“ஒரே தொகுதி… வெவ்வேறு தேவைகள்!”
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி என்பது ஒரே மாதிரியான பகுதி அல்ல.
கவுண்டம்பாளையம், துடியலூர் போன்ற நகர்ப்புற பகுதிகள் ஒருபுறம்…
பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, சின்னதடாகம், ஆனைக்கட்டி போன்ற கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகள் மறுபுறம்…
அதனால் கவுண்டம்பாளையத்தின் மிகப்பெரிய தன்மை
“ஒரே தொகுதி… வெவ்வேறு தேவைகள்!”
நகர்ப்புற மக்களுக்கு போக்குவரத்து நெரிசல், சாலை, மழைநீர் வடிகால், குடிநீர், கழிவுநீர் போன்ற பிரச்சினைகள்.
ஆனால் கிராமப்புற மக்களுக்கு குடிநீர், விவசாயம், சாலை, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகள்.
மலைப்பகுதி மக்களின் தேவைகள் இன்னும் வேறுபட்டவை.
ஆனைக்கட்டி, தடாகம் போன்ற பகுதிகளில் சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, குடிநீர் மட்டுமல்ல…
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் வனவிலங்கு மனித மோதலும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
ஒருபுறம் பயிரை வளர்க்கும் விவசாயி…
மறுபுறம் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்…
“விவசாயம் செய்யவும் முடியவில்லை…
வாழ்வாதாரத்தை விட்டுவிடவும் முடியவில்லை…”
என்ற நிலையில் பல விவசாயிகள் தவிக்கிறார்கள்.
விவசாயியின் பயிரையும் பாதுகாக்க வேண்டும்.
வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
மக்களின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும்.
அதேபோல் இது கோவையின் தொழில் வளர்ச்சியோடு இணைந்த தொகுதியும் கூட.
ஜவுளி மற்றும் துணித் தொழில்கள்,
Textile machinery மற்றும் spare parts,
Engineering, fabrication,
சிறு மற்றும் குறுந்தொழில்கள்,
உற்பத்தித் தொழில்கள்,
கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகள் என
பல தொழில்கள் இங்கு இயங்கி வருகின்றன.
ஆனால் நம்முடைய கேள்வி என்ன?
இந்த தொழில் வளர்ச்சியின் பயன் நம்முடைய உள்ளூர் இளைஞர்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது?
Engineering படித்த இளைஞர் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டுமா?
தொழிற்பயிற்சி பெற்ற இளைஞருக்கு உள்ளூரிலேயே வேலை கிடைக்கக்கூடாதா?
அதனால்தான் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப Skill Development மற்றும் வேலைவாய்ப்பு இணைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும்.
அதன் பலன் உள்ளூர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்!
தொழிலாளியும் முக்கியம்.
விவசாயியும் முக்கியம்.
மாணவரும் முக்கியம்
இளைஞரும் முக்கியம்.
பெண்களும் முக்கியம்.
மலைப்பகுதி மக்களும் முக்கியம்!
#Kowndampalayam
#cbe
ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள்!
எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.
திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி.
நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்!
#DheeranChinnamalai
காவிரி உரிமையை நிலைநாட்ட துணிவில்லாமலும்; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் விவசாயப் பெருங்குடி மக்களை வஞ்சித்துவரும் த.வெ.க அரசைக் கண்டித்து கழக இளைஞரணிச் செயலாளர்- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் தலைமையில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், பெருந்திரளான உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், விவசாய சங்கத்தினருடன் கலந்து கொண்டோம்.
#MekedatuDam
#விவசாயவிரோதிவிஜய்
காரைக்குடியில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில் மாணவர்களை TVK TVK என கோஷம் போட வைத்துள்ளார் ரீல்ஸ் அமைச்சர் பிரபு! இது தான் நீங்கள் பேசிய மாற்றமா?@CMOTamilnadu பள்ளிக்கூடம் கல்விக்கான இடம்! கட்சி விளம்பரத்திற்கான மேடை அல்ல! அரசு பள்ளிகளில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று சொன்ன @imrajmohan என்ன செய்துகொண்டிருக்கிறார்?
#TVKVijayFails
ஊரான் வீட்டு நெய்யில..!
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க’ என்பது முதலமைச்சர் விஜய்யின் புகழ்பெற்ற பொன்மொழி ஆகும். இதைப் பனையூரில் கல்வெட்டாக அடித்து வைத்து பக்கத்தில் அவர் உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் அவர் செய்திருப்பது என்ன? படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது, ‘நல்லா இல்லை, ஏன் தான் போனோம்னு தெரியலை’ என்று சொல்வதைப் போல, 'விஜய்க்கு தெரியாமல் வோட்டு போட்டு விட்டோம்' என்று மக்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
- முரசொலி தலையங்கம்!
A.P. Jஅப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் "அப்துல்கலாம் அறக்கட்டளை"யின் சார்பாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு புகழ்வணக்கங்களை செலுத்தினேன்!
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். 2023-ஆம் ஆண்டு நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார்.
தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
#Iyal #TamilLiteraryGarden #TrotskyMarudu
கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்களும் சர்ச்சைகளும் ஏராளம்! அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை மாறாக குற்றம் சாட்டுபவர்களையே கட்சியிலிருந்து நீக்கம் செய்கிறார்கள்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எங்கே போனது?
மேகதாது முதல் மின்வெட்டு வரை மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை பற்றி எழும் குரல்களை கேட்பதே இல்லை! ஒட்டு மொத்தமாக தனது கண்களை காதுகளை வாயை இறுக்கி மூடிக்கொண்டிருக்கிறார் ஜோசப் விஜய்!
-முரசொலி
தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (25.7.2026), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலன் அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள் - நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். உடன் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
தலைவர் அவர்களை சந்தித்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு :
1. மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், டெல்டா மாவட்டங்கள்
2. தா.ஒளிச்சந்திரன், வட்டார விவசாயிகள் சங்கம், வேதாரண்யம்
3. அரங்க சங்கரய்யா,/கோவிந்தன், ஐகேவிவசாயிகள் சங்கம், தலைவாசல்
4. சடை ஜெயராமன், தமிழ்நாடு உழவர் மன்றங்கள், சேலம்
5. வசந்தப்பிரியா, தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்
6. முகமது ரபீக், பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்
7. வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
8. ஆ.லூர்துமணி, சாத்தான்குளம் விவசாயிகள் சங்கம், தூத்துக்குடி
9. உதயக்குமார், தமிழக விவவாயிகள் சங்கம், வேலூர்
10. செந்தில், சின்ன, பெரிய வாய்க்கால் பா.சங்கம், தொட்டியம்
11. இரா.விருத்தகிரி, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு, கடலூர்
12. கு.மு.வெங்கடேசன், முப்பெரும் உழவர் பெருந்தலைவர், வி.ந.சங்கம், ராணிபேட்டை
13. சுபி.தளபதி, குடிவேறி அணை பாசன சங்கம், கோபிசெட்டிபாளையம்
14. மு.பாண்டியன், அரியலூர் விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
15. சி.சிவக்குமார், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
16. துரை தியாகராஜன், மஞ்சள் விவசாயிகள் நலச் சங்கம், ஈரோடு
17. கே.மாரிச்சாமி, தென்னக உழவர் பாதுகாப்பு சங்கம்
18. சௌ.தேசிங், கஞ்சமலை உழவர் உற்பத்தியாளர் சங்கம், சேலம்
19. த.முத்துக்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச்சங்கம்
20. எஸ்.செந்தில்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச் சங்கம்
21. மா.பிரகாஷ், காணி உழவர் உற்பத்தியாளர் சங்கம், நாகப்பட்டினம்
22. டி.பொன்னுசாமி, தேசிய வங்கிகளின் கடன் பெற்றோர் நலச் சங்கம்
23. நா.சீதாராமன், இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கம், விழுப்புரம்
24. த.காசிநாதன், ஆலைக்கரும்பு விவசாயிகள் சங்கம், கும்பகோணம்
25. த.கண்ணன், புள்ளம்பாடி வாய்க்கால் பாசன சங்கம்
26. மு.ச.முஜிப்ஷெரிப், விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், வேட்டைக்காரன்இருப்பு
27. எமவி. சீனிவாசன் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
28. சீ.வரதராஜன், தலைவர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சென்னை
29. சீ. பாலசுப்பிரமணியன், காவிரி விளைபொருள் உற்பத்தியாளர் நலச் சங்கம், திருச்சி
30. ஏ.வி.தாமஸ், திருவண்ணாமலை விவசாயிகள் நலச் சங்கம்
31. ரா.செல்வராஜ், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கள்ளக்குறிச்சி
32. கு.எழிலன், வேளாண்வணிக தொழில் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
33. கோ.வரதராஜன், தாய்மண் அமைப்பு, திருவாரூர்
34. ஜெ. சௌந்தராஜன், இளம் விவசாயிகள் சங்கம், பரமத்தி வேலூர்
35. பு.கண்ணியம்மாள், மகளிர் விவசாயிகள் சங்கம், மேல்மருவத்தூர்
36. குமுதா, செங்கல்பட்டு மகளிர் விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்
37. வீ.லதா, த.நீ.நி.காப்பு சங்கம், ஆவடி
38. சுகுணா ஏழுமலை, ராயல்பட்டு மகளிர் விழிப்புணவர்வு சங்கம்
Grateful to Join Rotary District 3206’s First District Anns Meet held at SNR Conference Hall, Coimbatore. An inspiring day filled with fellowship, meaningful connections, and a shared vision of serving the community. Grateful for the opportunity to be part of this wonderful gathering.
Service Above Self.
#rotary #coimbatore #meenajayakumar #socialservice
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
It was a pleasure to be part of the inauguration of Soulution Space, By lighting the ceremonial lamp. It was truly an inspiring moment.
My heartfelt congratulations to Mr. N. Rengarajan and the entire Soulution Space team on this wonderful initiative.
Soulution Space is a place where children discover who they truly are, identify their unique strengths, build confidence, and unlock their full potential. It nurtures not only academic excellence but also emotional intelligence, self-awareness, and character.
Wishing Soulution Space great success in shaping confident, capable, and compassionate future generations.
“True education begins when a child discovers who they are.”
Soulution Space academy
#SoulutionSpace #ChildDevelopment #FutureLeaders #coimbatore
பத்திரிக்கையாளர் "இதுவர 30 பேர் இறந்துருக்காங்க சார்ன்னு" கேட்டப் பொழுது பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடினீங்களே அப்ப இந்த விளக்கம் ஏன் கொடுக்கல? மக்களை ஏமாற்ற ஸ்கிரிப்ட் இன்னிக்குதான் ரெடி பண்ணியிருக்கிங்களா தூயசக்தி?
இப்ப எப்படியாவது வழக்கில் இருந்து தப்பிக்கனும்னு நாடகம் போட்டு சாட்சிய கலைக்க பாக்கறீங்களா தூயசக்தி!
#மக்களை_ஏமாற்றும்_விஜய்
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers