நம்பிக்கையூட்டும் நிதிநிலை அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாகக் கல்விக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்; பத்தாயிரம் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் என்ற திட்டம்; மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு; காமராசர் பெயரில் சிறப்புப் பள்ளிகள்; அரசுப் பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பள்ளி நிறைவுத் திட்டம், அதற்காக 300 கோடி ரூபாய் இந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு; பாடத்திட்டங்களை சீரமைப்பதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகள் கொண்ட 200 மாணவர் விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு; மதுரையில் சட்டக் கல்லூரி; இவையாவும் பாராட்டத்தக்க அறிவிப்புகள் ஆகும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் அயல்நாடுகளில் சென்று கல்வி கற்பதற்காக 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல பழங்குடியினர் குடியிருப்புகளின் மேம்பாட்டுக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை உயர்த்தி வீடு ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாயாக இந்த அரசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. இதற்கென 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 70 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒரு லட்சம் வீடுகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான தொகை உயர்த்தப்பட்டாலும் வீடுகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மாநிலத்தின் வருவாய் பற்றி குறிப்பிடும்போது ஒன்றிய அரசிடமிருந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்காக வரவேண்டிய 7586 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள 3461 கோடி ரூபாயும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு முறைப்படி வழங்கினால் தான் நமக்கு கிடைக்கும். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டதை விட இந்த திருத்திய வரவு செலவு திட்டத்தில் கூடுதலாக 5452 கோடி ரூபாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதை நாம் எந்த அளவுக்குப் போராடுகிறோமோ அந்த அளவுக்குத்தான் வாங்க முடியும். அதுவே கடந்தகால படிப்பினை.
2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளில், ஒன்றிய அரசின் நிதியுதவியின் மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துவந்த வருவாய் குறைந்தது; ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதே அதற்கு முக்கிய காரணம். மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்காமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதன் பங்கு 8.3%-இலிருந்து 5.8%-ஆக சரிந்தது. இதேவேளை, மாநிலக் கடன் ₹1.92 லட்சம் கோடியில் இருந்து ₹8.57 லட்சம் கோடியாக உயர்ந்து, கடனுக்கும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் நாட்டிலேயே அதிகமான நிலையை எட்டியது. வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் வட்டிச் செலவுகள் தீவிரமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் நலத்திட்டங்களைத் தொடர்ந்துகொண்டு தான் தேர்தல் வாக்குறுதியாகத் தந்த புதிய நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் தவெக அரசு உள்ளது. மாநிலத்தின் நிதிநிலையைச் சீர்செய்வதற்கு சொந்த வருவாயை வேகமாக அதிகரிப்பதே தவெக அரசின் முன்னால் உள்ள முக்கிய சவாலாக உள்ளது. அதற்கான நம்பிக்கை வெளிச்சத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சின்மயா நகர், கோயம்பேட்டில் ஐந்து நாட்களான பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோழர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப் படி,மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் தோழர்கள் ஜீவா, தனசேகர், புளியந்தோப்பு மோகன், ரவி ஆகியோரை நலம் விசாரித்ததுடன், கொள்கை ரீதியாக நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பில் த.வெ.க அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். நீட் விலக்கு கோரி போராடும் தோழர்களுக்கு உறுதுணையாக தமிழ்நாடு அரசு இருக்கும் என ஆதரவு அளித்தார். விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமைக் கொறடா திரு. சபரிநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகிய நானும் உடனிருந்தோம்.
@imrajmohan
கொத்தூஸ் எல்லாம், EVMன்னால தான் ஸ்டாலினுக்கு கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டதுன்னே, இருக்க மீதி காலத்தையும் வாழ்ந்து முடிச்சிட்றது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது! 🙃😅
Hearty congratulations @actorvijay on setting new benchmarks and achieving a stunning victory!!! 👏🏻👏🏻👏🏻
Today reflects the faith people have placed in you in large measure… I’m certain this victory will translate into meaningful progress for Tamil Nadu. 🤗🤗🤗❤️❤️❤️
I welcome the Hon’ble Finance Minister’s maiden Budget, a bold and growth-oriented roadmap that places industry at the heart of Tamil Nadu’s development journey.
The Industries Department has received a historic allocation of ₹4,414 crore, the highest ever for the department. This marks a significant rise from ₹2,295 crore in 2024-25 and ₹3,915 crore in 2025-26, reflecting this government’s unwavering commitment to manufacturing, investment, innovation and quality job creation.
Under the visionary leadership of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are not merely sustaining Tamil Nadu’s industrial leadership, we are building the foundations of a globally competitive economy on our path towards a $1.5 trillion economy.
#CMJosephVijay #TamilNadu
#BREAKING | டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் புக் செய்து மது பாட்டில் வாங்கும் வசதி நாளை முதல் அறிமுகம்
#SunNews | #Tasmac | #OnlineSale | #TNGovt
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂😂
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026–2027, "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்திற்கு ₹560 கோடி நிதி ஒதுக்கீடும், "அண்ணனின் சீர்திட்டம்" மூலம் பெண்களின் திருமண நலனுக்காக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்க ₹812 கோடி நிதி ஒதுக்கீடும் செய்திருப்பது, பெண்களின் மனதை வென்ற மகத்தான அறிவிப்புகளாகும்.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியை விதைக்கும் திட்டம்.
ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் உறவின் பாசத்தோடு கொண்டாடும் திட்டம்.
ஒரு முதலமைச்சராக மட்டும் அல்ல... ஒவ்வொரு பெண்ணின் அண்ணனாகவும், ஒவ்வொரு குழந்தையின் தாய்மாமனாகவும் அக்கறையுடன் சிந்திக்கும் தலைவர் எங்களுக்கு கிடைத்திருப்பது தமிழ்நாட்டின் பெரும் பாக்கியம்.
ஆம்... இது எங்க அண்ணன் ஆட்சி! என்று ஒவ்வொரு சகோதரியும் பெருமையோடு சொல்லும் அளவிற்கு, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாட்டு பெண்களின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணனின் ஒரு தங்கையாக, இந்த அறிவிப்புகளைப் பார்க்கும் போது மனம் நிறைந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
#CMJosephVijay #TNBudget2026_27 #TamilNadu
அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.
எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.8.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay