#Operationvijay
Today, on Kargil VijayDiwas, let's take a moment to honour and remember the sacrifices made by the valiant soldiers of the Indian Army.Let's especially remember the bravery of martyrs like Captain Vikram Batra, LieutenantManoj KumarPandey & Captain Anuj Nayyar.
TRIGGER ALERT 🚨
Heartbreaking Visuals from Rewa, Madhya Pradesh 💔
2 women buried alive by goons for protesting against the construction of a road on private land
This is beyond inhuman, this is monstrous. Complete collapse of law & order in BJP ruled MP 💔💔
#ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகான இந்த இரண்டு நாட்களில் அவர் குறித்து கேள்விப்படும் செய்திகள் வியக்க வைக்கின்றன.
சமூகத்தில் கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும், நிஜ வாழ்வுக்குமான முரண் அதிகமாகிக் கொண்டே போவது தெரிகிறது.
திரு. ஆம்ஸ்ட்ராங் ஒரு தலித் இயக்கத் தலைவராக இருந்து பல ஆயிரம் இளைஞர்களை கல்வியின் பக்கம் திருப்பி அவர்களை சுயமரியாதைச் சமூகமாக வளர்த்தெடுத்து இருக்கிறார்! ஒரு தனி மனிதன் இத்தனை பேர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக வாழ்ந்தது பிரமிக்க வைக்கிறது.
சமகால தலித் அரசியல் தலைவர்களில் பலரும் இவரளவுக்கு சமூகப்பங்களிப்பு செய்யாமலேயே பல கட்சிகளில் பல அமைப்புகளில் அரசியல் அதிகாரம் பெற்று உயர்ந்துள்ளனர். ஆனாலும் இவர் அரசியல் தளத்தில் தன்னை ஒரு சமூகப் போராளியாக மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டது மேலுமொரு வியப்பு.
தங்களுக்கென அங்கீகாரமோ, சின்னமோ இல்லாத கட்சிகளும், தலைவர்களும் கூட தேர்தல் அரசியலில் பெரும் பணம் ஈட்டும் காலம் இது. அதிலும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளைப் பிரிக்க ஏதுவாக சாதி, மத வேட்பாளர்களை நிறுத்தினால் ஒரு கட்டணம். நிறுத்தாமல் போனால் அதற்கு வேறொரு கட்டணம் என தற்கால அரசியல் போக்கு போய் கொண்டிருக்கிறது.
இதில், ஆம்ஸ்ட்ராங் நிரந்த சின்னம் வைத்திருக்கும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பெட்டியிலேயே சின்னம் வரக்கூடிய செல்வாக்கு கொண்டிருந்தும் அதை வியாபாரமாக்காமல் நேர்மறை அரசியல் செய்திருப்பது மதிக்கத்தக்கது.
தனக்கென பெரிய தளம் உருவாக்க வாய்ப்பிருந்தும் சிறிய வட்டத்தில் சிறப்பானதொரு சமூகப்பங்களிப்பை செய்துள்ளார்.
ஓர் உயிரை கொல்ல அற்பக் காரணங்களும், வன்மமும் கொலை வெறியும் கொண்ட ஒரு சிறு கும்பலும் போதுமானதாக இருப்பது திகைக்க வைக்கிறது.
தற்காலச் சமூகமும், திரைப்படங்களும் கூலிப்படை கொலைகளை Normalise செய்து விட்டிருப்பது பதின்பருவத்தினர் கூட தயங்காமல் கத்தியெடுப்பதில் இருந்து கண்கூடாக தெரிகிறது.
யார் பிடித்தாலும் கத்தி வெட்டும். யார் செத்தாலும் ஒரு குடும்பம் நிராதரவாக நிற்கும்.
சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, இது குறித்தான ஆக்கபூர்வமான விவாதங்களும், நடவடிக்கைகளும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
திரு. ஆம்ஸ்ட்ராங்க் இறப்பினால் தங்களின் தோழனை, வழிகாட்டியை, சகோதரனை இழந்து தவிக்கும் அத்தனை பேர்களுக்கும் எனது அன்பும், ஆறுதல்களும். 🙏