சென்னை - மாம்பாக்கம் விக்னேஷ் மஹாலில் நடைபெற்ற, வன்னியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் K.E.நாகப்பன் நாயக்கர் - பச்சையம்மாள் தம்பதியரின் மகன் நா.மதன்குமார் மற்றும் M.சரவணன் - கவிதா தம்பதியரின் மகள் ச.லட்சுமி இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் தருமபுரி சிப்காட் வளாகத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து அதற்கான மனு அளித்த போது.!
#PMK | #SIPCOT | #Dharmapuri
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
இன்று, சென்னையில் நடைபெற்ற, சென்னை பல்கலைக்கழகம் சமூக அறிவியல் துறை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போது.!
#MadrasUniversity#socialscience
வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மீண்டும் நடத்தப்பட்ட நிலையில், அத்தேர்வின் முடிவுகள் என்னவாகுமோ? என்ற அச்சத்தில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 4 நாள்களில் மட்டும் கோவை மாணவி அனு கீர்த்தனா, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மாணவர் வெற்றி ஆனந்தம் ஆகியோர், எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி என மொத்தம் 4 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எந்த சிக்கலுக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதில் மாணவச் செல்வங்கள் உறுதியாக இருக்க வேண்டும்; எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவச் செல்வங்களை இழந்த பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!
#NEET #neetexam
மண்டல் ஆணையத்திற்கு வழி வகுத்த வே. ஆனைமுத்து
அவர்களின் 102-ஆம் பிறந்த நாள்: அவரது சமூகநீதிப்
போராட்டத்தை பாடநூலில் சேர்க்க வேண்டும்!
தந்தைப் பேரியாரின் பெருந்தொண்டரும், மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டு, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவருமான பெரியவர் வே. ஆனைமுத்து அய்யா அவர்களின் 102-ஆம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சமூகநீதி முன்னோடியான அவருக்கு நான் எனது வணக்கங்களை செலுத்துகிறேன்.
ஆனைமுத்து அய்யா அவர்களின் சமூகநீதி போராட்ட வரலாறு மிகவும் நீண்டது. தமது தோழர்கள் சிலருடன் 27.04.1978-ஆம் நாளில் தில்லிக்கு புறப்பட்ட ஆனைமுத்து அய்யா அவர்கள் தான் பிகார், உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட இந்தியாவை தமது போராட்டக் களமாக மாற்றி மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதற்கும், பின்னாளில் அதனடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் காரணமாக இருந்தார். அவரது நூற்றாண்டு நிறைவை பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது.
பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தவர். ஆனால், அவரது சமூகநீதி வரலாறு உரிய முறையில் இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது தான் வருத்தமான உண்மை. இந்தக் குறையை போக்கும் வகையிலும், அவரது போராட்டங்களை போற்றும் வகையிலும் அவற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் தந்தைப் பெரியாரும், அவர் வழியில் ஆனைமுத்து அய்யாவும் வலியுறுத்திய மக்கள்தொகை அடிப்படையிலான 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை சாத்தியமாக்குவதற்காக தொடர்ந்து சமூகநீதிப் போராட்டங்களை முன்னெடுக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம்.
#SocialJustice
நீட் மறுதேர்வு அச்சத்தால் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இருவர் தற்கொலை: நீட் தேர்வை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டு ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு இன்று மதியம் நடைபெறும் நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஒரு மாணவியும், ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரோஷ்னி 12-ஆம் வகுப்பை இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு செய்து விட்டு, நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த இரு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். இந்த முறையும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சம் தான் அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் 12-ஆம் வகுப்புத் தேர்வை முடித்து விட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார். ஆனால், அதில் அவரால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாத நிலையில் நடப்பாண்டிலும் அதே நிலை தான் ஏற்படுமோ என்ற அச்சத்தால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களைக் கொல்லும் தேர்வு என்பதற்கு இவை தான் மோசமான எடுத்துக்காட்டு.
ஏற்கனவே, கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா, 19-ஆம் தேதி சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கோபிகா என இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த இரு நிகழவுகளையும் சேர்த்து 4 நாள்களில் 4 மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்கு பலி கொடுத்திருக்கிறோம். இந்தக் கொடுமை தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@PMOIndia@CMOTamilnadu
அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல்: தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் இன்று காலை ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருப்பதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பவர்களுக்கு உயர்தர மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
தொழிற்சாலையில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களை சந்தித்து, தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டி, அதற்கான மனு அளித்த போது.!
@CMOTamilnadu#PMK | #tvk | #TVKVijay | #Dharmapuri | #kaveriwater | #cmvijay
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களை சந்தித்து, தருமபுரி சிப்காட் வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வழி வகை செய்ய வேண்டி, அதற்கான மனு அளித்த போது.!
@CMOTamilnadu#PMK | #tvk | #TVKVijay | #SIPCOT | #Dharmapuri | #cmvijay
தருமபுரியில் நடைபெற்ற வளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹரிஷ் சம்பத், சண்முகப்பிரியா மற்றும் சித்ரா வெங்கட்ரமணி ஆகியோரை பாராட்டி, மேலும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பை பெற்றமைக்கு வாழ்த்து கூறினேன்.!
#powerlifting
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், "மேகதாது அணை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி" உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி, ANI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த போது.!
#MekedatuDam #AnbumaniRamadoss #PMK