கடந்த ஓராண்டாக போதை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்பிற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அந்த விருதை ஏன் வழங்கினீர்கள்?
#TNAssembly#TVKVijayFails
‘எனது கண்ணின் கருவிழி’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நெகிழ்ச்சியோடு போற்றப்பட்டவரும்; தமிழ்நாட்டின் குரலாக நாடாளுமன்றத்திலும், இந்தியாவின் குரலாக உலக அரங்கிலும் ஒலித்தவருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாள்!
திராவிட இயக்கத் தீரரான அவரது புகழ் ஓங்குக…
தி.மு.கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புக்கும் வாளும் - கேடயமுமாக திகழும், கழக சட்டத்துறையின் வடக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
கழகத்தினர் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசினால் கைது செய்வது; அதுவே, டெல்லி ஓனர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் இருப்பது என பம்மி நிற்கும் டம்மி அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்தி��ும் - நீதிமன்றத்திலும் கழக வழக்கறிஞர் அணி அம்பலப்படுத்த வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டு நலனுக்காகவும் - கழகத்திற்காகவும் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ள கழக வழக்கறிஞர் அணியின் பணிகள் மென்மேலும் வேகமெடுக்கும் வகையில் உற்சாகமூட்டினோம்.
வழக்கறிஞர் அணியின் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்!
@DMKLegalWing @RSBharathiDMK @nrelango_dmk @PWilsonDMK
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீ��்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை இனி ‘தமிழ்நாடு —-------------’ என்று குறிப்பிட ஆயத்தமாகிவிட்டதா @TVKVijayHQ அரசு?
திராவிட மாடல் அரசால் முன்னெடுக்க���்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை மாற்றிய ஆமை வேக #SofaModel அரசு, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு சிறந்த, நவீன கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ‘முதல்வர் படைப்பகத்’தை ‘படைப்பகம்’ என்று பெயர் மாற்றியுள்ளது.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஊடகங்களை சந்திக்காமல் வாய் கட்டு ப��ட்டிருக்கும் முதலமைச்சர், தான் மேடைபோட்டு முழங்கிய திட்டங்களை சரிவர செயல்படுத்த முன்வராமல் தி.மு.கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை முடக்கும் நோக்கில் செயல்படுவது காழ்ப்புணர்வின் உச்சம். சபாநாயகர் முதல் - #SofaModel அரசின் அமைச்சர்கள் வரை ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்றால் அது எங்கள் தலைவர் @mkstalin அவர்கள்தான் என்ற எண்ணப்போக்கில் இருப்பதால், முதல்வன், முதல்வர் என்ற பெயர்��ளை எல்லாம் முடக்க நினைக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. மாநிலத்தின் ��ச்ச பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மை தேவையற்றது.
அல்லது ‘மு’ வில் தொடங்கும் சொற்களை இந்த ஆட்சியில் எந்த திட்டங்களுக்கும் சூட்டக்கூடாது, சூட்டிய பெயர்களும் தொடரக் கூடாது என தனது ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா என்று ‘மு’தலமைச்சரோ அல்லது ‘மு’தல்போட்ட அமைச்சரோ தெளிவுபடுத்த வேண்டும்.
அரசின் திட்டங்கள் மக்களின் குறைகளை தீர்த்து அவர்களை மகிழ்விக்க வேண்டுமே ஒழிய ‘மு’கம் சுளிக்க வைக்க கூடாது. Sticker அரசியலைக் கடந்து உருப்படியாக எதையாவது இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
#MudhalvarPadaippagam #NaanMudhalvan #TVKFails
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்ன வள்ளிக்குளம், பெரிய வள்ளிக்குளம், பாலவநத்தம், ராமசாமிபுரம் முத்துநாயக்கன்பட்டி, சூலக்குரை, வில்லிபத்திரி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக என்னைத் தேர்வு செய்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்த போது.
#DMKAruppukottai
#DMKVirudhunagar
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்���ுங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
மைக் கிடைச்சா போதும்... கொடுத்த ஸ்கிரிப்ட்ட மனப்பாடம் பண்ணி Yap பண்ற NPC முதலமைச்சரே!
பெண்கள் பாதுகாப்பு குறித்து 'சிங்கப்பெண் படை' துவக்க விழாவில் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, தவெக பெண் நிர்வாகி ஒருவர் தவெக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் மீது புகார் கொடுத்துள்ளார்.
சிங்கப்பெண் படை முதல் வழக்கை இவர் மீது பதிந்து நடவடிக்கை எடுக்குமா?
உங்கள் மேடைப் பேச்சைப் பார்க்க உங்களுக்குக்கே கொஞ்சமாவது Cringe ஆகலையா?
அது சரி, அந்த மாவட்டச் செயலாளர் என்ன உங்கள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பெயர் கூட உங்களுக்குத் தெரியுமான்றது எங்களுக்கு டவுட் தான்!
ஏன்னா, நீங்க வெறும் பேருக்குத் தானே முதலமைச்சர்!
பின்னணியில் இருந்து உங்களை ரிமோட் கண்ட்ரோல் பண்ற அந்த 'நிழல் முதலமைச்சர்கள்' தானே இங்க உண்மையான ரூலர்ஸ்!
இனியாவது ஊரை ஏமாத்துற இந்த Uruttu-வை நிறுத்துங்க Bro!
#TVKFails
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆ��ியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் ம��ற்றமா?