நமக்கு பிடிக்கும் என்பதற்காக குறைகளை எல்லாம் நிறைகள் என எண்ணிக் கொண்டு வாழ வேண்டியதில்லை. மாற்றாக குறைகளை நிறைகளாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து மகிழலாம்.
அன்பின் அடிப்படைத் தன்மையே குறைகளற்று எதையும் நிறையாய் காண்பது அதற்காக குறைகள் ஒருபோதும் நிறைகள் ஆவதில்லை.
உதவி செய்யும் மனம் உள்ளவர்களை, இரக்கம் இல்லாத மனிதர்களாக மாற்றிவிடும் காலத்திற்குத்தான் கொஞ்சமும் இரக்கமில்லை.
நிறையவே மாறிவிட்டாய் எனும் சொற்கள் காலத்தினால் உருவாக்கப்படுபவை.
நிறையவே மாறித்தான் போனீர்களோ!
@JayaSri84768448 நன்றிங்க 😊 முகம் தெரியாதவர்கள் செய்யும் உதவி காலத்திற்கும் மறப்பதில்லை. உதவி செய்து துயரம் வந்தபோதும் உதவி செய்தோம் என மன நிறைவு கொள்பவர்கள் குறைவு.
என் விருப்பத்திற்கா பிறந்தேன், விருப்பப்பட்டா வாக்கப்பட்டேன், விருப்பப்பட்டா வேலைக்குப் போனேன், விருப்பப்பட்டா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என ஒரு விருப்பமற்றத் தன்மையை காலம் நம்மீது திணித்துக் கொண்டிருப்பதாகத் தோணும்.
உண்மையில் விருப்பம் என்பது விருப்பமற்றத் தன்மைதான்.
நேரமிருந்தது. வானம் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
சும்மா இருந்தேன் எனச் சொல்ல இயலாதபடிக்கு வானத்துப் பறவைகள் சில. வான் நோக்கிய மரங்கள் சில எனப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
வானமும், பறவைகளும், மரங்களும் என்னை பார்க்கவும் செய்ததால் அவையும் சும்மா இருக்கவில்லை.
வீட்டு முன் முதன் முதலாக ஓர் அழகிய கோலம் ஒன்றை போட்டுவிட்டு வீட்டுக்குள் செல்கிறாள் சிறுமி.
அவள் சென்றதும் அவள் போட்ட கோலத்தை கண் கொட்டாமல் பார்க்கிறான் சிறுவன்.
கோல மாவுக்கென சில பல எறும்புகள் அங்கே ஊர்ந்து வருகின்றன.
கோலம் போடுவது அழகியல் மட்டுமல்ல, அது ஒரு பேரழகிய வாழ்வியல்
நாமே ஒரு பேரழகிய, பேரறிவுமிக்கப் புத்தகம்.
நமது வாழ்வும் ஒருவகை அனுபவப் பாடம்தான்.
இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாமோ என ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும்.
வாசிக்கப்படாமல் போகும் புத்தகங்கள் பல.
@banup_0803 மிகவும் வருத்தங்கள் சகோ. அவர்தம் நினைவுகள் நம்மை வழிநடத்தும். வருடந்தோறும் ‘திதி’ எப்போதென மறக்காமல் கேட்டுவிடுவார் அக்கா.
இன்றுவரை அம்மாவும், அப்பாவும் கனவில் வந்து போவார்கள், இறந்து போனார்களே, எப்படி உயிரோடு என கனவிலேயே வினா எழுப்பும் மனம்.
அவர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை.
அம்மா இறந்து போன செவ்வாய்க்கிழமை, அப்பா இறந்து போன வெள்ளிக்கிழமை பல வருடங்கள் ஆனபோதும் ஒருவிதமான மன இறுக்கத்தை உண்டாக்கியபடியே இருக்கும்.
பாவம், கிழமைகள் என்ன செய்யும்.
எப்போதும் பார்த்து இரசித்துக் கொண்டே இருக்கக்கூடிய முகம் அது, எப்போதாவதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
எப்போதாவது பார்க்கும் முகம் எனிலும் பேரழகியச் சிரிப்புடன் எப்போதும் கண்களில் தவழ்கிறது.
எதையோ நினைத்தபடி பிறர் சொல்வதை முழுவதும் கேளாமல் அமர்ந்திருக்கிறான் ஒருவன்.
என்ன சொன்னோம் எனச் சொல்லச் சொல்லி அவனிடம் கேட்டால் திருதிருவென விழிக்கின்றான்.
அங்குதான் அமர்ந்திருக்கிறான், ஆனால் எங்கெங்கோ அலைந்தலைகிறான்.
மனிதர்களை மெதுவாகத் தின்னுவிடும் அவர்தம் கவலைகள்.
மக்களின் நலன் குறித்து வாய் கிழியப் பேசும் அரசியல் கட்சி (தலைவர்கள்)தரகர்கள் ஒன்று அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது ஐந்துக்கும், பத்துக்கும் அலைகின்ற ‘அல்லக்கை’ போக்கை கைவிட்டுவிட்டு கட்சியைக் கலைத்துவிட்டு ஆக்கப்பூர்வமானச் செயல்களில் ஈடுபட வேண்டும்.