அடப்பாவிகளா :
2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது..
இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
வில்லாதி வில்லன் என்றால், அது விஜயபாஸ்கர் தான்!
இவர் ஒரு சரித்திர பதிவேட்டு குற்றவாளி எனச் சான்றிதழ் பெறத் தகுதியானவர்.
ஆனால், ரொம்ப ஸ்மார்ட்டானவர். ஆகத் திறமை வாய்ந்த ஒரு அமைச்சர், எப்போதும் புன்சிரிப்பு, பணிவு, கனிவு என்பது போல தோற்றம் காட்டி வளைய வருவார். ஆனால், இயல்பிலே அவர் ஊழல்முறைகேடுகளில் கொடி கட்டிப் பறப்பவர். அதாவது மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைப்பூச்சி போன்றவர்.
சுகாதாரப் பணியாளர்களான செவிலியர்கள் பெறுவதோ அடிமாட்டுச் சம்பளம். அந்தச் சம்பளத்திலும் கமிஷன் பிடுங்க தனியார் நிறுவனம் மூலம் திட்டம் தீட்டி அம்பலப்பட்டவர் தான் விஜயபாஸ்கர்.
2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், புகார்தாரர் ஒருவரிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பறித்ததாக அவர் மீது சிபி-சிஐடி (CB-CID) வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதை திமுக அரசை சரிகட்டி சமாளித்தார்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது (2016-2021), வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மற்றும் இவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் இன்று வரை நடவடிக்கையின்றி தப்பித்தார் என்றால், திமுகவிலும் மிக நல்ல தொடர்பில் இருந்தார்.
இளைஞர்களை சீரழிக்கும் குட்கா விற்பனையை அனுமதித்தற்காக 39.91 கோடி லஞ்சம் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நவம்பர் மாதத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ஒரு ரெய்டு நடந்தது.
அவரது இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிய வகையில் கையூட்டாக விஜயபாஸ்கருக்கு ரூ.5.16 கோடி கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் ரூ. 2 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரம் கையூட்டாக கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூ.32 லட்சம் லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது.... தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூ.1.28... கோடி லஞ்சம் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டது.
எனில், அதற்கு முன்னும், பின்னுமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்…! அந்த வகையில் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியே இந்த வில்லங்க விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப் பெரிய கோடீஸ்வராக தற்போது விஜயபாஸ்கர் உயர்ந்துள்ளதற்கு பின்னணியில் எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் மட்டுமின்றி, இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருபவர்.
ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 2,000 முதல் 5,000 வரை தந்து எம்.எல்.ஏ ஆனவரான விஜயபாஸ்கர் தற்போது ராஜுனாமா செய்திருக்கிறார் என்றால், இழந்த பணத்தைவிட அதிக ஆதாயம் கருதியே அடுத்தகட்ட நகர்வை எடுத்திருப்பார் என்பது உறுதி.
இவரை தற்போது நேர்மையான ஆட்சி தர ஆர்வம் காட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கக் கூடாது. அப்படி இணைத்தால், அது தமிழக *தற்கொலை*க் கழகமாகிவிடும்!
சாவித்திரி கண்ணன்
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
'களவும் கற்று மற', என்று சொல்லுமளவுக்குக் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது தமிழர் சமூகம். பிற மொழிகளை மாணவர்கள் கற்கக் கூடாது எனச் சொல்வது நியாயமாகுமா?! அதுவும் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் அவற்றைக் கற்கக் கூடாது என்பது எந்தவிதத்தில் சரி? அவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு ஏன் மறுக்கப்படவேண்டும்?
#மும்மொழிக்கொள்கை
@Anbil_Mahesh
#ThreeLanguagePolicy
தமிழ் கலாச்சாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நா.வில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன்! உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாச்சாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது, இது இந்த மாநிலத்தின் சிறப்பு மிகு கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! இன்று மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை.