மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
நாம் தமிழர் கட்சியின் தொடர் அழுத்தத்தின் காரணமாக தற்போது நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய 4 பேரில் 2 பேரை கைது செய்துள்ளது காவல்துறை..!
இன்னொருவர் சித்தூர் பகுதியில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வருகிறது..
@tnpoliceoffl காவல்துறை கவனத்திற்கு..!
சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்தாச்சு... இப்போ நிதி மேலாண்மை எங்கே?
மக்களின் கண்களை மறைக்க வழங்கப்படும் வெற்று அறிவிப்புகளும், கஜானாவுக்கு ஏற்படும் சுமை குறித்த ஆழமான கேள்விகளும்!
🔗 https://t.co/B2k0dgUn5k
#TamilNaduFinance#GovernanceFailure #TNPolitics #ElectionPromises #EngalDesam
விசிக-வினர்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டு தலை முழுவதும் தையல் போடப்படுள்ள நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் சிகிச்சையில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்ய 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கைது செய்ய வந்திருக்கிறார்கள்!
இன்று (25/08/2026)
தஞ்சாவூர் மருத்துவக்
கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மாண்புமிகு. பேராசிரியர் மருத்துவர் இ. மணிமேகலா அவர்களிடம் மருத்துவக்கல்லூரி வளாக சாலைகள் சீரமைத்தல், நோயாளிகளின் தள்ளு வண்டிகளை சீரமைத்தல் , காத்திருப்போர் கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் & மாணவர் பாசறை சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்..
'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
ஒருவேளை நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்களை நோக்கி நீங்கள் யார் ❓ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டிருந்தால் நாங்கள் 32 லட்சம் TNPSC பயிலும் மாணவர்களின் பிரதிநிதி என்று சொல்லியிருப்போம் ❤💯🔥
#TNPSC#tnpscpreparation#tnpscexam