வன்னியர் சங்கத்தின் 47-ஆம் ஆண்டு தொடக்கம்: அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான
சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன் 46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று. சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ; தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை மருத்துவர் அய்யா அவர்கள் நிறைவேற்றச் செய்தார்.
மருத்துவர் அய்யா அவர்களால் அப்போது தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவை நமது சமூகநீதி போராட்டத்தில் எட்டப்பட்ட முதல் மைல்கல் தான். அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.
#SocialJustice
பசுமைத் தாயகம் சார்பில், "சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கம், கையெழுத்து இயக்கம்" என்ற பரப்புரையை தியாகராயர் நகரில், பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய போது.!
இந்நிகழ்ச்சியில், நீரியல் வல்லுநர் S.ஜனகராஜன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்முகில் உள்ளிட்ட பசுமைத் தாயகம், தமிழ்நாடு குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, எக்ஸ்நோரா அமைப்பு, அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்றனர்.!
#pallikaranai #marshland #PasumaiThayagam #PMK
"சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கம், கையெழுத்து இயக்கம்" என்ற பரப்புரையை தியாகராயர் நகரில் தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது.!
#pallikaranai#marshland#PasumaiThayagam#PMK

13 ஆண்டுகளுக்கு மும் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி
உடனே ஆசிரியர் பணி வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன் 2013-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பையும் நிறைவு செய்த 410 பேருக்கு இன்று வரை ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட அதை முந்தைய திமுக அரசும், இப்போதைய தவெக அரசும் செயல்படுத்த மறுப்பது பெரும் அநீதி ஆகும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது 2012-ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அதன் பின் வந்த அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களில் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் முன்னுக்குப் பின் முரணாக மாற்றியது தான் 410 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதன் பின் 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 410 பேர் தவிர மீதமுள்ள அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுவிட்டது. 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படாததற்கு அரசின் தடுமாற்றம் தான் காரணம் ஆகும்.
2012 ஆம் ஆண்டு தகுதித் தேர்வு வென்றவர்கள் மற்றும் 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பிரிவினருக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தகுதித் தேர்வு தேர்ச்சியுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கட்டாயமாக்கப்பட்டது. அதனால் தான் தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149-இன் படி தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியர் பணி என அறிவிக்கப்பட்டது. இதனால் 410 பேரின் ஆசிரியர் பணி காணல் நீராகி விட்டது.
ஒரு பணிக்கு இரு தேர்வுகள் நடத்தப்படுவதை எதிர்த்து 410 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்து 2024-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செயல்படுத்த மறுத்துவிட்ட திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் லோக் அதாலத் வாயிலாக தீர்வு காண ஆணையிட்டது. அதன்படி கடந்த ஜூலை 14-ஆம் நாள் நடைபெற்ற சமரசத் தீர்வு விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். இது பெரும் அநீதியாகும்.
உச்சநீதிமன்றமே லோக் அதாலத் மூலம் இந்த சிக்கலை கருணை அடிப்படையில் தீர்க்க ஆணையிட்ட பிறகு மீண்டும் மேல்முறையீடு செய்யப் போவதாக அரசு வழக்கறிஞர் கூறுவது பெரும் சமூக அநீதியாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி என்ற அடிப்படையில் தான் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடததப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதையும், மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது.
எனவே, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஆணையிட்டவாறு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இதுவரை ஆசிரியர் பணி கிடைக்காத 410 பேருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும். 2018-ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்று பெற்றவர்களை பெருமளவில் பாதிக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்யவும் அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "Yonex - Sunrise All India Senior Ranking Badminton Tournament" தொடக்கவிழாவில் உரையாற்றிய போது.!
உடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான திரு.ஐசரி கே.கணேஷ் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் திரு.J.மேகநாத ரெட்டி அவர்கள், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொருளாளர் திருமதி.C.லதா அவர்கள், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க பொதுச் செயலாளர் திரு.சஞ்சய் மிஷ்ரா அவர்கள்.!
கடந்த 19-08-2025 அன்று "உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் கெலவரப்பள்ளி அணையில், கர்நாடகத்தின் அனைத்து விதமான கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்தவும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரியும், அரசாங்கத்தை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். இன்றும் இதே நிலை தான் தொடர்கிறது. தென்பெண்ணை ஆறு மாசுபாட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
#PMK #AnbumaniRamadoss #Hosur
#SaveKelavarapalliDam #pollution
பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஈஞ்சம்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்றி, மரக்கன்று நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி, செய்தியாளர்களை சந்தித்தபோது.!
பாமக 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை தங்க சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்று உரையாற்றிய போது.!
#PMK