எதிர்பார்ப்பு
இடமற்று நிற்கும் கர்ப்பிணியின் பார்வையை தவிர்க்க பேருந்துக்கு வெளியே வேடிக்கைப் பார்ப்பதாய்ப் பாவனை செய்யும் என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய் நீ..?
காதலையா?🤷🏻♂️
ஒருத்தர் உன்னைய ரொம்ப care பண்ணாலோ இல்ல உனக்காக நிறைய effort போட்டாலோ அத எப்படி positive-ah accept பண்றியோ..!
அதே போல உன்னைய வெறுத்தாலோ avoid பண்ணாலோ அதையும் positive-ah accept பண்ணிக்கோ!
ஆரம்பத்தில கஷ்டமாதான் இருக்கும் ஆனா பழகிட்டனா எதையும் easy-யா கடந்து போக கத்துக்குவ...!
யாரையும் நம்பாதே என்கிறார்கள்.
சாப்பிட்டாயா எனக் கேட்பவர்களை
எந்த முகத்தை வைத்துக் கொண்டு சந்தேகிப்பது?
ஒரு வேளை,
சாப்பாட்டில் விஷம் வைக்கப் போகிறவர்களாகவும்
அவர்கள் இருக்கலாம் இல்லையா!
இருக்கட்டும்.
யாரும் இல்லாமல் இருப்பதற்கு அப்படி யாராவதாவது இருந்து விட்டுப் போகட்டுமே
தன்னை வெட்டும் போது கூட அந்த உயிர் துடித்திருக்காது.....
இப்பொழுது அவன் யார் என்றே தெரியாது....என்று சொல்லும் பொழுது தான் வலியில் துடித்திருக்கும் அவனின் இதயம்....இறந்தும் கூட....💔💔எப்ப மாறுமோ இந்த சாதி வெறி
உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்' என்றால் 'குடித்திருக்கிறாயா? போய்த்துங்கு என்கிறார்கள்..
இந்தக் காலத்தில் குடிக்காமல் நிதானமாக இருக்கும் யாரும் இப்படியெல்லாம் பேசமாட்டார்களா என்ன?
சமாதானப்படுத்தி களைத்துப் போய் நான் பாவம் இல்லையா? என்கிறாய்.
பார்ப்பதற்கே அவ்வளவு பாவமாய் தான் இருக்கிறது.
இருந்தாலும்,
ஒரு சண்டைக்கும் சமாதானத்திற்கும் இடையில் எந்தக் கெஞ்சுதல்களும் இல்லை எனில் அது என்ன சண்டை?
அது என்ன சமாதானம்?
அதனால் தான்,
இன்னும் கொஞ்சம்
கெஞ்சு..