Ben Stokes, thank you for all the great memories. Your 135* innings in the 2019 World Cup Final and at Headingley were simply unforgettable. @benstokes38
கோரை, மாறோக்கம், சம்பா, எனத் தமிழால் "பின்னிப் புடல் எடுக்கும்" வாரம் இந்த வாரம். சாதா புடல் இல்லை பேய்ப்புடல். பெண் மகன், ஆண் மகள் என்பதோடு "பொம்பள பசங்க" என்ற தற்காலச் சொல்லாடலும் நோக்கத்தக்கது. தடதடக்கும் பரவசத்தோடு படிக்க முடிகிறது. களம் நிலைக்கிறது, தமிழ்ச்சுவை கூடுகிறது.
"மரம் சும்மா இருந்தாலும்
காற்று விடுவதில்லை..."
என்ற கவிதைக்குக் காட்சி வடிவில் தனது நடிப்பின் மூலம் உயிர்ப்பளித்தவர் திருப்பூர் த.மு.எ.க.ச தோழர் ஆர். குமார். ஆழ்ந்த இரங்கலும் இதயப் பூர்வமான அஞ்சலியும்.
திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் logic எனப்படும் தர்க்க ரீதியிலான நியாயத்தை நிகழ்த்திக் காட்டியவர். நேரில் உரையாடுகையில் மாற்றுக் கருத்திலிருந்தும் ஆக்கபூர்வமான நகர்வை விரும்பியவர் என்பதறிவேன். இளைப்பாறுக இயக்குநரே. எப்போதும் எம் நினைவில் இருப்பீர்கள்.
காலைப் பயணம்
நடத்துநரின் விசில் ஒலி
பறக்கும் காகம்
மழைத் துளிகள்
பேருந்துக் கண்ணாடியில்
மங்கும் மெரினா
சிக்னல் சிவப்பு
சக பயணியின் சிரிப்பு
நிலக்கடலை வாசம்
ஜன்னல் ஓரம்
காற்றில் பறக்கும் பயணச்சீட்டு
அமைதியில் கூவம்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விழா 2026 ஏற்புரையில் மதிப்பிற்குரிய சம்யுக்தா மாயா அவர்கள் தேவதச்சன் மற்றும் ரியோகான் கவிதைகளைக் குறிப்பிட்டது சிறப்பாக அமைந்தது. செறிவான உரை. விருதுக்கு வாழ்த்துகள்.
@VishnupuramPub@SamyukthaMaya
As a devoted fan of Indian women's cricket, I am inspired by Shafali Verma's explosive versatility and Jemimah Rodrigues vibrant energy. Their commitment, skill, and spirit make every match a joy to watch. The countdown to the Women's T20 World Cup has begun and I eagerly await.