்டங்களைத் தவிர்க்க முடியாமல், நிறுத்த முடியாமல் இந்த சோஃபா மாடல் அரசு இன்றைக்குத் தவித்துக்கொண்டு, திணறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டங்களில் கை வைக்க வேண்டும் என்று நினைத்தபோது இந்த அரசுக்கு நிச்சயம் ஒரு பயம் வந்திருக்கும். அந்தப் பயம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது நம் தலைவர்தான், திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான். ஆகவே, இந்த குரளி வித்தை காட்டுகிற வேலையை நிறுத்தி வைத்துவிட்டு முதலமைச்சர் அவர்களும் இந்த அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணமா?
இவர்களின் ஆட்சியில் இன்றைக்கு மக்கள் மின்சாரம் எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நன்றாக இருந்த சட்டம் ஒழுங்கு எங்கே போயிற்று என்று மக்கள் இன்றைக்குத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களாக நம் தலைவர் ஆட்சியில் சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையை நம் தலைவர் அவர்கள் திறந்து விட்டார்கள். ஆனால், இந்த ஆட்சியில் அது நடந்திருக்கிறதா என்று பார்த்தீர்கள் என்றால், இல்லை. எனவே, தண்ணீர் எங்கே என்று இன்றைக்கு மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி என்று ஒன்று நடந்தது அல்லவா, அது இப்போது எங்கே என்று இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் தேட ஆரம்பித்துள்ளார்கள். அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒருவர் ஆளுங்கட்சியில் சேரப்போவதாகத் தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் ஊழல் சக்தியாக இருந்த அவர், இனிமேல் தூய சக்தி ஆகிவிடுவார். இதுதான் இந்த அரசினுடைய ஊழல் ஒழிப்பு லட்சணம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்குப் பார்த்தீர்கள் என்றால், தொடர்ந்து திமுகவினரைக் குறிவைத்து, அதுவும் ஜென்சி திமுகவினரைக் குறி வைத்துப் பல சோதனைகள் நடத்துகிறார்கள், கைது நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் முறியடிக்க வேண்டியது நம் கடமை. இந்த ஆட்சியாளருடைய அநியாயங்களை உடன்பிறப்புகளாக நாம் ஒன்றாக இருந்து தோலுரித்துக் காட்ட வேண்டும். இந்த அரசினுடைய மக்கள் விரோத செயல்பாடுகளைத் தொடர்ந்து நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு கழக உடன்பிறப்புகள் நீங்கள் அத்தனை பேரும் தீவிரமாகக் களமாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் மணமக்கள் இரண்டு பேருக்கும் என்னுடைய அறிவுரை என்னவென்றால், இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து, அதே நேரத்தில் சுயமரியாதையோடு சிறந்த நண்பர்களாக இருவரும் உங்களின் திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உங்களுக்குப் பிறக்க இருக்கக்கூடிய குழந்தை அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு அழகான தமிழ்ப் பெயரை நீங்கள் சூட்ட வேண்டும் என்று உங்கள் அத்தனை பேர் சார்பாகக் கேட்டுக்கொண்டு, மணமக்களுக்கு மீண்டும் உங்கள் அத்தனை பேர் சார்பாக என்னுடைய வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
பதில் சொல்ல தெரிஞ்சா தானே சொல்ல முடியும்.
தற்குறி முட்டாளுக்கு அவன் அப்பன் மாதிரி என்று நினைத்துக் கொண்டான்.
தற்குறி போகும் இடமெல்லாம் அந்த அப்பா போட்ட பாதையில்தான் தற்குறி பயணம் செய்யவேண்டும் ..
உனக்கு மாற்று பாதை கிடையாது.
ஸ்டாலின் அப்பாவை நீ தேட வேண்டிய அவசியம் இல்லை