I feel too much.
I wish I could turn it down, but this is how I’m wired. Heart wide open, no filter.
It hurts sometimes, yet it also lets me love deeper and care more.
Maybe that’s not a weakness.
It’s just me.
தனி உம்பர் ஆமே…!
கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே.
விளக்கம்:-
சீவன் தன் மலங்களைப் போக்குவதற்குக் பிறவிக் கடலின் கருவாயில் நின்று போர் செய்வதில் என்ன பயன்? அது அறிவிலிகள் செய்யும் செயல் ஆகும். உயர்ந்த உபசாந்த நிலையில் செய்கின்ற தவம் கைக்கூடினால், ஒருவன் மக்கள் விரும்பும் அனைத்தையும் அளிக்க வல்ல, ஒப்பற்ற, ஓர் தேவனாகவே ஆகி விடலாம்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
பாடலை கேட்டிருக்கோம் வரிகளை படிச்சிருக்கமா..இரண்டாம் சரணத்தில் ஜானகி தேனில் குழைந்தது போல பாட இளையராஜா பதில் பாடுவார்..
பெண் : கோடையில் வாடாத
கோவில் புறா
ஆண் : ராவில் தூங்காது ஏங்க
பெண் : காமனை காணாமல்
காணும் கனா.
மணிரத்தனத்து international levelக்கு அப்பவே கொடுத்த ‘பூ மாலையே’.
ஒரு பெண்ணை பல பொருட்களுடன் ஒப்பிட்டு வர்ணிக்க முடியும்..
ஆனால், ஒரு ஆணை ஒப்பிட்டு வர்ணிக்க முடியாமல் அல்ல...
அதற்கு தகுதியான பொருள் இந்த புலோகத்தில் இல்லை என்பதே உண்மை
சிவமாகும் அணுவனே…..!
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோட அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
விளக்கம்:-
மாயையின் காரியம் ஆகிய வித்தியா தத்துவங்கள் ஏழு. இவை சீவனுக்குத் துன்பத்தைத் தருவன. சுத்த வித்தை, ஈசுவரன், சதாசிவன், விந்து, நத்தம், சக்தி, சிவன் என்ற எழும் காரணமாகி நிற்பவை. இந்தக் காரியங்களும், காரணங்களும் நீங்கினால்,
திரு ஐந்தெழுத்து அமையும். சீவன் சிவன் ஆகும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
திருமந்திர பாடல்-2500.
உள்ளமும் இல்லை உருவில்லை தானே….!
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.
விளக்கம்:-
உள்ளமே உருவம் என்றும், உருவமே உள்ளம் என்றும் கூறுவதன் உண்மையை அறிந்து கொண்டு, உள்ளத்துக்கும் உருவத்துக்கு உள்ள உண்மைத் தொடர்பை உணர்ந்து கொண்டவர் ஞானியர். இவர்களுக்கு துன்பம் தரும் நரகமும் இல்லை; இன்பம் தரும் சுவர்க்கமும் இல்லை. இவர்களுக்கு முப்பாழ்கள் இல்லை. உள்ளம் இல்லாததால், உலகியலில் நாட்டமும் இல்லை. இவர்கள் உடலைக் கடந்து விளங்குவர்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே….!
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன் ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.
விளக்கம்:-
மாயப்பாழ், போதப் பாழ், வியோமாப் பாழ் என்ற மூன்று பாழ்களும் சிவசக்தியரின் அருளில் சீவன் அடங்கி இருக்கும் மூன்று நிலைகள் ஆகும். அந்தத் தூய்மையான சிவசொரூபத்தில் சீவன் அடங்கி இருப்பது தான் ‘தத்துவமசி’ என்ற சொல்லின் உண்மைப் பொருளாகும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
முகம் பார்க்க நானும் முடியாத நீயும்...
தூரத்து நிலவாய் நீ இருந்தாலும்,
என் எழுத்தின் வழியே உன்னை உணர்கிறேன் "என்னவனே"! ❤️🌌
இனிய இரவு வணக்கம்! 🌙✨
முயல் குட்டி🐇✨
#இரவுவணக்கம்#என்னவன்#TamilQuotes