🎶🎶"கோடை காலக் காற்றே" ..🎵🎵 ""இழுவை பாடல்" (!?!)
இவ்வளவு வன்மத்தையும் , அடக்குமுறைகளையும் தாண்டி வந்து ஒரு மனுஷன், தமிழ்த்திரையிசை உலகில் தனக்குத்தானே ஒரு சிம்மாசனத்தை செதுக்கி, அதுல வந்து ஸ்டைலா கெத்தா உட்கார்ந்ததெல்லாம்.. 🔥🔥🔥🔥🔥
இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசைகள் சிலவற்றின் சிறிய தொகுப்பு இது. கண்டிப்பாக கேட்டு அனுபவியுங்கள். ❤️🎼
ஒவ்வொரு BGM-மும் நம்மை இந்த உலகத்திலிருந்து வேறொரு உணர்வுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சக்தி கொண்டவை.
#இளையராஜா#IlaiyaraajaBGM
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்த மம்தா பானர்ஜியை தோற்கடித்தது.
பின் 80 எம்எல்ஏக்களுடன் பெரிய எதிர்கட்சியாக அமரலாம் என்று எண்ணும் போதே குதிரைப்பேரம் நடத்தி அதில் கிட்டத்தட்ட 60 எம்எல்ஏக்களை பிரித்தது
இப்போது இருக்கும் 20 எம்எல்ஏக்கள் கூட மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
80 பேராக இருந்த எம்எல்ஏக்கள் பலத்தை வெறும் ஏழு டூ எட்டாக சுருக்கி மம்தா பானர்ஜியை முடக்கியது பாஜக
இது மேற்கு வங்கத்தின் கதை
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தவெகவை களத்தில் இறக்கி ஆட்சி அமைக்க விட்டு மீதமிருக்கும் பெரிய கட்சிகளை உடைக்க திட்டமிட்டது பாஜக
அதன் ரிசல்ட் தான் அதிமுக சில்லு சில்லாக உடைந்து சிதறி பல குதிரைப்பேரங்கள் நடத்தி சிட்டிங் எம்எல்ஏக்கள் முதல் எக்ஸ் எம்எல்ஏ எம்பிக்கள் வரை தவெகவில் இணைய வைத்தது
ஆனால் ஒன்றை கவனித்தீர்களா
இவர்களின் குதிரைப்பேரம் பலிக்காதது திமுகவிடம் மட்டும் தான்
ஆளுங்கட்சியாக இருந்த போது இருந்த கம்பீரத்தை விட எதிர்கட்சியாக இருக்கும் போது பன்மடங்கு கம்பீரத்தன்மையுடன் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிங்கமாக கோட்டையை அதிர வைக்கிறது
எதிர்கட்சிகளிடம் இருந்து ஆளுங்கட்சியிடம் போய் தஞ்சம் புகுவது தான் வரலாறு. ஆனால் அத்தனை கட்சிகளில் இருந்தும் எதிர்கட்சியான திமுகவில் வந்து இணைந்து கொண்டு இருக்கின்றனர். திமுகவில் இருந்து எந்த எம்எல்ஏ எம்பியும் விலகி வெளியேறவில்லை
இது தான் அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இது தான் கலைஞரின் வளர்ப்பு
இது தான் ஸ்டாலினின் அரசியல் பக்குவம்
திமுக ஈஸ் நாட் எ வேர்ட்
திமுக ஈஸ் எ பிராண்ட்
இதெல்லாம் தற்குறிகளுக்கு புரியாது
கொஞ்சம் நாள் பொறுங்க போக போக புரியும் திமுக யார் என்று ..
🖤❤️
Copy paste செய்யப்பட்டது
நன்றி
இந்தியாவிலேயே முதல் முறையாக திருநருக்கு வாரியம் அமைத்தார் கலைஞர். ஊக்கத்தொகையும் வழங்கினார். 'திருநங்கை' என்று அழைக்க வேண்டி அரசாணையும் வெளியிட்டார். கடந்த ஆட்சியில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட விடியல் பயணத்தை திருநருக்கும் நீட்டித்தார் ஸ்டாலின். மேலும் ஓய்வுதியமும், விலையில்லா பாலின மாற்று அறுவைச் சிகிச்சையையும் கொண்டு வந்தார்.
இதற்காக யாரும் யாருக்கும் நன்றியுடனோ அல்லது இங்கு யாரும் யார் காலையும் கழுவி குடிக்கவோ சொல்லவில்லை. ஆனால் அறமற்றதனமாக துரோகி என்ற முத்திரை குத்துவது அற்பமான விஷயம்.
அப்போது பதவி இருக்கும் போது திமுகவின் முன்னணியினரோடு இருந்துக்கொண்டு தமிழ்நாடு அரசின் விருதையும், பதவிகளையும் பெற்று அனுபவித்து வெளிச்சம் தேடிக்கொண்டு இன்றைக்கு வேறு ஒரு கட்சியின் கவனதுக்காக கழகத்தின் மீது கண்டதை கழுவி ஊத்தும் சந்தர்ப்பவாத மனநிலை என்ற 'விமர்சனத்தையும்' எதிர்த்தரப்பினர் வைக்க நேரிடும்.
உங்களது திருநங்கை பிரெசை விளம்பரப்படுத்தியதும் அதற்கு உதவி செய்ததும் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் விசிகவின் சிந்தனைச்செல்வன், ரவிக்குமார் போன்றோர் தான். அவர்கள் தான் ஆதியிலிருந்து திருநர் சமூகத்துக்காக பேசியும் வருகின்றனர். ஆனால் இன்னவரை திருநருக்கு எந்த துரும்பையும் கிள்ளிப்போடாத கட்சியில் இருந்துக்கொண்டு கழகம் துரோகம் இழைத்தது என்பது என்ன நியாயம்?
திருநர் திருத்த சட்ட எதிர்ப்பு, பால்புதுமையினருக்கு வாரியம், அதற்கான அரசு கொள்கை, திருநர் நல வாரியம், திருநங்கை என்ற அங்கீகாரம், ஊக்கத்தொகைகள், விடியல் பயணம், சிறந்த திருநர் விருது என உங்களுக்கும் உங்களது சமூகத்துக்கும் எல்லாம் செய்த கழகம் உங்களுக்கு துரோகி ஆனால் திருநர் திருத்த சட்டத்துக்கு எதிராக வாயத்திறக்காத, அப்பன் பண்ண தப்பு பாட்டில் எட்டுக்கு பிறகு Pause விட்டு பாட்டு பாடிய நடிகன் உங்களுக்கு மீட்பர்.
நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தவறு தான் ஆனால் வரலாற்றை மறந்து கழகத்துக்கு துரோகி பட்டம் கட்டுவது அற்ப சந்தர்ப்பவாதம் என்பதன்றி வேறில்லை.
கலைஞர் சொன்னது தான் "நம்மால் பயன் பெற்றவர்கள் எப்போதும் நமக்கு நன்றியுணர்வுடன் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும் ஒருவருக்கு நாய் செய்யும் உதவியை நமக்கு கிட்டிய நல்வாய்ப்பாக கருதி செய்து முடித்ததும் மறந்துவிட வேண்டும் என்பதையுமே இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது"
- Gypsy
தமிமுன் அன்சாரி பாய் 🖤❤
கண் கலங்க வச்சுடீங்க 🥺🥺
IUML முஸ்லீம் கட்சி தான் தவெகவுடன் போய் இருக்கு ..!!
முஸ்லீம்கள் திமுக பக்கம் தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது கேட்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு பாய் 🖤❤
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
இது ஸ்டாலின் அவர்களுக்கும் பொருந்தும்..!
எதிர்த்து வெற்றி பெற்ற கட்சி தாங்க முடியாத அளவு வதைக்கும் போது தான் மக்களுக்கு திமுக நினைவு வந்து
கலைஞரையோ, புகழேந்தி ஐயாவையோ வெற்றிபெற விட்டிருக்கிறார்கள்..!
இப்படி ஒரு பாவப்பட்ட அரசியல் கட்சி இந்தியாவில் இருக்கிறதா?
2016 சட்டமன்றத்தேர்தலுக்கு சற்று முன்னதாக நடந்த நேர்காணல் இது...
தன்னுடைய முதல்கட்ட பரப்புரை பயணத்தை திருவாரூரில் முடித்து சென்னை திரும்பியிருந்தார்...
2011 தேர்தலுக்கு முன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்காக ஒரு நீண்ட நேர்காணல் செய்திருந்தேன்...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து வெளியேறியபோது ஒரு நேர்காணலும், 2014 நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னதாக ஒரு நீண்ட நேர்காணலும் கலைஞர் கொடுத்திருக்கிறார்.
ஆனாலும் காட்சி ஊடகத்திற்காக அவருடன் உரையாடிய முதல் நிகழ்வு இது... புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியராக இணைந்த 6 மாதங்களில் பதிவு செய்த நேர்காணல்..
தொடர் பரப்புரை பயணத்தினால் தொண்டை வலியுடன் இருந்தார்... ஆனாலும் சிறிது நேரம் ஒதுக்கி பேசினார். ”பரப்புரை” குறித்து கேட்டதும் அது “பசப்புரை” என்ற கவுண்ட்டர் உடனே வந்தது.. ஒவ்வொரு நேர்காணலின் போதும் இப்படியான அவரின் தனித்துவம் வெளிப்படும்.
அவரின் அரசியல் அனுபவத்தை விட என் வயது குறைவு என்றாலும் கள நிலவரம் குறித்த எங்கள் கருத்துகளையும் கேட்டுக்கொள்வார்.
கலைஞருடனான பிரத்யேக நேர்காணல்கள், செய்தியாளர் சந்திப்புகள், தனித்த உரையாடல்கள் என அனைத்துமே செய்தியாளர்களுக்கு பெரிய அனுபவம்தான். #Kalaignar103 (Thank you @RKRadhakrishn )
நம்மால் பலனடைந்தவர்கள் நம்மிடம் நன்றியோடு இருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்றுக் கொண்டது. 2016ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சொன்ன வார்த்தைகள் இவை. கலைஞரின் கடைசிப் பேட்டி அதுதான் என்று நினைக்கிறேன்.
நீண்ட பொதுவாழ்வில் யாருக்காக உழைத்தோமோ அவர்களில் பெரும்பான்மையானவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் இருந்த துர்பாக்கியம் கலைஞருக்கு வாய்த்திருந்தது. யாரிடமும் நன்றியை எதிர்பார்க்காத மனநிலை கலைஞருக்கு வாய்த்திருக்கலாம்.
கலைஞருக்கு நினைவு தப்பி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது கோபாலபுரத்திலும் காவேரி மருத்துவமனை வெளியிலும் கூடியிருந்தவர்களில் கட்சிக்காரர்களைத் தாண்டி அவரால், அவர் திட்டங்களால் பலனடைந்தவர்களும் இருந்தார்கள். பணி நிமித்தமாக இல்லாமல் கலங்கிய கண்களோடு வந்து நின்ற ஊடகவியலாளர்களை காவேரி மருத்துவமனை வெளியில் பார்த்திருக்கிறேன்.
கலைஞரின் கடைசி நாட்கள், அதிமுக தரப்பிலிருந்து பன்னீர்செல்வம், வேலுமணி எல்லாம் வந்து பார்த்து சென்ற இரவு. நேரம் நள்ளிரவைக் கடந்ததால் கோபாலபுரம் வீட்டு வாசலில் கூடியிருந்தவர்களை கு.க.செல்வமும், தமிழரசும் கலைந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுத்தவர்களில் ஒரு திருநங்கையின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது.
”ஏதேதோ பேர் சொல்லி எங்கள உலகம் அசிங்கப்படுத்துனப்போ திருநங்கைனு எங்களுக்கு மரியாதை கொடுத்தவர் தலைவர். அவர் இருக்குற இடத்துல நாங்களும் இருந்துக்குறோம்” என செல்வத்திடம் வாதிட்டுக் கொண்டிருந்தார்.
முறைசெய்து காப்பாற்றிய மன்னவனை இறையென்று பார்த்த தமிழ்நிலத்தின் நன்றியறிதல் அது. கலைஞரின் இறுதி நாட்களில் அவருக்காக கூடிய கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிகமிருந்தனர்.
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்; சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் என்ற வார்த்தைகள் கவியரங்க மேடைக்கானவை மட்டுமல்ல. முந்தைய தலைமுறைகளுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உறுதிப்படுத்திய போர் முழக்கம்.
இன்று கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்துகிற பலரின் பதிவுகளில் கட்டை விரல்களைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். நான் உட்பட பலரின் பெயருக்குப் பின்னால் போடப்படும் பட்டங்களுக்கு கலைஞரின் கட்டை விரல் போட்ட கையெழுத்துகள் காரணமாக இருந்திருக்கின்றன.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
என்ற வள்ளுவன் வாக்கு தன் காலத்திற்கு பிறகு கலைஞர் இந்த சமூகத்தில் அடைந்த இடத்திற்கு சான்றாக இருக்கும்.
2021ல் செல்வி. ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு வந்த அதிமுகவினர் சாரை சாரையாக கலைஞர் நினைவிடத்திற்கும் வந்தார்கள்.
அம்மாவைப் பார்க்க வந்தோம்; அப்படியே தலைவரையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம் சார் என அதிமுக கரைவேட்டியோடு ஊடகங்களிடம் அவர்கள் பேசிய வீடியோக்கள் இன்றும் உண்டு.
காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸும் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரியும் தலைவர் என்று விளித்து கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
தலைவர் என்ற இடம் இந்த இனமும் நிலமும் அவருக்கு கொடுத்தது.
புறநானூற்று தமிழ் போல் நின் புகழ் வாழ்க!
கட்டை விரல் காத்து தலைமுறைகளைக் கரை சேர்த்த தலைவருக்கு புகழஞ்சலி
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
தலைவர் டாக்டர் கலைஞர் செய்தியாளர் சந்திப்பு அணுகுமுறை பயப்படவில்லை குற்றம் செய்தால் தான் பயப்பட வேண்டும்...♥️♥️♥️🖤🖤🖤.🎉🎉🎉 இப்பொழுது இருக்கும் முதல்வர் செய்தியாளர் என்று சொன்னால் மரண பீதியில் ஓடுகிறார்...🤣🤣
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.