தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
திருப்பூர் மாவட்டம் ஊஞ்சவேலம்பட்டியில்
உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வெற்றி வேட்பாளர்கள் @JayakumarTprDMK , ஆ.சுதாகர், நித்தியானந்தன் ஆகியோருக்கு ஆதரவாக
இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
அடிமைகளின் முகமூடியை அணிந்து கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் பாசிசவாதிகளை தோல்வி அடைய செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தோம்.
பாசிசத்தை எந்த வழியிலும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
#VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#KovaiwithDMK
கோவை தெற்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களுக்கும், கோவை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @dselva88 அவர்களுக்கும் அலைகடலென கூடியிருந்த கோவை மக்களிடம் இன்று வாக்குச் சேகரித்தோம்!
கோவை 10/10! 🖤❤️
#DMK4TN#VoteForDMK
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 அரசு அமைத்திட, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.வி.செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர், ஈரோடு மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.முத்துசாமி அவர்களுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் தோழர்களோடு சென்னிமலை ஒன்றிய கழகத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டபோது.
@mkstalin@udhay_stalin@V_Senthilbalaji @erode_muthusamy #dmk4tn #dravidamodel #stalinbuildstn #erode #meenajayakumar
ஆலங்குடி தொகுதியில், மீண்டும் உதயசூரியன் உதிக்க வேண்டுமென, கழகத்தின் வெற்றி வேட்பாளர்- மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @SMeyyanathan அவர்களுக்கு இன்று மாலை வாக்கு சேகரித்தோம்.
🌼ஐந்தாண்டு கால ஆட்சியில், அளவில்லா சாதனைகள்,
🌼 அடுத்து அமையப்போகும் திராவிட மாடல் 2.0- வில் 500+ வாக்குறுதிகள்,
🌼 ஆலங்குடி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் ஆகியவற்றை பட்டியலிட்டு, உரையாற்றினோம்.
பத்து தோல்வி போதாமல், 11-வது முறையாக மக்கள் மன்றத்தில் தோல்வியடைய தயாராக இருக்கும் டெல்லி அடிமைகளை, நிரந்தரமாக நிராகரிப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்