நஞ்சினை பரிமாறுகிறார்களென தெரிந்தும் பிரியாணி உண்பதனை போல ஏன் ருசித்துக் கொண்டிருக்கிறாய்…
எனக்கு வேண்டியது சுவையோ உணவோ அல்ல பரிமாறும் ஒரு கரம் அவ்வளவுதான்!
எதுவும் இல்லாத வெறுமையில் ஏதேனும் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே…
மகன் தந்தையிடம்,
"வாசலில் குப்பைக்காரர் நிற்கிறார்" என்றான்.
தந்தை சொன்னார்: மகனே! நாம்தான்
"குப்பைக்காரர்கள்" அவர் "சுத்தக்காரர்."
நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்!
🙂
நன்றி
@i_akaran
தொட்டுப் பார்க்கவே
பிடிக்காத புழு தான் பிறகு
அனைவரும் தொடுவதற்கு
ஆசைப்படும் பட்டாம்பூச்சி..!🦋
உங்களை சிலருக்கு
பிடிக்கவில்லையெனில்
கவலை வேண்டாம்..!
பபி
பேருந்தில் டீக்கடையில்
நண்பர்களின் தற்செயல்
சந்திப்புகளில் கேட்கப்படும் முதல் கேள்வி
காயத்ரி எங்க இருக்கா மாப்ள?
என் பதில்
பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல.
-நா.மு