தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances.
No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states.
-₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934
-Interest payments at 22.8% of total revenue receipts.
-State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26.
-Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore.
-Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more.
The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue!
The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நிதிநிலைமை காரணம் கூறி, ஆசிரியப் பெருமக்களைப் பணிநீக்கம் செய்துள்ள திமுக அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 153 ல், பத்து ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகப் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களைப் பணிநீக்கம் செய்து, பெரிய துரோகம் செய்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே, சுமார் 45.44% ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது, கடந்த டிசம்பர் மாதம் வெளியான செய்திகளில் தெரியவந்தது. இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது திமுக அரசு.
கடந்த 2024 - 2025 ஆண்டில் மட்டும், சுமார் 110 கோடி, விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது திமுக அரசு. இந்த ஆண்டு, ஊரக உள்ளாட்சித்துறைக்கு மட்டுமே, ₹500 கோடி, விளம்பரச் செலவுக்கு ஒதுக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே பல நூறு கோடி செலவு செய்து வரும் திமுக அரசுக்கு, ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவோ, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவோ நிதி இல்லை என்றால், இந்த கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு @mkstalin எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?
உடனடியாக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கும் பணி வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மீனவர்கள் முதல் தென்னை விவசாயிகள் வரை, மத்திய பட்ஜெட் 2026 ல் கொட்டிக்கிடக்கும் தமிழகத்திற்கான நலத்திட்டங்களை ஆதாரங்களுடன் அடுக்கி, நாடாளுமன்றத்திலேயே திமுக எம்.பி @PWilsonDMK -யின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களின் நெத்தியடிப் பதில்!
தமிழ்நாடு மாணவர்களின் ஆற்றலும், ஆர்வமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்கிற பிரதமர் திரு.@narendramodi அவர்களின் வார்த்தைகள், நம் மாணவர்களின் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் ஆகும்!
இன்றைய தினம் மாலை பழனியில், பழனி பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி @BJP4TamilNadu சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது என்பதை வலுவாக உணர்த்தியிருக்கிறது.
கோவில் நகரமாக இருக்கவேண்டிய பழனி பகுதி குப்பை நகரமாக மாறியிருக்கிறது. ரூ.1,500 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டுள்ள பழனி கோயிலை பராமரிக்க இந்த கையாலாகாத திமுக அரசு எதுவும் செய்யவில்லை. திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அமைச்சர்களான திரு. ஐ.பெரியசாமி அவர்களும், திரு. சக்கரபாணி அவர்களும் மக்கள் குறைகளுக்காக இதுவரை குரல் கொடுத்திருக்கிறார்களா? திமுகவின் அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்ய பதவியை பெறவில்லை. எப்படி கொள்ளையடிப்பது என்றே நினைக்கிறார்கள்.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முருகன் மாநாட்டில், ரூ.50 கோடி ஒதுக்கி 143 முருகன் கோயில்களை சீரமைப்போம் என்றார்கள். இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கோயில்களில் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக. ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகள், ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.82 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். இப்படிபட்ட மோசடி ஆட்சிக்கு தமிழக மக்கள் மீண்டும் வாய்ப்பு தரப்போவது இல்லை. ஆனால், இந்த போராட்டம் ஆளும் திமுக அரசுக்கு ஒரு அபாய மணியாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போராட்டத்திற்கு பிறகு, திமுக அரசு நிச்சயம் பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படி இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்.
இந்நிகழ்வில், @BJP4TamilNadu மாநில செயற்குழு உறுப்பினரும், பழனி சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான திரு. @Palanikanagaraj அவர்கள், மாவட்ட தலைவர் திரு. P. ஜெயராமன் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். (1/2)
பல லட்சம் தமிழக இளைஞர்கள், அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் தங்களை அர்ப்பணித்து, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, திமுக அமைச்சர்கள், அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் துறையில் பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர்.
முன்னாள் சாராய அமைச்சர், இது போன்று, அரசுப் பணி நியமனத்துக்கு பணம் வாங்கியதால்தான், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பதையும், அமைச்சர் பதவியை இழந்தார் என்பதையும், திமுக அமைச்சர்கள் மறந்து விட்டார்களா அல்லது, வந்த வரை லாபம் என்று வாரிச் சுருட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் திரு @mkstalin, தனது அமைச்சர்கள், அரசுப் பணி நியமனத்துக்காக பணம் வசூலிப்பது தெரியாத அளவுக்குப் பொறுப்பற்ற முதலமைச்சராக இருக்கிறாரா அல்லது அவருக்குத் தெரிந்தேதான் இவை எல்லாம் நடைபெறுகின்றனவா?
நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திமுக அமைச்சர் திரு. பெரியகருப்பன், தனது பொறுப்பை உணர்ந்து நேர்முகத்தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை டூ சூரத் பயண நேரத்தை 45% குறைத்து, மேம்பட்ட உள்கட்டமைப்புடன் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வித்திடும் மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.
தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளார்.
The people of Tamil Nadu are fed up with rampant corruption and the breach of promises by the DMK government. The 'Tamilagam Thalai Nimira Tamilanin Payanam' march has accomplished its journey across the state, connecting with lakhs of people. On the occasion of the concluding ceremony today, will address energetic karyakartas at a public rally in Pudukkottai, Tamil Nadu.