சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது தியாகத்தையும் சமூக நீதிக்கான பங்களிப்பையும் போற்றுகிறேன்.
#இமானுவேல்சேகரனார்#ImmanuelSekaran
Honouring the legacy of Thiru.Immanuel Sekaran on his birthday. A true freedom fighter, ex-serviceman, and champion for the rights of the downtrodden.
சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் ராணுவ வீரர், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திரு.இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாளில், அவரைப் போற்றுவோம்.
தீண்டாமையை ஒழிக்கவும், சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், விடுதலை உணர்வையும் அனைவரும் போற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
#ImmanuelSekaran#AnbumaniRamadoss#PMK#SocialJustice
விளிம்புநிலை மக்களின் சமூக நீதி மற்றும் மனித உரிமைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாபெரும் தலைவர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம்!
அடக்குமுறைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராகச் சுடராக நிமிர்ந்து நின்று, எளிய மக்களின் சுயமரியாதையையும் உரிமைகளையும் வென்றெடுக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்த மகத்தான தலைவர்.
அவரது பிறந்தநாளில், தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் சமரசமற்ற போராட்ட வரலாற்றைப் போற்றி வணங்குவோம்! அவர் காட்டிய வழியில் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைக்கத் தொடர்ந்து உறுதியோடு பயணிப்போம்!
இமானுவேல் சேகரன் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மதன் ராஜா, பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
#ImmanuelSekaran | #TVK | #MinisterTKPrabhu
தமிழக வரலாற்றில் / இந்திய வரலாற்றில் இது முதல் முறை !
எந்த முதல்வரும் , எந்த விளையாட்டு வீரருக்காகவும் இதுவரை மண்டியிட்டதில்லை !
பதவி தலைக்கேறாத , மக்களை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் !!
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay