மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்த மின்துறை அமைச்சருக்கு திமுக முன்னாள் அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்கள்
இன்று தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் எங்களின் கழக தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மின்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டார்.
கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளன. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி , 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37% , 3.5% , 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ. 56,000 கோடி. அதற்கடுத்து ரூ58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ 1,48,77, 856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது. வருவாய் பற்றாக்குறை ரூ 34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000
வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார். அதையும் வெளிப்படையாக மக்கள் முன் கூறி இருக்க வேண்டும் ஆனால் அதை தவெக அரசு மறைத்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டி க்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர் படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. அதேபோல பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்றிருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மின் தேவை என்பது 94,947 மில்லியன் யுனிட் அதுவே 2020-21 இல் 93,344 , 2021-22 இல் 98,674 மில்லியன் யுனிட், 2022-23 இல் 1,03,546 மில்லியன் யுனிட், 2023-24 இல் 1,11,504 மில்லியன் யுனிட், 2024-25 இல் 1,16,813 மில்லியன் யுனிட் ஆக 94,947 மில்லியன் யுனிட் லிருந்து 1,16,813 மில்லியன் யுனிட் ஆக மின் தேவை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 25,000 மில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும் , உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது இதனை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும்.
அதேபோல இந்த வெள்ளை அறிக்கையில் திமுக வின் திட்டங்களையே பட்டியலிட்டுள்ளனர்.
2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதை கூறாமல் மறைத்துள்ளனர்
அதே போல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு. நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ் நாள் 16 ஆண்டுகள் தான். அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம். ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். தரமான பொருளுக்கும் டூப்ளிகேட் பொருளுக்குமான விலை வேறு வேறு ஆக தான் இருக்கும். நாம் தரமான மின் மாற்றியை வாங்குகி உள்ளோம். அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளை குறைக்காமல் , நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.
அதேபோல கடந்த ஆட்சியில் எந்த கட்டமைப்பும் செய்யவில்லை என சொல்கிறார் அமைச்சர் ஆனால் அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே எங்களது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு நடவடிக்கைகளும், புதிய மின் உற்பத்தி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள். 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இப்படி வெள்ளை அறிக்கையிலேயே நாங்கள் செய்த திட்டங்கள் இடம் பெற்றிருந்தும் அதை திரித்து அமைச்சர் பேசி உள்ளார்.
வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3 , உடன் குடி மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன.
எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் 75% நிறைவு பெற்றது.;
குண்டாறு மின் திட்ட பணிகள் 85% முடிந்துவிட்டது; கொல்லிமலை மின் திட்டம் 90% முடிந்துவிட்டது.
சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் tnpsc தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர். ஏன் இதனை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்கவில்லை.
மேலும் கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது
குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் அவர்களின நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீீீது
வழக்கு தொடுக்கப்படும்.
இப்போது முதல்வரின் தனி செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவரது சினிமா pro வான ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் பார்க்கிறார் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களா.?
மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை . அதை நான் எடுத்து சொல்லி கேள்வி கேட்டும் இன்று வரை பதில் இல்லை. தங்களின் நிர்வாகத் திறமை யின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளை திமுக தூண்டிவிட்டு போராட வைக்கிறது என்று கேவலமாக விவசாய மக்களைக் கொச்சைப்படுத்தி முதலமைச்சர் பேசியுள்ளார்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்த திரு. அரியப்பன் அவர்களின் மகன்,
இளைஞர் அன்பானந்தன் அரியப்பன் @Anbanantham_A அவர்களை,
நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து காவல்துறையின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
இளைஞர்களைக் கண்டு தொடைநடுங்கும் தவெக முதல்வரும், நிழல் முதல்வர்களும்!
GenZ DMK என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் ராயக்கோட்டை போடம்பட்டி வீட்டில் புகுந்து, பெற்றோரிடம் அத்துமீறி வாக்குவாதம் செய்து அராஜகமாகக் கைது செய்ய முயன்ற தவெக அரசின் பாசிச வெறி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
சினிமா வெளிச்சத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஏமாற்றலாம் என்ற உங்கள் பகல்கனவை உடைத்து, தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு தோலுரிக்கும் GenZ இளைஞர்களைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்?
உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே ஆபாசமாகத் திட்ட ஆன்லைன் ரவுடிகளை ஏவுவது, அல்லது நள்ளிரவில் போலீஸை அனுப்புவதுதான் உங்களின் மாற்று அரசியலா?
விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு 'தொடைநடுங்கி' அரசாங்கம் உங்களுடையது!
கேமரா முன் "ஜனநாயகம், கருத்துரிமை" என்று மனப்பாடம் செய்த வசனத்தைப் பேசிவிட்டு, இருட்டில் போலீஸை ஏவி மிரட்டுவதுதான் அப்பட்டமான சர்வாதிகாரம் மற்றும் உண்மையான பாசிசம் CM சார்!
அதிகார வெறிகொண்டு குரல் எழுப்பும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் உங்களது கோழைத்தனமான அரசுக்கு, வெகு விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்!
#TVKFails
தி.மு.க-வின் GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் சிறப்புரையில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 04 :
இளைஞர் அணிக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, நமது நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
#கழக_இளைஞர்_அணி
தவெக ஆட்சியின் குற்ற சம்பவங்களை மறைக்க Online Mafia Group தினம் ஒரு பொய் செய்தியை பரப்பிவருகின்றனர்.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TVKFails