இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறைய தீப ஒளி வகை செய்யட்டும்!
வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.
மக்கள் கொண்டாடும் அனைத்து திருநாள்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்றின்படி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளித் திருநாளாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்களையும் போக்கி, வாழ்வை வண்ணமயமாக்கும் வகையில் அனைத்து நன்மைகளையும் தீப ஒளி திருநாள் வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும்.
தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இப்போது எதிர்கொள்ளும் வறட்சி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எல்லா சிக்கலும் இன்றுடன் கரைய வேண்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#HappyDiwali #deepavali #PMK
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆந்திரா, தமிழ்நாடு அடங்கிய சென்னை மாகாணத்தில் சமூகநீதிக்காக போராடிய பொன்னமண்டா இலட்சுமண சுவாமி வர்மா அவர்களது பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம். அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் ஆந்திரா பிரதேச அரசுக்கு பாராட்டுகள்.!
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், "மேகதாது அணை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி" உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி, ANI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த போது.!
#MekedatuDam #AnbumaniRamadoss #PMK
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், கோவிந்தாபுரம் கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தபோது.!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், கோவிந்தாபுரம் கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தபோது.!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், கோவிந்தாபுரம் கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தபோது.!
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி நிறைவுறையாற்றிய போது.!
#CasteCensus #PMK
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்!
தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் தில்லியில் நாளை மறுநாள் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவது குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019-ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டது. எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பிவிட்டது.
இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு திறம்பட நடத்தாததால்,மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ளக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு சிக்கல் எழுப்பும் வாய்ப்புள்ளது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக முடிவெடுக்கப்படுவதைத் தவிர்க்க நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்; ஒருவேளை கூட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாதது என்றால், அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
#Mekedatu
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3274 ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், இன்று வரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஏழை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் ஆள்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக்கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் 6 கோட்டங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களாக நியமிப்பதற்காக 3274 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வி்ண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. ஆனால், எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொருளாதாரத்தின் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வேலை கிடைத்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். ஆனால், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆள்தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவுபடுத்தி தகுதியானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 203 பணியாளர்களும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர்கள் 2011-ஆம் ஆண்டு முதல் 15 முதல் ஆண்டுகளாக இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுக்கு பா.ம.க. ஆதரவளித்திருக்கிறது. பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முயன்ற போது சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் குரல் கொடுத்து பணி நீக்கத்தை பா.ம.க. தடுத்து நிறுத்தியிருக்கிறது. அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தினக்கூலி பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய திமுக அரசு மறுப்பது சமூக அநீதி ஆகும்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு தற்காலிக பணியாளர் கூட பணிநிலைப்பு செய்யப்படவில்லை. அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தமிழக அரசு விளையாடுவது நியாயமல்ல.
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அவர்கள் அனைவரும் விதிகளின்படி நியமிக்கப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கும் அளவுக்கு அரசிடம் நிதியும் குவிந்து கிடக்கிறது. எனவே, இல்லாத காரணங்களை கூறிக் கொண்டிருக்காமல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் D.சேகர் - S.பிரமிளா தம்பதியரின் மகள் மற்றும் C.நாகரத்தினம் - N.ரமணி தம்பதியரின் மகன், S.சுவேதா - N.கோவர்தனன் இணையரின் திருமணம், சென்னையில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது.!