3 Great tips to stop worrying what other people think of you.
1.Focus on what you need
https://t.co/0CEE6HBCam honest to yourself,not for others.
https://t.co/cEveIvmV5h life, and that's yours, don't let others design it for you.
எல்லாரும் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடபடுவதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று சொல்றீங்க. ஆனா வியட்நாம், தென் கொரியாவும் கூட இதனால் சந்தோஷப்படும்.
எப்படி?
இந்தியாவிலே மொபைல் parts மற்றும் பல்வேறு SOC தயாரிக்க ஏற்ற இடம் என்பது தமிழ்நாடு தான். அதனால் தான் Foxconn போன்ற பெருநிறுவனங்கள் சென்னையை சுற்றி அமைந்து இருக்கின்றன. இன்னும் சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளிய வர காத்திருக்கிறார்கள். மொபைல் மற்றும் சிப் தயாரிப்பில் மிக முக்கியமான விஷயம் - transport. ஏன் என்றால் சீக்கிரமாக produce பண்ணி transport செய்யப்படவேண்டிய பொருட்கள்..விமான போக்குவரத்து தான் அதிக சீக்கிரமாக செல்லும்.
சென்னையில் இருந்து பெங்களூரு அனுப்பி, இனி அங்கே இருந்து மொபைல், soc அனுப்புவது எல்லாம் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை. பக்கத்திலே ஏர்போர்ட் இருந்தால் தான் ஈசி
இப்போது சென்னை 2வது ஏர்ப்போட்டை நிறுத்தி இருப்பதால் இனி கம்பெனிகள் வர தயங்கும். சீனாவில் இருந்து வியட்நாம் அல்லது தென் கொரியா நாடுகளை நோக்கி செல்ல தான் வாய்ப்பு அதிகம். சென்னை, தாம்பரம், திருவள்ளூர், செங்கல்பட்டு வேலைவாய்ப்புகள் குறையும்.
ஓட்டு போட்ட genz தற்குறிகள் தங்கள் வேலை வாய்ப்புக்கான குழியை தோண்டி புதைத்து இருக்கிறார்கள் என்பதே நிஜம்.இதெல்லாம் புரிவதற்கு இன்னும் 10 வருஷம் ஆகும். அதற்குள் வியட்நாம், தென் கொரியா பொருளாதாரங்கள் எங்கேயோ சென்று இருக்கும்.
ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை.
அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும்.
சென்னை காணாமல் போயிருக்கும்.
போய் வாடா
என் பொலிகாட்டு ராசா….❤️
விஜய் சேதுபதி @VijaySethuOffl என்ற மகா கலைஞனின் நடிப்பு எல்லையின் ஒவ்வொரு பரிமாணங்களும் முழு அளவில் வெளிப்பட்டது "தர்மதுரை" படத்தில் தான் என்பேன். விஜய் சேதுபதி வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றியது.
எல்லாப் பாத்திரங்களுக்கும் அவரவர் எல்லையில் நின்று அற்புதமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
தர்மதுரை படத்தைப் பார்க்கும் போது ஒரு குழப்ப நிலையிலேயே உள்வாங்கிக் கொண்டேன். ஏனென்றால் ஒரு திரைப்படத்துக்கான கட்டுமானத்தை இந்தப் படைப்பு எவ்வளவு தூரம் நியாயம் செய்திருக்கிறது என்ற கேள்வியோடே படத்துடன் பயணித்தேன். ஆனால் படம் முடிந்த பிறகு இந்த நிமிடம் வரை என்னுள் ஒரு தாக்கத்தை விதைத்தது மாதிரி இருக்கிறது. சொல்லப் போனால் படம் முடிந்த பின்னர் அசை போட்ட காட்சிகளின் நினைவுகள் தான் இந்தப் படைப்பின் பெறுமதியை வலுப்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் சீனு ராமசாமிக்கு யுவன் ஷங்கர் ராஜா எவ்வளவு தூரம் நியாயம் செய்திருக்கிறார் என்பதைக் காட்சிகளோடு இழைத்த பின்னணி இசையும் அந்த இசையோடே பொருந்தி எடுத்து வரும் பாடல்களும் நிரூபித்துக் காட்டுகின்றன.
பாடகி மதுமிதா சிறுமியாக 30 வருடங்களுக்கு முன் Australia வந்த போது அவர் பின்னணிப் பாடகி இல்லை. ஆனால் இவரிடம் மிகப் பெரும் திறமை குடி கொண்டிருக்கிறது என்பதை அப்போது உணர்ந்திருந்தேன்.
பின்னர் 7G ரெயின்போ காலனி படத்தில் "கனா காணும் காலங்கள்" பாட்டு அதை நிரூபித்தது.
"போய் வாடா என் பொலிகாட்டு ராசா" https://t.co/yxtH9bYqip பாட்டை ஶ்ரீமதுமிதா "தர்மதுரை" க்காகப் பாடிய போது உருக வைத்து விட்டது அவரின் அசாத்தியப் பாட்டுத் திறன். இதே படத்தில் "எந்தப் பக்கம்" பாட்டுக்காக வைரமுத்துவுக்குக் கிடைத்த தேசிய விருது உண்மையில் இந்தப் பாட்டுக்குக் கிடைத்திருந்தால் வீண் சர்சைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்திருக்கும் பலம் பொருந்திய வரிகள்.
"எட்டு வச்சுப் போடா இவனே" என்று ஶ்ரீமதுமிதா எடுத்துக் கொடுக்கும் தருணம் அள்ளிக் கொடுங்கள் இன்னும் நிறைய வாய்ப்புகளை இந்தப் பாடகிக்கு என்று சொல்லத் தோன்றியது.
போய் வாடா.......
என் பொலி காட்டு ராசா.....
போராடு.....
சிறு மலையெல்லாம் தூசா.....
நல்லது செய்ய நெனச்சா
நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு
நாலு தெசையும் கிழக்கு…..
https://t.co/b6yd0ZcQO3
தர்மதுரை வெளிவந்து
இன்றோடு 10 வருடங்கள்.
2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
சில தருணங்கள் நம்மை இயற்கையுடனும், நினைவுகளுடனும், காலத்தின் பயணத்துடனும் ஆழமாக இணைத்துவிடுகின்றன. 🌱🌳❤️
#kodaikanal #lake #tree
எல்லா சண்டைக்கும் பின்பாக
முதலில் பேசும் நபரொருவர்
இருப்பார்.
எல்லா சண்டைகளும் ஆரம்பிக்கும்
முன்னர் அதை தடுக்க முற்படும்
நபரொருவர் இருப்பார்.
இருவருமே அன்பையும்
அன்பானவரையும் கொண்டாடத்
தெரிந்த பிறவிகள்.
-செல்வக்குமார் சங்கரநாராயணன்
Dear Friends,
To me, a film's true success or failure lies in whether it continues to live in the court of the people. With your overwhelming love, #Dharmadurai enters its 10th year today!
My heartfelt gratitude to Mr. RK Suresh & Mr. Venkat (Elder brother of RK Suresh) for giving me the opportunity to direct this film, and to every brilliant artist & technician whose art gave it soul.
@VijaySethuOffl@tamannaahspeaks@thisisysr@aishu_dil@studio9suresh@Vairamuthu@ctcupdates@onlynikil@SunTV@sunnxt@trendmusicsouth
#10YearsOfDharmadurai #DharmaduraiDecade
அந்த மனிதரும் தான்தான் அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்தேன் என கைது செய்யப்பட்டபோதே ஒத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்.. இருந்தும் ஆசிரியரையும் அந்த வழக்கில் அந்த மாணவி ஏன் கோர்த்துவிட்டாள் என்பதுதான் அதிர்ச்சியான பின்னணி.
மிகவும் ஏழ்மை பின்புலத்தைக் கொண்டவர் அந்த மாணவி.. தாய் தந்தை கூலி வேலைக்குச் செல்பவர்கள்.. அவளின் பெரியப்பா உறவு முறைகொண்ட ஆள்தான் அந்த பாலியல் குற்றத்தை செய்தவர்.. உடல்நிலை சரியில்லாமல் பாட்டியோடு ஹாஸ்பிடலுக்கு சென்ற இடத்தில் அவள் கருவைச் சுமப்பது தெரிந்து.. போலீஸுக்கும், சம்மந்தப்பட்ட பள்ளிக்கும் மருத்துவமனை சார்பில் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அங்குதான் ட்விஸ்ட்.. தலைமை ஆசிரியரும் அந்த மாணவியும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள்.. தலைமை ஆசிரியர் வீட்டில் அந்தப் பெண்ணின் அம்மா வேலைக்கு செல்வாராம்.. பிரச்சனை இப்படியானதும் தலைமை ஆசிரியர் அந்தப் பெண்ணின் வறுமையைப் பின்னணியைப் பயன்படுத்தி.. அவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவதாக சொல்லி, ஆசிரியர் சதீஷையும் இதற்குள் இணைத்து இருவர் மீதும் குற்றச்சாட்டை வைக்க சொல்லியிருக்கிறார். இதன் பின்னால் இருந்தது தலைமை ஆசிரியருக்கு சதீஷ் அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி.. நம்ம ஊரில் .. நம்ம பள்ளியில் இன்னொருவன் ஹீரோவாக இருப்பதா என்கிற அற்ப ஈகோ.. தலைமை ஆசிரியராக அவர் இருந்தாலும், மாணவர்களும் சரி, ஊர் மக்களும் சரி சதீஷ் அவர்களையே எல்லாவற்றிலும் முக்கியத்துவம் கொடுத்தது அந்த தலைமை ஆசிரியருக்கு தாங்கிக்கொள்ள இயலவில்லை.. உள்ளுக்குள் சதீஷை பழி வாங்க தருணம் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்.. அதற்கு வாகாக மாணவி விஷயம் கிடைக்க நேக்காக கோர்த்துவிடச் சொல்லி.. இன்னொரு மாணவியையும் மிரட்டி பொய் சாட்சி சொல்ல வைத்திருக்கிறார்கள்.. பொய் சாட்சி சொன்ன மாணவியின் தாய் அந்த மாணவியை கோர்ட்டுக்கே அழைத்து வந்து உண்மையை சொல்ல வைத்திருக்கிறார்.
டி.என். ஏ டெஸ்ட் எடுத்தால் , சதிஷ் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிந்துவிடும் என்பதற்காகத்தான் உண்மையாக பாலியல் தொல்லைக் கொடுத்தவரையும் சேர்த்து இருவரும் தன்னிடம் தவறாக பழகினார்கள்.. இந்த கருவிற்கு இருவரில் யார் காரணம் என தெரியவில்லை என சொல்ல சொல்லியிருக்கிறார்கள் என்பது வரை அம்பலமாகியிருக்கிறது.. இவற்றை எல்லாம் நிரூபித்து ஆசிரியர் சதீஷ்குமார் இன்று வெளியே வந்துவிட்டார்.. ஆனாலும் அவருடைய வேலை திரும்ப கிடைக்கவில்லை.. அதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்.. அதைவிட அவர் சொல்லி வேதனைப்பட்ட விஷயம் .. நிரபராதி என்று என்னால் நிரூபித்துவிட முடியும்னு நம்பிக்கையோடு இருந்தேன்.. அதன்படி நிரூபிச்சு வெளில வந்துட்டேன்.. ஆனால் இந்த சமூகத்தில் நான் இழந்த மரியாதையை.. பழைய வாழ்க்கையை என்னால் மீட்டு எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.. போக்சோவில் கைதானவர் என்பது ஒன்றே இவரை கேவலமாக பார்க்க போதுமானதாக இருக்கிறது என்பதனை சொல்லி மீண்டும் உடைந்த போது.. கேட்கிற நமக்கே அத்தனை பதறுகிறது.. அனுபவிக்கிற அவருக்கு இது வாழ்நாள் நரகம்.
அவர் இப்பவும்.. POCSO குறித்தும், அதன் கடுமையான தண்டனைகள் குறித்தும் ஆதரவாகவே பேசுகிறார்.. எத்தனையோ குழந்தைகளை சீரழிக்கிறார்கள் அவர்களுக்கு இப்படியான கடுமையான தண்டனைகள் தேவைதான் என்கிறார்.. ஆனால் அவர் வைக்கிற கோரிக்கை.. வைக்கப்படுகிற குற்றச்சாட்டு உண்மையா என தீவிரமாக விசாரித்த பின் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்பதே.
நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது இம்மாதிரி விஷயங்களால்தான் சொல்லப்படுகிறது.. ஆசிரியர் சதீஷிற்கு காலம் மீண்டும் அவரின் பழைய வாழ்வை மீட்டுக்கொடுக்கும், கொடுக்க வேண்டும்.
நேர்காணலின் இணைப்பு...
https://t.co/a1u3TQIvSB
ஐயா தயவுசெய்து கல்வித் துறை அதிகாரிகள் அளவில் ஒரு குழு அமைத்து உண்மைத் தன்மையை,நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து மீண்டும் இவருக்கு பணி வழங்க வேண்டும்.. இவர் வாழ்வில் காப்பாற்ற வேண்டும்..
@CMOTamilnadu@imrajmohan 🙏🙏🙏
'மாமனிதன்' திரைப்படத்தின் கதையை அவருக்கு நான் சொல்வதற்கு உதவியவர் என் நண்பர் இயக்குநர் ராம். அப்பொழுது அவர் நோன்பில் இருந்தார்.
ஒரு ஈசிச்சேரில் சாய்ந்தபடியே முழுக்கதையையும் கேட்டார். அவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான சந்திப்பு.
அந்தப் படத்தை அவரை வைத்து என்னால் எடுக்க முடியவில்லை.
அதன் பிறகு, கேரளாவில் நடந்த ஒரு திருமண விழாவில் கூட்ட நெரிசலால் அருகில் செல்ல முடியவில்லை. ஆயினும் என்னைக் கடந்து சென்றவரிடம், "வணக்கம் சார் " என்றேன்.
சென்றவர் நின்று, இரண்டடி பின்னோக்கி வந்து என் கைகளைப் பற்றிச் சிரித்துவிட்டுச் சென்றார். அந்த அங்கீகாரம் என் மனதை மிகவும் தொட்டது.
எனக்காக அவர் பின்னோக்கி வந்த அந்த இரண்டடி எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என் அருகில் இருந்த உதவியாளரிடம் சொன்னேன்: "இந்த இரண்டடிதான் சினிமாவில் நான் பெற்ற ஆசீர்வாதம்!"
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள். 🌺
#Mammootty #Cinema
இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான் .
நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே.