திருநெல்வேலி: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளமொன்றில், 3 குட்டிகளை தெருநாய் ஈன்றதை அறியாமல் பள்ளத்தை மூடியுள்ளனர் ஊழியர்கள். ஒரேயொரு குட்டியை தாய் நாய் காப்பாற்றிய நிலையில், மற்ற இரு குட்டிகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. செய்வதறியாமல் தவித்த தாய் நாயை கண்ட அப்பகுதி விலங்கு நல ஆர்வலர்கள், வீடியோ மூலம் விஷயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து 24 மணி தேரத்துக்கு பின் குழிக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்த இரண்டு குட்டி நாய்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது. வெளியேவந்த குட்டிகளுக்கு, அவற்றின் தாய் பால் கொடுத்த காட்சி, அங்கிருந்தோரை நெகிழ செய்துள்ளது.
#Tirunelveli #Dog #Rescue