ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!*
ஆளுநர் உரையுடன் வரும் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்
மாண்புமிகு முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்) டாக்டர்.சந்தீப் ராய் ரத்தோர்.இ.கா.ப., மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
நாளை பகல் 12 மணிக்கு மனம் திறந்து பேசுகிறேன் - அண்ணாமலை.
சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் - அண்ணாமலை.
தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலை அறிவிப்பு.
அதிமுக தலைமை மீதுள்ள அதிருப்தியால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விராலிமலை தொகுதி முழுவதும் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ள நிர்வாகிகள்
*சென்னையில் திருச்சி சூர்யா கைது - பாஜக நிர்வாகி அலிசா கொடுத்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை*
தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாக பாஜக நிர்வாகி அலிசா புகார்
*தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு!*
*அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.*
கோவாவில் நடைபெற்ற சாஃப் அரையிறுதிப் போட்டியில், பூடான் அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
இந்தியா - அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் இறுதி செய்யப்படும்
- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
நாசிக்கில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில், பயிற்சியை முடித்த கையோடு ஹெலிகாப்டர் முன் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த கேப்டன் பரத் பரத்வாஜுக்கு சிக்கல்..
ராணுவ விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிப்பு
சென்னையிலிருந்து மதியம் 3 மணி அளவில் கிளம்பும் பல்லவன் ரயிலில் திடீரென காணாமல் போன ஐந்து வயது குழந்தையை எழும்பூர் ரயில்வே போலீசார் கண்டுபிடித்து கொடுத்தது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது