இன்னைக்கு "நாங்க friends"னு காட்டிக்க ஒரு drama பண்றீங்களே... கடந்த 20 வருசமா விஜயா-அஜித்தா'னு ஆன்லைன்'லயும், தியேட்டர் வாசல்'லயும் உங்களுக்காக நாய் மாதிரி சண்ட போட்டுக்கிட்டு,அடிதடி,போலீஸ் கேசுனு இருந்தானுங்களே உங்க ���சிகர்கள்??? அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா "நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் தான்" நீங்க அடிச்சுக்காதீங்கனு ஒரே ஒரு அறிக்கையாச்சும் குடுத்திருப்பீங்களாயா? .
🚨#Ajithkumar words via Hollywood Reporter India interview with @anupamachopra
1). People expect too much from the govt !
#Clarification : Yes expecting , good roads , good infrastructure, job market , good air to breathe , law and order , less pollution is too much to ask for ??
No basic understanding about political space & sees everything with a privileged bubble 🤦🏻
அன்புச்சகோதரர் @itisprashanth அவர்களுக்கு வணக்கம்.
விஜய் பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடுமென்றோ, பிரச்சினைக்குக் காரணமே விஜய்தான் என்றோ ஒருபோதும் கூறவில்லை. மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்��ூட இலாப நட்டக் கணக்குப் பார்க்கிற விஜய்யின் சந்தர்ப்பவாதத்தைதான் சாடுகிறோம்.
மதுரையில் கச்சத்தீவு குறித்துப் பேசியவர், மதுரை மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய முல்லைப்பெரியாறு குறித்துத் தவறியும் பேசவில்லை. பேசினால், கேரளாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடாது எனும் இலாப நட்டக்கணக்குதான் காரணம்!
திருச்சியில் இன்றைக்குப் பேசும் விஜய், காவிரியில் நீர் தர மறுக்கும் கன்னட ஆட்சியாளர்களைச் சாடுவாரா? மாட்டார்! பேசினால், ஜனநாயகன் திரைப்படம் கர்நாடகாவில் ஓடாது எனும் இலாப நட்டக்கணக்குதான் காரணம்!
கவின் ஆணவப்படுகொலைக்கு எதிராக ஒருவார்த்தைகூட பேசவில்லை. காரணம், பேசினால் இடைநிலைச்சமூகங்களின் வாக்குகள் போய்விடுமோ? எனும் இலாப நட்டக் கணக்குதான் காரணம்!
ஊழல் ஆட்சி என்று பேசுபவர், தவறியும் அதிமுகவைப் பேச மாட்டார். குடும்ப அரசியல் என்று பேசுபவர், தவறியும் காங்கிரசு குறித்துப் பேச மாட்டார். காரணம், இலாப நட்டக் கணக்குதான்.
கொள்கை அரசியல் - கள அரசியல் - சேவை அரசியல் எதுவும் இல்லை. அங்கிருப்பது விளம்பர அரசியல் - வாக்கரசியல் மட்டும்தான். இது மக்களுக்கு நலன் பயக்கும் மாற்று அரசியலில்லை. இதனை உணர்ந்துகொண்டப் பிறகு, நாங்கள் கடுமையாக அந்த அரசியலைத் தோலுரிக்கிறோம்.
2024, பிப்ரவரி 2ஆம் தேதி கட்சியை அறிவித்தார் விஜய். அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டில் அவர் கொள்கைகளை அறிவிக்கும்வரை அண்ணன் சீமான் அவர்களும், நாம் தமிழர் உறவுகளும் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. மாறாக, வரவேற்கவே செய்தோம். அவர் கோட்பாடு குழப்பவாதமாக இருக்கிறபோதுதான் விமர்சிக்கவும், எதிர்க்கவும் தொடங்கினோம். இன்றைக்கு அரசியலற்ற உதிரிகளாகக் கட்சியினரை வைத்திருக்கிறார். அவர்களை அரசியல்படுத்த எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
பிற்போக்குத்தனமும், சந்தர்ப்பவாதமும் நிறைந்த இந்த அரசியலைத் தோலுரிப்போம். அம்பலப்படுத்துவோம். அப்புறம் திடீரென விஜய் அரசியலை விமர்சிக்கவில்லை. அவரது அரசியல், தமிழ் தலைமுறையினரைப் பின்னோக்கிச் செல்லும் பேராபத்தைக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தே எதிர்க்கிறோம்.
மோசமான திரைப்படங்களை நீங்கள் வறுத்தெடுக்கும் எண்ணற்ற விமர்சனக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்களுக்கு போய் மக்கள் தங்களது பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்ய வேண்���ாம் எனும் உங்களது 'அக்கறையை' புரிந்துகொள்கிறேன். அதனைப் போல, ஒரு தவறான அரசியலை நம்பி, எவரும் ஏமாந்துவிடக்கூடாது எனும் மக்கள் மீதான அக்கறையிலும், அன்பிலுமே நாங்கள் விமர்சனக்கணைகளைப் பாய்ச்சுகிறோம்.