எப்போது தன்னை மற்றவர்களிடம் இருந்து விடுவித்துக்கொண்டு…
தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்க தன்னைத்தானே தேற்றிக்கொள்ள தனக்குள்ளேயே புலம்பிக்கொள்ள தனக்குள்ளேயே அழுதுக்கொள்ள
தன் கண்ணீரை தானே துடைத்துக்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ அப்போதுதான் தனக்கென வாழ ஆரம்பிக்கிறோம்!!!
@vasloga இதுல என்ன சிரிக்க வேண்டி இருக்கு, இது மிகவும் கீழ்தரமான செயல். இதை பகிர்ந்து ஒருத்தன் இன்பம் அடையுறான் என்றால் எவ்வளவு மோசமான பிறவியாக இருப்பான் பாருங்க
புன்னகையோடு கடந்து போ!
ஆயிரம் காயங்கள்
ஆறுதல் இன்றி தவிக்கலாம்...
அர்த்தமற்ற மனிதர்களால்
அமைதி கூட குலையலாம்!
வாதிட்டு மாற்ற இங்கே
வழிகள் ஏதும் இல்லை...
வருத்தப்பட்டு அழுவதற்கும்
வலிமை ஒன்றும் தேவையில்லை!
ஒரு கால்பந்தாட்டக்காரன் தன் காலடியில் வந்துசேரும் பந்தை தன்னுடையது என எண்ணாமல் குழுவினுடையது என நினை. நீதான் 'கோல்' போடவேண்டுமென நினைக்காதே.பந்தை மேலெடுத்துச் செல்ல,உன் சக ஆட்டக்காரன் காத்திருக்கிறான். எங்கும் பலவீனத்திற்கான ஊற்றுக்கண் மனிதன்தான்.
-ஜே.ஜே.சிலகுறிப்புகள்
அண்ணா:C.V.சண்முகம் 30 MLA வோட நீங்க ஆட்சி அமைக்க உங்களுக்கு ஆகரவு தரோம் ஆனால் ஒரே ஒரு நிபந்தனைனு கேக்குறாரு..
ஆதவ் & புஸ்ஸி ~ அதான் 30 MLA வராங்களே வலுவான ஆட்சி அமைக்கலாம் துணை முதல்வர் தான தாராளமா கொடுங்க, பாத்துப்போம்..
அண்ணா:அவன் கேட்டது துணை முதல்வர் இல்ல😭..
இன்றைய இளைஞர்கள் பெரியாரியம், அம்பேத்கரியம் அல்லது மார்க்சியம் போன்ற ஆழமான உரையாடல்களில் நேரத்தைச் செலவிடத் தயாராக இல்லை. அவர்களுக்குத் தேவை "எண்ணத்திற்கும் செயலுக்கும்" இடையே இடைவெளி இல்லாத வேகம். இந்த 'இன்ஸ்டன்ட்' மனநிலைதான் அரசியல் சக்தியாக மாற்றியுள்ளது.
-வ.கீதா
செய்தியறியாமல்
"அம்மா எப்படி இருக்கிறார்" என்று
வினவுகின்ற ஒருவரிடம்
உண்மையைச் சொல்லத் தோன்றவில்லை.
அவர் உலகில்
அம்மா அதிகமாக மூன்று வருடம்
வாழ்ந்திருக்கிறாள்.
இன்னும் சிலகாலம் வாழட்டும்.
முன்பதிவு
செய்யவில்லை,
வரிசையில்
நிற்கவில்லை,
நன்கொடை
எதுவும் தரவில்லை,
ஆதார் அட்டை
ஜெராக்ஸ் கேட்கவில்லை,
பிறப்புச் சான்று
எடுத்துச் செல்லவில்லை,
மஞ்சப் பையில்
கல் சிலேட்டையும்,
பலப்பத்தையும்,
ஒரு வாய்பாட்டையும்
எடுத்துக் கொண்டு,
அப்பாவின் கையை
பிடித்துச் சென்று,
கையினால்
காதைத் தொட்டு,
ஆரஞ்சு மிட்டாயை
அனைவருக்கும்
கொடுத்து,
ஆனந்தமாய்
ஆரம்பமானதுதான்
என் படிப்பு.
காரணமே இல்லாமல் எதை வெறுக்கிறீர்களோ அதை கட்டாயம் ஒரு நாள் தேர்ந்தெடுக்கும் நிலையை காலம் உருவாக்கும்.
அர்த்தமற்ற வெறுப்புகளை உமிழ்நதபடியே இருக்கும் இதயத்தில் அனிச்சையாக ஒரு குற்ற உணர்ச்சி குவியும்.
நேசிக்க முடியாத போதும் ஏற்றுக்கொள்ள அது தயாராகும்.
போதுமென்றால் விட்டுவிடுங்கள். அதுவும் அன்பு தான்
ஏற்கனவே நிறைந்த குளத்தில் மீண்டும் மீண்டும் மழை பெய்தால் என்னவாகப்போகிறது
ஒன்றுமாகாது குளம் நீரை புறக்கணிக்கும் அவ்வளவே
-மீரா
அவ்வப்பொழுது ஏற்படும் உணர்வுகளுக்கு பெயர் கொடுக்காமல், நீட்டித்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளாமல் அவ்வுணர்வுகளில் வாழ்ந்து கடக்க வேண்டும்.
நீட்டித்து வைக்கும் முயற்சியில் உணர்வுகள் மரணித்து விடுகின்றன.அந்த உணர்வுகளுக்கு நாம் கொடுத்த பெயரில்லாமல் நிலைத்திருக்கின்றன!
-லதா
ஆண் எப்பவுமே சுபாவத்தில் பெருந்தன்மையான பிராணி. A noble animal.அதனாலயே அசடு. ஆயிரம் கிறங்கினாலும் அவன் பாதங்கள் பூமியில் ஊன்றியே இருக்கும்.அந்தந்த நிலைக்கு உடனே தன்னைச் சரிப்படுத்திக் கொள்வான்.
-லா.ச.ரா
யாராலும் நெடுநாட்கள்
எனை நேசிக்க முடியாது
முதலில் மௌனத்தை
ரசிக்கின்றனர்
பின்பு அதை உடைக்க
படாத பாடு படுகின்றனர்
பின் அந்த மௌனத்தை
திமிர் என்கிறார்கள்
பிரிந்த பிறகு பேச்சுக்குக்கூட
பேச மறுக்கிறார்கள்
எது ஈர்த்ததோ அதுவே
விலகிச் செல்லவும் உதவும்
உறவுகள் சிறுகதை
உணர்வுகள் தொடர்கதை !
சாளரன்
24.02.2026
@BJP4MaduraiWest@annamalai_k@BJP4MaduraiWest கல்லணை புதூர் கிராமத்தில் 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கிறது ஒரு நாள் கூட ராம சீனிவாசன் போன்றோர் கலந்து கொள்ளவில்லை...
@BJP4MaduraiWest@annamalai_k@BJP4MaduraiWest கல்லணை புதூர் கிராமத்தில் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெறுகிறது ஒரு நாள் கூட ராமசீனிவாசன் போன்றோர்கள் வந்து கலந்து கொள்ளவில்லை, தலைவர் அண்ணாமலை காதுகளை சென்றடையும் வரை பொறுமையாக இருந்த உங்களுக்கு நன்றி