வாழி அவன்-தன் வள நாடு
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாய்; வாழி, காவேரி!
ஊழி உய்க்கும் பேர் உதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
அருளே; வாழி, காவேரி!
#ஆடிப்பெருக்கு
இன்று ஆடி மாதம், புனர்பூச நாள்..
இதே போல ஒரு ��ாள்..
பொது ஆண்டு 985, ஆடி மாதம் புனர்பூசம்..
வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்..
சிவபாத சேகரனான பேரரசர் இராஜராஜ சோழர் முடிசூடிய நாள்.. ஆடி புனர்பூசம்..
திருமகள் போல, பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்ட இராஜராஜர் புகழ் ஓங்குக..
'நான் கொடுத்த தாய்ப்பால் எல்லாம் இப்படி இரத்தமா ஓடுதே' ன்னு கிராமங்கள்ள சொல்வாங்க.. எதேச்சையா கண்ல பட்ட அந்த ரத்த வாய்க்காலை (ஆமா, வாய்க்கால் மாதிரி தான் இருந்தது) பார்த்ததுல இருந்து மனசை பிசையுது..
இதை கண்டிக்க கூட பயமா இருக்கே...