சட்டமன்றத் தொகுதிதோறு��் நம் @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை, வார்டு, பாகங்களில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் சூழ்ச்சிகளை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல பணியாற்றவிருக்கும் இளம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @arivalayam @krnrajeshkumar @pssrinivasandmk @ViswaSingDMK
கழகத்தின் வலிமையை மென்மேலும் கூட்டிட #ஓரணியில்_தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று மேற்கொள்ள வேண்டும் என மதுரை பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
அதனைச் சிறந்த முறையில் செயல்படுத்த கழகத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற, மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதிப் பார்வையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
கழக இளைஞர் அணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துக்கூறி, #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கும் இளைஞர் அணி தனது முழு ஒத்துழைப்பை வழங்கிடும் எனவ��ம் உரையாற்றினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 விழுக்காடுகளுக்கும் அதிகமான வாக்காளர்களை கழக உறுப்பினர்களாக இணைக்க உறுதியேற்போம்!
ஓரணியில் நின்று #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு! @arivalayam
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் மாவட்டத்திற்குப் ப���திதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய-நக-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளரும், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் @sivasankar1ss அவர்கள் கலந்துகொண்டு, இளைஞர் அணி நிர்வாகிகள் ஆற்றவேண்டிய கழகப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் @C_ANAND_KUMAR முன���னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து
@SuriyaKML அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கபூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து @VigneshAnand_Vm அவர்களும் புதிய நிர்வாகிகளுக்குப் பயிற்சி வழங்கினர்.
#Elayarajan #கழக_இளைஞர்_அணி
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் முதல் கிராமங்கள் வரை நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்த உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலைகள் - செப்பனிட வேண்டிய சாலைகள் - தற்போது நடைபெற்று வரும் சாலைப்பணிகள் - புதிதாக இட வேண்டிய சாலைகள் போன்றவற்றின் நிலை மற்றும் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
மேலும், நெடுஞ்சாலைகள் குறித்து ‘நம்ம சாலை’ செயலியில் பொதுமக்கள் கருத்துக்களைக் கூறி வரும் நிலையில், ஊரக சாலைகள் உட்பட அனைத்து ���ாலைகள் குறித்த தகவல்கள் / கோரிக்கைகளை ‘நம்ம சாலை’ செயலியின் மூலம் தெரியப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினோம்.
பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் - போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு சாலைகளை பராமரிக்கவும் - புதிதாக மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கினோம்.
குறிப்பாக, மழை காலங்களில் சாலையின் தன்மையால் விபத்து ஏற்படுவது போன்ற அசாதாரண சூழல��களை முற்றிலும் தவிர்ப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டோம்!
@KN_NEHRU @Dayanidhi_Maran
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர��கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 5:
இந்திய ஒன்றியத்திலேயே `நம்பர்-1’ மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைத்து வரும் திராவிட மாடல் முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி!
இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு 9.69% என்ற பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால இருண்ட ஆட்சியில், சராசரியாக 1.36 சதவிகிதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி பொறுப்���ேற்ற பின், வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் வகுத்து, சிறப்பான திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தியதன் விளைவாக 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மேலும் திராவிட மாடல் ஆட்சியின் சீரிய முன்னெடுப்புகளால் 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்காக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
இப்படி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உயர காரணமான ‘திராவிட மாடல் நாயகர்’, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்க��ள்கிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 11:
234 தொகுதிகளிலும் கண்டன பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிர்வாகிகளுக்குப் பாராட்டு!
தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம், இந்தித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்த��ள்ள கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளையும், முழு ஒத்துழைப்பை நல்கிய மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் செயலாளர்களுக்கு நன்றியையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள�� கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 7:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்,
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்பதற்கேற்ப, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நூற்றுக்கணக்கான இளம��� பெண்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை ஈடுபட்டது.
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும், அதற்கு கழக அரசு துணை நிற்கும்’ என்று கழகத் தலைவர் அளித்த வாக்குறுதியின்படியே, இன்று அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி உட்பட 9 பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை இந்தக் கூட்டம் வரவேற்கிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 6:
குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு!
இந்த ஆண்டு வெளியான குடிமைப்பணித் தேர்வு முடிவுகளில் ‘நான் முதல்வன்- போட்டித் தேர்வு’பிரிவில் பயின்று தேர்வான 50 போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்பட காரணமாக உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் இந்தக் கூட்டம் பாராட்டுகிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 12:
தமிழர் நலன் காத்த முத்தமிழறிஞர் கலைஞரின் புகழைப் பரப்பும��� வகையில் தெருமுனைக் கூட்டங்கள்!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர��� பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களைக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும் என்றும், தமிழர் நலன் காத்த கலைஞர் அவர்களின் புகழ் பரப்பும் வகையிலும், திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்களை விளக்கியும் கழகப் பேச்சாளர்கள் மற்றும் இளம் பேச்சாளர்களைக் கொண்டு அனைத்து ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்ச��் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 9:
செம்மொழி நாள்!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முதல் ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செய���ாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 3:
கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்!
மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசை��ும், மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே கேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆல��சனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 13:
களத்திற்கு நிகராக சமூக வலைத்தளங்களிலும் களமாட உறுதியேற்போம்!
நவீன அரசியலின் பரப்புரைக் களமாக உருவ��கி இருக்கும் சமூக வலைத்தளங்களில், நமது இளைஞர் அணி சிறப்பாகச் செயல்பட மாவட்ட-மாநகர நிர்வாகிகளைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களுக்கும், தொகுதிவாரியாக பாக இளைஞர்களுக்கும் சமூக வலைத்தளப் பயிற்சியை, சீரியமுறையில் வழங்கி வருகிறோம்.
கழகத்தின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், களத்திற்கு நிகராக சமூக வலைத்தளங்களிலும் களமாட, கழகத் தகவல் தொழில் நுட்ப அணியுடன் இணைந்து, கழக இளைஞர் அணி பணியாற்றும் என இக்கூட்டம் உறுதியேற்கிறது.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்��ு, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் - கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியக்கழகம் சார்பில் மங்கள��க்கோவிலில் மாநில அளவிலான கபடி போட்டியை இன்று தொடங்கி வைத்தோம்.
நம் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் விளையாட்டு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது என்பதற்கு சான்றாக, இந்த கபடி போட்டி மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தோம்.
ஆண்கள் - மகளிர் என கிட்டத்தட்ட 40 அணிகள் பங்கேற்ற இப்போட்டி சிறக்க வாழ்த்தினோம்.
நம் மண்ணின் விளையாட்டான கபட�� போட்டியில் சாதிக்கும் வீரர்களுக்கு என்றும் துணை நிற்போம்.
@KN_NEHRU @regupathymla @Anbil_Mahesh @SMeyyanathan @pudugaiabdulla @CHINNADURAIMLA @Muthuraja_MLA @ilaiyadmk @shanmugams_dmk #Paramasivam
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
மண்டல வாரியாக கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@SKDMKTJ@durai944 #Palanivel @ilaiyadmk@GkmRaja4@mukilventhan@aathirajes66599
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என மனு அளித்தனர்.
அவற்றில், மாற்றுத்திறனாளிகள் - ஆதரவற்ற மகளிர் - நலிவடைந்த பிரிவினர் அளித்த மனுக்களுக்கு உடனே தீர்வு வழங்கிட அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.
இதன்படி, நத்தம்பண்ணை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியின் போது, இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை - மூவருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் - தலா ஒருவருக்கு கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் மற்றும் பணி நியமன ஆணை போன்றவற்றை வழங்கினோம்.
இந்த நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் வாழ்வு சிறக்க வாழ்த்தினோம்.
@regupathymla@SMeyyanathan@pudugaiabdulla@Muthuraja_MLA
மாணவர்களின் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் செலவிட, கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிக்காட்டுதலில் சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி ‘கலைஞர் நூலகத்தில்’ 120-ஆவது வட்டத்திற்கான ‘மாணவர் வாசகர்’ சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக இளம் பேச்சாளர் அ.தா. டெக்சின் ரொமேரியோ புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், #திராவிடமாடல் அரசு வாசிப்புக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.மேலும், நிகழ்ச்சியின் நிறைவில் வருகை தந்த மாணவர்��ளுக்கு நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, தண்ணீர் பாட்டில் மற்றும் டிப்பன் பாக்ஸ் வழங்கப்பட்டது.
இந்��ிகழ்வில் சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் @Prakashbalara01 , 120-ஆவது வட்ட செயலாளர் ஐசிஎஃப் சங்கர், மாவட்டத் துணை அமைப்பாளர் தினேஷ், பகுதி துணை அமைப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#ChepaukTriplicane
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin தலைமையில், மாநில துணைச் ���ெயலாளர்கள் முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் 15:
எல்லார்க்கும் எல்லாம் தரும்
திராவிட மாடல் அரசு, மீண்டும்
ஆட்சிக்கட்டிலில் அமர உறுதியேற்போம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு 2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வர நம் செயலாளர் அவர்களின் தலைமையிலான நம் இளைஞர் அணி எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!!
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிய Multi-Purpose Indoor Stadium கட்டுவதற்கு 2015-இல் அப்போதைய ஆட்சியாளர்களால் ரூ1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால், அந்தப்பணிகள் பல்வேறு காரணங்களால், நிறைவு பெறாமல் இருந்தது. ஆகவே, அந்த Stadium-ஐ விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்களும் - பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மேலும் ரூ.3.50 கோடி மதிப்பில் இப்பணியை நிறைவு செய்ய உத்தரவிட்டார்கள்.
அதன்படி Shuttle Court, Volley Ball Court, Gym, Synthetic Flooring உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த உள் விளையாட்டரங்கம் உருவாக்கப்பட இருக்கிறது.
இதற்கானப் பணிகளை விரைந்து தொடங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.
@SportsTN_@regupathymla@SMeyyanathan@Muthuraja_MLA@Atulyamisraias #JMeghanathaReddyIAS