"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறு���ியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam #Kovai #Library
மனித மனம் வினோதமானது
அது தனக்கு தெரிந்ததை மட்டுமே
உண்மை என நம்பும்..
அதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளிவராது..
தான் நம்புவதை உண்மையென நிரூபிக்க மணிக்கணக்கில் கூட வாதம் செய்ய வைக்கும்
மனித வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம்
ஆனால்,
இதை ஓர் அரசாங்கம் செய்யக்கூடாது.
செய்யவே கூடாது..
இருந்தபோதும்,தவெக அரசு செய்தது
விசாரணைய���ல் இருக்கும் வழக்கு குறித்து
பெரும்பாலும் அமைச்சர்கள் நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் பேசமாட்டர்கள்
ஆனாலும்,
கடந்த சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசினார்..
என்ன அந்த வழக்கு எந்த கட்டத்தில் உள்ளது !
அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என தெளிவாக பேசியிருக்கலாம்
செய்யவில்லை..மாறாக 2024-ல் மார்ச் மாதம் பத்திரிகைகளில் வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை 2026 ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில்,,அதுவும் சட்டத்துறை அமைச்சரே பேசினார்
போதை மருந்து விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் உள்ள ஜாபர் சாதிக் குறித்து
அவர் சொன்ன எதுவும் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் கூறப்படவில்லை
அந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
NCB,ED ஆகிய இரண்டு பெரும் ஏஜென்சிகள் கூட்டணி அமைத்து 29 மாதங்களாக விசாரித்து வரும் அந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுர்கள் தொடர்புள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை..
கூடுதல் சாட்சி,ஆதாரங்களை சேர்க்க வேண்டுமென அரசுத்தரப்பு அனுமதி கோரியதை விசாரணை நீதிமன்றம்
நிராகரித்துவிட்டது
அதற்காக,டெல்லி உயர்நீதிமன்றத்தில்
NCB சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எந்தவொரு Official press Release-ம் தராமல் 50 கிலோ Pseudoephedrine பிடிபட்டது தொடர்பான அந்த வழக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசால் திட்டமிட்டு ஊதிப்பெரிதாக்கப்பட்டது
முதல்முறையாக @narcoticsbureau அரசியல் அடியாளாக இந்த வழக்கில் தான்
மாற்றப்பட்டது
Pseudoephedrine-ன் சந்தை விலை
அதிகபட்சமாக கிலோ ரூ.80,000
ஜாபர்சாதிக் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 லட்சம் மாத்திரமே
ரூ.2000 கோடி,ரூ.2000 கோடி கடத்தல் என ஊடகங்களில் எழுதப்பட்ட எதுவும்
நீதிமன்றத்தில் NCB-ஆல் நீதிமன்றத்தில்
இப்போது வரை சொல்லப்படவில்லை
எனவே ஜாபர்சாதிக் வழக்கோடு,தவெக ந���ர்வாகி பூபாலன் கைது விவகாரத்தை ஒப்ப��டுவது மிகவும் அபத்தமானது
ஏனென்றால் நாகை பூபாலன் வழக்கில் ரூ.100 கோடி மதிப்பிலான மெத் பறிமுதல் என @FinMinIndia அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது
நாகப்பட்டினம் மெத் பறிமுதல் சம்பவம்
மிகப்பெரியது..
DRI விசாரணையிலும்,ஒருவேளை ED-யும் விசாரணையில் இறங்கும் பட்சத்தில் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக நிச்சயம் மாறும்
👉 DRI seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
👉 Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
Read more ➡️ https://t.co/Wxk1mcgvzr
#DRIAtWork
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப்பொருளான
மெத்தாபெட்டமைன் 135 கிலோ @TVKPartyHQ -ன் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன்
என்பவர் வீட்டில் இருந்து @FinMinIndia -ன் கீழ் இயங்கும் Directorate of Revenue Intelligence அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
மெத்-ன் இந்திய சந்தை மதிப்பு
ஒரு கிலோ ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது..
அப்படியென்றால்,பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.675 கோடி ரூபாய்
இவ்வளவு பெரிய ஸ்டாக் எங்கிருந்து வந்தது ?
யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்/செய்ய திட்டமிட்டிருந்தனர் என @narcoticsbureau@ncbchennai முழுமையாக விசாரிக்க வேண்டும்
இந்த சோதனை மற்றும் பறிமுதல் குறித்து @FinMinIndia ,DRI விரிவான Press Release வெளியிட வேண்டும்
ரூ.675 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து @dir_ed அமலாக்கத்த���றை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம்
கைது செய்யப்பட்டுள்ள
பூபாலன் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தம��ழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூ�� வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாக���ப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?
கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
அடக்குமுறை ��ரசியலைக் கைவிட்டு, @AsiriyarKV அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலை��ர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழ��த்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
Watch | "காவல்துறை உங்க பொறுப்புல இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பொறுப்பேற்காதது ஏன்? அவர்கிட்ட ஒருத்தர் கூட கேட்க மாட்டீங்களா?”
#SunNews | #Vijay | #TVK | #DMK
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிர���ிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்���ெயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்��ை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடு��்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel