#கோணத்துவிளை முதல் #வாலக்குளம் வழியாக மேல #காட்டுவிளை செல்லும் சாலையில் சிறு பாலம் அமைத்து, 5 இடங்களில் குளத்திற்கு தண்ணீர் செல்ல குழாய் அமைத்து, இடையூறாக இருந்த பாறைகளை உடைத்து, பள்ளமான இடங்களில் மண் இட்டு, ரோடு ரோலர் மூலம் சமன்படுத்தப்பட்டு பின்னர் கான்கிரீட் அமைப்பதற்காக பேரூராட்சிக்கு வழங்கப்பட்டு தற்போது கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
#ancyshobarani
#ஆன்சிசோபாராணி
திமுகவைத் தீயசக்தி என்கிறார் தவெகவின் தலைவர் விஜய்.
விசிகவின் தலைவர் திருமாவோ திமுகவை நட்புச்சக்தி என்கிறார்.
இத்தோடு, திமுகவும், தவெகவும் ஒரே அணிக்குள் இருக்க வேண்டும் என்கிறார்.
திமுக மீது இவ்வளவு பாசமும், பரிவும் காட்டும் திருமா மீது Virtual Warrior's விமர்சனம் வைக்க வேண்டியதுதானே? திமுகவிடம் காசு வாங்கிவிட்டாயா? எனப் பொங்க வேண்டியதுதானே?
இடும்பாவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை நாம் தமிழர் கட்சி
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை.
ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும்.
ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது.
ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
இஸ்லாமியரான அக்கா பாத்திமா பர்கானா அவர்கள் எப்படி முருகன் பற்றிய விவாதத்தில் பங்கேற்கலாம் என்று நம் கால்களை சுத்தி வரும் சில நச்சு பாம்புகள் கேள்வி கேட்கிறார்கள்! அந்த விவாதத்தில் அவர் நாம் தமிழர் நிலைப்பாட்டை தான் பேசினார்! இனியும் பேசுவார்!
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
திமுகவைத் தீயசக்தி என்கிறார் தவெகவின் தலைவர் விஜய்.
விசிகவின் தலைவர் திருமாவோ திமுகவை நட்புச்சக்தி என்கிறார். இத்தோடு, திமுகவும், தவெகவும் ஒரே அணிக்குள் இருக்க வேண்டும் என்கிறார்.
திமுக மீது இவ்வளவு பாசமும், பரிவும் காட்டும் திருமா மீது Virtual Warrior's விமர்சனம் வைக்க வேண்டியதுதானே? திமுகவிடம் காசு வாங்கிவிட்டாயா? எனப் பொங்க வேண்டியதுதானே?
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனம்
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
#TVK #AmoniaGasLeak #SchoolInspection #Keerthana #Rajmohan #TNCMVijay #TVKMinisters
அரசு பணி வழங்க எதிர்ப்பு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் நாம் தமிழர் கட்சி, மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் நீதிமன்றத்தில் மனு
கரூர் கூட்ட நெரிசலில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு, இடைத்தேர்தலை
கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்குவது
மிக தவறான போக்காகும் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
#Seeman#KarurStampede#news18tamilnadu
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது?
கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்தநொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
குமரி மண்ணில் திணிக்கப்படும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் போதெல்லாம் பரப்பப்படும் ஒரு Propaganda Statement
'குமரி மாவட்டத்திற்கு வரவிருந்த இனயம் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை மாநிலம் விழிஞ்சத்திற்கு தாரைவார்த்துவிட்டோம்' என்பது.
பல ஆண்டுகளாக பரப்பப்படும் ஒரு அடிப்படை புரிதலற்ற இந்த புரளிக்கு ஆதாரங்களுடன் பதில்.
முழு காணொளி
https://t.co/YDtWOJ4E1F
நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன்!
அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி !
தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க, கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணிய கணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா ?என்பதுதான் .
அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?
சாட்டை துரைமுருகன்
மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் நாம் தமிழர் கட்சி