தென்காசி(வ)மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக கழக பணியாற்றிட எனக்கு வாய்ப்பளித்த உலகத்தில் தலைசிறந்த முதல்வர் தளபதியார் @mkstalin அவர்களுக்கும் இளைஞர்களின் எழுச்சி மாமன்னன் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@dmk_youthwing
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இன்று வெளியாகியுள்ள UPSC 2025 தேர்வு முடிவில், நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் ராஜேஸ்வரி சுவே மற்றும் ராஜா மொஹைதீன் ஆகியோர் - அகில இந்திய அளவில் TOP 10 இடங்களில் தேர்வாகி பெருமைச் சேர்த்துள்ளனர்.
குறிப்பாக, தங்கை ராஜேஸ்வரி சுவே அவர்கள் திராவிட மாடல் அரசு நடத்தும் UPSC தேர்வர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மையத்தில் தங்கி படித்தவர்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 56 பேர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டப் பயனாளிகள் என்பது கூடுதல் சிறப்பு.
வெற்றி பெற்றுள்ள அனைவரும் குடிமைப் பணிகளில் சிறந்து விளங்கி மக்களுக்குச் சேவையாற்ற எனது அன்பும் வாழ்த்தும்!
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், கழகம் முதன்முதலாக ஆட்சி அமைத்த பெருமைக்குரிய இந்நாளில், நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினோம்.
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட
அண்ணா வழியில் அயராது உழைப்போம் என உறுதியேற்றோம்.
@Manothangaraj@MaheshRDMK
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விழாவில்,
மாவட்டம் முழுவதும் உள்ள 7,601 பயனாளிகளுக்கு ரூ.91.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் முகமாக, சுமார் 200 பேருக்கு நலத்திட்டங்களுக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், 131 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
நலத்திட்ட உதவிகளை பெற்ற குமரி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@Manothangaraj@MaheshRDMK
கழக அயலக அணி மாநில துணைச் செயலாளர் சகோதரர் ஏ. பாபு வினிபிரட் அவர்களின் ஏற்பாட்டில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சலில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான நூலகத்தை இன்றைய தினம் திறந்து வைத்தோம்.
மேலும், கழகத்தின் வளர்ச்சிக்காக தன்னலம் பாராது பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்த மூத்த முன்னோடிகள் 73 பேருக்கு பொற்கிழி வழங்கி, அவர்களது வாழ்த்துகளை பெற்றோம்.
கழகத்தின் மூத்த முன்னோடிகளின் நலனை காக்கும் வகையில், அவர்களுக்கு என்றும் துணை நிற்போம்.
@Manothangaraj@MaheshRDMK
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதிசெய்யும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #TamilNadu2030Vision ஒவ்வொன்றும் நனவாக, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
கல்வியும் - மருத்துவமும் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் எனும் நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.136 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய உயர் சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்தை இன்று திறந்து வைத்தோம்.
அங்குள்ள வசதிகளை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினோம்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.38.53 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழைந்தைகள் நலம், விபத்து சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை அடங்கிய கட்டடத்தையும் திறந்து வைத்தோம்.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் சுகாதார வசதியை மேம்படுத்த இந்த புதிய கட்டமைப்புகள் நிச்சயம் பேருதவியாக இருக்கும்.
அன்பும், வாழ்த்தும்!
@geethajeevandmk@ARROffice #ShanmugaihaMLA #MarkendeyanMLA
திராவிட இயக்கத்தின் கொள்கைக் கருவூலம் நம் இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவு நாள் இன்று!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நண்பராக - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டியாக, நமக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டியவர்.
பாசிசத்தை வீழ்த்தி நம் தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைக்க பேராசிரியர் நினைவு நாளில் உறுதியேற்போம்.
பேராசிரியர் புகழ் ஓங்கட்டும்!
#Perasiriyar
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய தின்ம் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 4000 பயனாளிகளுக்கு சுமார் ரூ.109.18 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மேலும், விளையாட்டுக் கட்டமைப்புகள் - வகுப்பறைக் கட்டிடங்கள் என முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
திராவிட மாடல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@geethajeevandmk@ARROffice #ShanmugaiahMLA #MarkamdeyanMLA @Jeganperiyasami
சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நாம் கழக தலைவர்- மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழிக்காட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் கழக சார்பு அணி நிர்வாகிககளைச் சந்தித்து வருகிறோம்.
அந்த வகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகளை இன்றைய தினம் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினோம்.
சார்பு அணி நிர்வாகிகள், கடந்த தேர்தல்களில் துடிப்புடன் பணியாற்றி கழக அணியை வெற்றி பெற செய்தது போல், வரும் தேர்தலிலும் களப்பணியாற்றி தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாசிச அணியை வீழ்த்தி வரலாறு படைப்போம் என கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
@geethajeevandmk@ARROffice@Joel_Dmk@Inba_AN_Ragu #DMK4TN
மாற்றுத்திறனாளியாக மட்டுமின்றி சமூக மாற்றத்திற்கான திறனாளியாகவும் தம்பி ஜஸ்டின் மேற்கொள்ளும் பொதுத்தொண்டை ஆண்டுதோறும் வாழ்த்திப் பாராட்டி வருகிறோம்.
இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற நிலையில் தம்பி ஜஸ்டின் அவர்களின் ஏற்பாட்டில் உழைக்கும் மகளிர்க்கு 7 தையல் மெஷின்களை வழங்கினோம்.
மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அவருக்கு என் அன்பும் வாழ்த்தும்! தொடரட்டும் உங்கள் தொண்டு!
சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி - “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் #DravidianModel அரசு!
இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.
மகளிர் உயர மாநிலம் உயரட்டும்!
#WomensDay
இளைஞர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் @dmk_youthwing சார்பில், கலைஞர் நூலகங்களை திறந்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை ராமாபுரத்தில், இளைஞர் அணி நிர்வாகிகளால் அமைக்கப்பட்டுள்ள மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
கலைஞர் நூலகத்தை இன்று திறந்து வைத்தோம்.
அன்றாடச் செய்திகளை அறிய பத்திரிகைகள், அறிவை விரிவு செய்யும் நூல்களுடன் இயங்கும் இந்நூலகத்தை அப்பகுதி பொதுமக்கள் நன்கு பயன்படுத்திட என் அன்பும் வாழ்த்தும்!
கலைஞர் நூலகத்தைச் சென்றடைய:
https://t.co/v3na6SsbR9
@Subramanian_ma@Joel_Dmk@GanapathyK@PrabhakarRaja88
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில், ரூ.4.88 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள குளம் - அதன் மத்தியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை இன்று திறந்து வைத்தோம்.
வளசரவாக்கம் பகுதி மக்கள், இப்பூங்காவை சிறப்புற பயன்படுத்தி மகிழ என் அன்பும், வாழ்த்தும்!
@Subramanian_ma@GanapathyK@PrabhakarRaja88@MMageshkumaar
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக நம் திராவிட மாடல் அரசு உருவாக்கி உள்ளது.
அந்த வகையில், சின்னப்போரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.21 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை இன்று திறந்து வைத்தோம்.
வாழ்த்துகள்.
@Subramanian_ma@GanapathyK@PrabhakarRaja88@MMageshkumaar
சென்னையின் உட்கட்டமைப்பு வசதியை கடந்த 5 ஆண்டுகளில் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ள நம் திராவிட மாடல் அரசு சார்பில்,
மதுரவாயல் தொகுதி நொளம்பூரில், கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.135.62 கோடி மதிப்பில், கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தினை இன்று திறந்து வைத்தோம்.
யூனியன் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் இந்தப் பாலம், மதுரவாயல், வானகரம், முகப்பேர் செல்வோரின் பயணத்தை எளிதாக்கும் - பயண நேரத்தை பெருமளவு குறைக்கும்.
அன்பும், வாழ்த்தும்!
@Subramanian_ma #TRBaaluMP @GanapathyK@PrabhakarRaja88@MMageshkumaar
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை நொளம்பூர் யூனியன் சாலை, வார்டு 143-இல் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 1200 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கத்திற்கும், 890 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச்சுவர் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தோம்.
மேலும், அங்கு திரண்டிருந்த சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Subramanian_ma #TRBaaluMP @GanapathyK@PrabhakarRaja88@MMageshkumaar
போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் வசதிக்காக நம் திராவிட மாடல் அரசு, முதல்வர் படிப்பகங்களைத் திறந்து வருகிறது.
அந்த வகையில், நம் #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம் பகுதி, ஜானி பாட்ஷா தெருவில் ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படிப்பகம் மற்றும் நவீன நூலகத்தை இன்று திறந்து வைத்தோம்.
முதல்வர் படிப்பகம் இளைஞர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிகாட்டிட என் அன்பும், வாழ்த்தும்.
@PKSekarbabu@Dayanidhi_Maran@PriyarajanDMK@nchitrarasu@Madhanmohandmk
எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நம் திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அந்த வகையில், சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு அம்மன் கோவில் தெருவில் ரூ.2.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப்பள்ளி கட்டடத்தையும் - முதல்வர் படைப்பகத்தையும் இன்று திறந்து வைத்தோம்.
புதிய பள்ளி கட்டடம் மாணவர்களின் கல்வியை வளமாக்கிட என் அன்பும், வாழ்த்தும்! @PKSekarbabu@Dayanidhi_Maran@PriyarajanDMK