தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது..
6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை..
பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்..
தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்..
“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.
அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்?
மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்..
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!
ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை!
இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது..
புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்..
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா?
இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்..
(1/2)
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி நாகப்பன் வீதி மற்றும் சண்முகநாதன் வீதி பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி ராமநாதபுரம் பகுதி, சுப்பையா லே-அவுட் மற்றும் திருவள்ளுவர் நகர், சவுரிபாளையம் பிரிவு பகுதிகளில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி ராமநாதபுரம், சூரியன் வீதி பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி ஒலம்பஸ் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி ராமநாதபுரம் பகுதி, பெரியார் நகரில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி புலியகுளம் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி கொண்டசாமி லே-அவுட் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி அம்மன்குளம் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், இன்று கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, கரூர் வெண்ணமலை அன்புக் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அருஞ்சுவை உணவு வழங்கப்பட்டது..
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பொருளாதாரத்தில் பின்தங்கி, கொடிய வறுமையில் சிக்கித் தவித்த தமிழ் மக்களை, வறுமையில் இருந்து மீட்டெடுத்து, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் நமது தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
வறுமையை ஒழித்து, பெண்ணடிமைத்தனம் ஒழித்து, பெண்கள் முன்னேற்றத்தை உண்டாக்கி, கல்வி கொடுத்து, கற்றவர்களுக்கு வேலை கொடுத்து, சமூக நீதியை நிலைநாட்டி, தமிழ் வளர்த்து, மாநில உரிமைகள் காத்த மாபெரும் செயல்களை செய்துகாட்டியவர் தலைவர் கலைஞர் தான்.
தொண்டர்களை அரவணைத்து, கழகத்தை பொன்விழாக் காணச்செய்த
ஒப்பற்ற ஆளுமை.
மாடர்ன் தமிழ்நாட்டின் சிற்பி, தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளில் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் அவர் ஆற்றிய தொண்டினை நினைவு கூர்வோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியை கொடுத்த மாண்புமிகு தலைவர் @mkstalin அவர்களது வழிகாட்டுதலில், மாண்புமிகு இளந்தலைவர் @Udhaystalin அவர்களது வழியில் கழகம் காத்து, தமிழ்நாட்டை பாதுகாப்போம் என்று இந்த பிறந்தநாளில் உறுதியேற்போம்.
முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட நாயகர் மாண்புமிகு தளபதி அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் நல்லாசிகளுடன், தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, இன்று கரூர் பழைய பேருந்து நிலையம் அருகில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில், கரூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில், இன்று, பொதுமக்கள் கோடை வெப்பத்தை தணிக்க, நீர்மோர் பந்தலை திறந்து வைத்த போது..
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திலேயே மிகச்சிறந்த திட்டம் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'.. Trendsetter திட்டம்..
கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டு மகளிர்களுக்கு வரவு வைக்க எதற்கு கால அவகாசம்?
இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்..
உங்களின் Reels lifeஐ ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் Real lifeஐ கவனியுங்கள்..
தமிழ்நாட்டு மகளிர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் பயன்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை உடனடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்..
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படியும் நலத்திட்டங்கள் வாயிலாகவும் கடந்த ஆண்டை விட அதிகமாக, 95.2% அளவில் மாணவச் செல்வங்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 30வது இடத்திலிருந்த கரூர் மாவட்டம் இன்று 15வது இடத்திற்கு முன்னேறி உள்ளதையும், கோவை மாவட்டம் 13வது இடத்தை அடைந்துள்ளதையும் காணும் போது மகிழ்வடைகிறேன்.
தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் சிறிதும் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..
#12thResults #Tamilnadu