Doomsday arrives December 18th.
Experience Avengers: Doomsday on bigger, brighter, & more immersive screens. Tickets are now on sale exclusively for Infinity Vision certified theaters: https://t.co/2HHPv9pj8t
Odyssey - நீண்ட நாட்களுக்கு முன் நான் படித்த இதிகாசம். படிக்கும்போதே ராமாயணம், மகாபாரதம், பொன்னியின் செல்வன் எல்லாம் ஞாபகம் வந்து போனது. பொன்னியின் செல்வன்ல வர பல visual ரெபெரென்ஸ் எல்லாமே இங்கே இருந்து கொஞ்சம் உருவி இருப்பார் கல்கி. 10 வருஷ டிராய் போர் முடிந்தபின்னர் ஊர் நோக்கி புறப்படும் ஒடிசியஸ் தன் நாட்டிற்கு திரும்ப முடியாமல் 10 வருடமாக இருக்கிறார். எங்க போனார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. அரசியை அடைய பலர் சதி செய்யும் நேரத்தில் தந்தையை கொண்டு வர மகன் செல்கிறார்.
10 வருடமாக வீடு திரும்ப முடியாமல் பொசைடன் என்னும் கடல் கடவுளால் கோபத்துக்கு ஆளாகி சபிக்கபட்ட ஒடிசியஸ் எப்படி நாட்டிற்கு திரும்பி தன்னுடைய அரசியை காப்பாற்றி, மகனை அரசனாக்கினார் என்பது தான் ஒடிசி படம்.
படத்தின் ஆரம்பமும் சரி, ட்ரோஜன் குதிரை சண்டையும் சரி, பின்னர் கடைசி 20 நிமிட காட்சிகளும் சரி அட்டகாசம். ஒரு கமர்ஷியல் மாஸ் பட ரசிகர்களுக்கு இவை என்றும் நினைவில் நிற்கும்.
ஒற்றைக்கண் பூத மனிதனிடம் மாட்டி கொள்வது, உணவு தேடி சூன்யகாரியிடம் மாட்டி கொள்வது, மனிதனை உண்ணும் லைஸ்ட்ரிகோனியன்கள் கிட்ட மாட்டி கொள்வது, பின்னர் கடல் தேவதை கலிப்ஸோ கிட்ட 7 வருஷம் இருப்பது என்று ஒரு மனிதனின் ஒட்டுமொத்த பயணமும் நம் கண் முன்னே விரிகிறது.
ஒவ்வொரு கடவுளும் “ நீ மட்டுமே ஊர் திரும்ப முடியும்” என்று பல்வேறு ஆட்கள் மூலம் சொன்னாலும் மீண்டும் மீண்டும் யாரையும் விடாமல் இருப்பது என்று ஒடிசியஸ் கடந்து வந்த கடுமையான பாதையை படம் விவரிக்கிறது.
matt damon அதி அற்புதமான தேர்வு ஒடிசியஸ் கதாபாத்திரத்திற்கு. அன்னா ஹீத்வே அழகி, வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வியக்க வைக்கிறார். மற்ற யாருக்கும் பெரிதாக ரோல் இல்லை.
ஒரு சில இடங்களில் நம்மை ஒடிசியஸ் உடன் பொருத்தி பார்க்கலாம். பிடிக்காத ஒரு இடத்திற்குள் பல காலம் சிக்கி கொண்டு வேலை செய்வது போல ஒரு காட்சி உண்டு. உனக்கு ஞாபகம் இல்லையா, நீ திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நம்மிடம் நம் மனசாட்சி சொல்வதை போல என்று பல இடங்களில் ஒடிசியஸ் உடன் நாம் இணைவோம்.
அவசியம் படத்தை epiq அல்லது டால்பி சினிமா அல்லது IMAX ல பாருங்க. கண் முன்னே கடல், ட்ராய் போர், ட்ரோஜன் குதிரை என்று அற்புதங்கள் விரியும்.
அவசியம் பாருங்கள். நோலன் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.
குறிப்பு: சில ரேசிஸ்ட் குருப் படத்தை புறக்கணிக்க சொல்லியும், படத்தில் வரும் கருப்பின நடிகை lupita வுக்கு எதிராக ஒரு கோஷ்டியும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எலியாட் பேஜ் நடிகருக்கு எதிராகவும் பிரச்சாரம் நடைபெறுகிறது. படத்தை பார்க்கும்போது இது எதுவுமே நிற்காது. அடுத்த வாரம் வேற ஒரு படம் இருப்பதால் தமிழ்நாட்டிலும் ஒரு கோஷ்டி நெகடிவ் ரிவியூ எழுதுகிறது. படத்தை பாருங்கள், அது உங்களை ஆட்கொள்ளும்.
எங்க ஊரில் ஐமேக்ஸ் இல்லை என்பதால் 1800 கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி ஒஸ்லோ வந்து ப்ரீமியர் பார்த்து இருக்கேன். லேசர் ஐமேக்ஸ் தான். 70MM ஐமேக்ஸ்ல பார்க்க சிறப்பா இருக்கும். வாய்ப்பு இருந்தால் பாருங்கள். இல்லை என்றால் நம்ம ஊர் டால்பி சினிமா அல்லது எபிக் ஸ்க்ரீன்ல பாருங்க. வொர்த்