யாரு ஃபெயிலியர் பர்சன் என்று சொல்றது!! என்ன பண்றது அக்கா நின்னா அத்தனை தேர்தலிலும் அன்ன போஸ்டில் ஜெயித்திருக்கிறார்கள் 🤣
அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு இது போல தேவையில்லாத விமர்சனங்களை செய்து கொண்டே இருந்தால் நாங்களும் ஒரு லிமிட் தான் பார்க்க முடியும் ...
@DrTamilisai4BJP
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗨𝗡𝗜𝗧𝗜𝗡𝗚 𝗛𝗢𝗡𝗘𝗦𝗧 𝗩𝗢𝗜𝗖𝗘𝗦 𝗙𝗢𝗥 𝗥𝗔𝗠𝗔𝗡𝗔𝗧𝗛𝗔𝗣𝗨𝗥𝗔𝗠
👫👬👭
ராமநாதபுரம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் நேர்மையான எண்ணம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களின் நிலைப்பாடு.
அந்த நோக்கத்திற்கான முக்கிய ஆலோசனைகள் மற்றும் மக்கள் மைய வளர்ச்சி குறித்த விவாதங்கள் ராமநாதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் என்பது வெறும் தேர்தலுக்காக மட்டுமல்ல... சமூக மாற்றத்திற்காகவும், புதிய தலைமுறையை உருவாக்குவதற்காகவும் இருக்க வேண்டும்.
அதையே We The Leaders Foundation செயல்பாட்டின் மூலம் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒரே மேடையில் கொண்டு வந்து மக்கள் சேவைக்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் பணியில் இந்த இயக்கம் முன்னேறி வருகிறது.
ராமநாதபுரத்தின் முன்னேற்றம் என்பது ஒரே ஒருவரின் பொறுப்பு அல்ல...
நல்ல எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் பொறுப்பும் கூட!
ஒன்றிணைவோம்... செயல்படுவோம்... வளர்ச்சியை உருவாக்குவோம்! 👍🏻
~ #பிரபாகரன்ஜி 💕
#Ramanathapuram #Annamalai #WeTheLeaders #Leadership #TamilNadu
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
Referral Code: WTL-26-145656
https://t.co/hamCQwg4bh
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
பாஜகவில் இருக்கும் பல பேச்சாளர்களை விட, எழுத்தாளர் பிரபாகரன் தேவர் அவர்களுக்கு பன்மடங்கு திறமை இருந்தும், இங்கு இருக்கும் திராவிட ஜனதாவால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி வீ த லீடரில் பிரகாசிப்பார் என்று நினைக்கிறேன்.
* திராவிட பாஜக கும்பல் தன்னை ஊடகங்களை சந்திக்க கடிவாளம் போட்டுள்ளது.
* தனக்கு எந்தவித நிபந்தனைகளையும், தடையையும் அண்ணாமலை விதிக்கவில்லை
* மிகவும் மரியாதையாக நடத்தினார். மேலும் உற்சாகப்படுத்தினார்.
* என்னிடம் இப்படி பேசிய அண்ணாமலை டெய்ஸியிடம் அப்படி பேச அவருக்கென காரணம் இருந்திருக்கும்.
- உமா ஆனந்தன் அம்மா
அம்மா போன்ற தைரியமான உண்மையான,நேர்மையான ஆளுமைகள் பாஜகவினுள் இருந்தே வெளிப்படையாக பேச தயங்குவதில்லை.
எதாவது வாரிய தலைவர் கிடைக்குமா இல்லை தமிழகத்தில் ஆளும் கட்சிகளுடன் இணங்கி போனால் எதாவது பிஸ்கட் போட மாட்டார்களா என திரைமறைவில் கொள்கையை அடமானம் வைக்கும் திஜக கும்பல்களுக்கு இவர்களது நேர்மையின் நிழலில் கூட நிற்க தகுதி கிடையாது.
அண்ணாமலையை "Failed Person" என்று கூறுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது விரக்தியின் வெளிப்பாடு.
தோல்வி என்பது பதவியை இழப்பதில் இல்லை; மக்களின் நம்பிக்கையை இழப்பதில்தான் இருக்கிறது @DrTamilisai4BJP அக்கா.
After watching Annamalai’s podcast, I’m certain that he is very particular about “Unlearning” and then “Relearning”
Without Unlearning, joining the movement won’t be beneficial to anyone!
Looking forward with an open mind… As I always believe, we do not need Politicians change, we need basic political change!
வீ த லீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை உரை..
"ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகள் துவங்கும் - அண்ணாமலை"
"சரியான பாதையில் எனது இயக்கம் சென்று கொண்டிருக்கிறது - அண்ணாமலை"
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews
மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக வேலை தேடி இங்கு வந்த வட மாநிலத்தவர் சிக்கும்போது அவர்களை #வடமாநிலத்தவர் எனக் குறிப்பிடாமல் என்னவென்று சொல்வது? அவர்கள் நம்மூர் பெயர்களோடு வளைய வரும் பங்களாதேஷ் மக்களாகக் கூட இருக்கலாம். pan card, ration card என்று போலி தஸ்தாவேஜுகளை TMC அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததே! வீட்டில் Deep cleaning செய்ய வரும் சிலரைப் பார்த்து பங்களாதேஷ் மக்களோ என்று சந்தேகித்திருக்கிறேன்.
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
அஸ்வத்தாமன் ஜி என் போன்றோர்களின் மரியாதைக்கு உரிய நண்பர்.
பல பிரச்னைகளில் ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக தனது கருத்தை முன்வைப்பவர்.
ஆனால் இப்போது அண்ணாமலை ஆதரவாளர்களை ஒரு வகையான EMOTIONAL TRAP ல் சிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்.
அஸ்வத்தாமன் ஜி சொல்கிறார் :- "பாரத் மாதா கீ ஜே என்று மனதார சொன்னவங்களால் பாஜகவுக்கு வெளியே இருக்க முடியாது!"- என்று கூறுகிறார்.
"பாரத் மாதா கீ ஜே" - "வந்தே மாதரம்" இதற்கெல்லாம் பாஜக ஏதாவது பேடன்ட் வாங்கி இருக்கிறார்களா என்ன?
உண்மையில் இதெல்லாம் ஒரு காலத்தில் காங்கிரஸ்காரர்கள் (அவர்கள் புத்தி நன்றாக இருந்த காலத்தில்) போட்ட கோஷம்!
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் மேடை ஏறும் போது - ஸ்தாபன காங்கிரஸ் மேடையில் - உணர்ச்சி பொங்க குமரி அனந்தன் இந்த முழக்கத்தை எழுப்பியதை - மக்கள் அதை எதிரொலித்ததை நானே தருமபுரியில் நேரடியாகக் கண்டுள்ளேன்.
இது போக எத்தனையோ காங்கிரஸ் மாநாடுகளில் போடப்பட்ட கோஷங்கள்தான் இவை!
எனவே பாரத் மாதா கீ ஜே - என்பவன் பாஜக தவிர வெளி ஆளாக எவனுமே இருக்க மாட்டானா என்ன?
அல்லது அப்படி "பாரத் மாதா கீ ஜே"- என்பவனிடம் - "அவ்வளவுதானே! இந்த கோஷத்தைப் போட்டுவிட்டாய்! இனி நீ பாஜகதான்! இந்தா பிடி உறுப்பினர் அட்டையை!"- என்று கையில் திணிக்க முடியுமா என்ன?
சொல்லப் போனால் பாஜக என்றில்லை - எந்த அரசியல் அமைப்பையுமே சாராத சாதாரண பொது ஜனங்கள் - இப்படி "பாரத் மாதா கீ ஜே!"- என்று உணரச்சி பொங்க தேசபக்தியுடன் முழங்க வேண்டும் என்பதுதானே நமது பேராவல்?
அதை விட்டு அதென்ன - "பாரத் மாதா கீ ஜே!"- என்று நீ கோஷம் போட்டுவிட்டாய் - நீ பாஜகவுக்கு வெளியே இருக்க முடியாது என்ற அதிரடி அழைப்பு?
அஸ்வத்தாமன் ஜி எல்லாம் மிகவும் நியாயமாகவும் நிதானமாகவும் யோசிக்கக் கூடியவர் - VERY BALANCED MAN!
பாவம் அவர் கூட இந்த அண்ணாமலை சூறாவளியில் நிலை தடுமாறுகிறார்!
"பாரதவிலாஸ்" - என்ற படம் சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த தேச ஒற்றுமையை வலியுறுத்திய திரைக்காவியம்.
அதில் "இந்திய நாடு என் வீடு - இந்தியன் என்பது என் பேரு"- பாடலில் - கடைசியில் "வந்தே மாதரம்"- "வந்தே மாதரம்" என்று கோஷம் ஒலிக்கும்.
அதில் சிறப்பு என்ன என்றால் இஸ்லாமியர் வேடம் என்ற வி.கே.ராமசாமி உட்பட - அதாவது அந்த முஸ்லீம் கதா பாத்திரமும் - "வந்தே மாதரம்"- என்று உணர்ச்சி ததும்ப முழக்கமிடுவதாக அந்தப் பாடல் இருக்கும்.
எனவே இப்படி EMOTIONAL TRAP செய்வது போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பை எல்லாம் மட்டுப் படுத்திக் கொண்டு - கட்சி பிரசாரத்தை முன்னெடுப்பது நல்லது!
WITH DUE RESPECTS TO ASWATHAMAN JI...
பாரத் மாதா கீ ஜே என்று மனதார சொன்னவங்களால்... வேறு கட்சியிலும் இருக்க முடியும்!
(Sindhu Bharathi சகோதரியின் அற்புதமான பதிவு நான் இப்பதிவை எழுதுவதற்கு தூண்டுகோல் ஆயிற்று.)
By Murali Seetharaman in FB
வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு இது. வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு பாரதத்திற்கு திரும்பும் தேசியவாதிகளுக்குதான் இதை உணர இயலும். அதிலும் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையை பாரத தாயின் மடியில் வைத்து எடுப்பதெல்லாம் வேறு லெவல்.
வேற எந்த நாடும் பாரத பூமியின் கால் தூசிக்கு ஈடாகாது.
It was more promising for #Tamilnadu and India when Modi, Amit Shah and Annamalai were on the same page. Let their uncompromising love for our country still run as an under-current even in their dissociation, for the benefit of us, the people. Let their spiritual association remain strong.
#WATCH | Tamil Nadu | Fans and supporters swarm former BJP leader Annamalai as he arrives at the Coimbatore International Airport, showering him with garlands, ceremonial shawls, and blessings.
கம்பவராதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் அண்ணாமலை அண்ணா பற்றிய முகநூல் பதிவு
உலகத்தார் வியந்திடவே ஓங்கும் நல்ல
உயர் தமிழர் தனைக்காக்க ஓய்வே இன்றி
நலம்திகழ ஆளுமையால் நிமிர்ந்து நின்று
நல்லோரை ஈர்த்தேதான் வெற்றி கண்டார்.
பலர் புகழ ஆற்றாமல் பகையைத் தேக்கி
பண்பற்றார் சிலர் அவரை ஒதுக்கி வைக்க
நிலமதிரத் துணிவோடு வெளியில் வந்து
நிம்மதியாய்ச் செயலாற்ற நினைவு கொண்டார்.
உண்மை தனை உணராது ஒதுக்கி வைத்தோர்
உளம் அதிரத் தனித்தே தான் தலைமை கொண்டு
எண்ணியதை நிறைவேற்றும் ஆர்வத்தோடு
எழுந்து புது அவதாரம் எடுத்து வந்தார்.
விண்ணதிர அன்பரெலாம் விரைந்து வந்து
விழுத்துணையாய் அவரோடு உடனாய் நிற்க
கண்விரித்து மாற்றணிகள் கவலை கொண்டு
கதியிழப்போம் என அஞ்சிக் கவன்று நின்றார்.
பல காலம் ஆட்சி தனைக் கையில் வைத்து
பாரில்தமை எதிர்த்திடவே இனியாரென்று
வலம் வந்தோர் வலிமையுடன் வந்து நின்ற
வல்லவரைக் கண்டேதான் மயங்கி நின்றார்.
நலமுறவே தமிழ் நாட்டின் பெருமை காக்க
நல்லவராய் வந்தவரைத் தமிழரெல்லாம்
தளமதனில் இனி நமக்கு நல்வாழ்வென்று
தாம் உரைத்து அவர் பின்னே திரண்டு நின்றார்.
மாற்றங்கள் செய்யவென வந்தோர்கூட
மன்னவரின் வருகையினால் மயக்கம் கொண்டார்
ஏற்றுரைக்க முடியாது இகழ்ச்சி செய்து
இயலாமையால் பேசி இனிமை கண்டார்.
வேற்றவரின் உரைக்கெல்லாம் அஞ்சிடாமல்
வேழம் என நின்றவரின் நிமிர்வு கண்டு
காற்றடித்த பக்கமதாய்ப் பறக்கும் நல்ல
காற்றாடி போல் மக்கள் தொடர்ந்து வந்தார்.
மற்றவரின் கீழ்மைக்கு விருந்திடாமல்
மண்காக்க நிமிர்வுடையோர் மட்டும் போதும்
எற்றித்தான் தீமைகளை எதிர்ப்போம் நாங்கள்
எங்கள் அணி எவரையுமே வெறுத்திடாது
பற்றித்தான் கைபிடித்து எளியோர் தம்மை
பாரினிலே உயர்த்துவதே எங்கள் வேலை.
முற்றித்தான் போயிருக்கும் தீமையெல்லாம்
முடித்திடுவோம் எனச் சொல்லி முடுகி வந்தார்.
தனை வளர்த்த தாய்க்கட்சி தன்னைப் போற்றி
தரமுடனே அவர் உரைத்த வார்த்தை கேட்டு
அனைவருமே கண்கலங்கி நின்றாரம்மா!
அவருடைய நன்றிதனைக் கண்டாரம்மா!
முனைப்போடு பாரதத்தைக் காத்து நிற்கும்
“மோடி”தனின் மேல் அன்பு குன்றிடாமல்
நினைந்தேதான் புதிய வழி சமைத்துக் கொண்டு
நிற்பதற்குத் துணிந்தவரைப் போற்றி நிற்போம்!
ஆற்றலொடு அறிவன்பு அறிவோர் சேர்க்கை
அஞ்சாத மனவலிமை ஆசையின்மை
நேற்றைவிடத் தமிழர்களை உயர்த்தும் எண்ணம்
நேர் நின்று எதிரிகளைக் காணும் வீரம்
போற்றித்தான் பெரியோரை உயர்த்தி வைத்தல்
புல்லர்களைத் துடைத்தெறிந்து வீசும் நோக்கம்
ஏற்று உயர் பண்பெல்லாம் எடுத்துக் கொண்டு
எழுந்தவரை இளையோர்கள் பணிந்து நின்றார்.
நாளொன்றில் பல லட்சம் தொண்டர் சேரும்
நயமிகுந்த வெற்றிதனை எவரே கொள்வார்?
வாள் ஒத்த கூர்மையுடன் வழிகள் சொல்லி
வருங்காலத் தலைமுறையை எவரே வெல்வார்?
நீளத்தான் தமிழ்நாட்டின் பெருமை யெல்லாம்
நெஞ்சத்துள் புகுமாறு எவரே சொல்வார்?
தேள் ஒத்து விடம் நல்கும் தீயோர் தம்மை
தீர்த்தேதான் தேயத்தை இவரே வெல்வார்.