தூத்துக்குடி கூட்டுப் பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா, ஆனந்த் சார்?
உங்கள் காவல்துறையைப் பயன்படுத்தி, MLA சரவணன் பெயரை FIR -யில் சேர்க்க முடியாது என்று கூறி, அவரை முற்றிலுமாகக் காப்பாற்ற நினைத்திருக்கிறீர்கள். ஆனால், வெளியில் மட்டும் நாங்கள் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று வெற்றுப் பேச்சுப் பேசுகிறீர்கள்.
உங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, உங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிக்கு நடந்த இந்தக் கொடூரத்தைப் தட்டிக்கேட்க���்கூட துப்பும் இல்லை, வக்கும் இல்லை இதில் நீங்கள் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசலாமா?
எந்த அடிப்படையில் புலன் விசாரணை செய்து, உங்கள் எம்.எல்.ஏ சரவணன் மீது தவறு இல்லை என்று கூறுகிறீர்கள் என பாதிக்கப்பட்ட பெண் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகளுக்கு உங்கள் முதலமைச்சர் திங்கள்கிழமை பதிலளிப்பாரா? அல்லது வழக்கம்போல வெற்று சீன் மட்டும் போடுவாரா.?
சினிமா துறையினர் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள்.
ஆட்சி செய்பவர்கள��� சினிமா தியேட்டரில் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Jananayakan Review
100 வருஷம் முன்னாடி
எழுதி வச்ச சொத்த
யார கேட்டுடா
பினாமிக்கு வித்த?
துப்பறிய வேண்டிய
கேள்வி என்னன்னா
பழனிக்கு எழுதி வச்ச சொத்து 100 கோடி
அத தன் பேருக்கு மாத்தி எழுதினவன் எந்த கேடி?
யாரு அந்த private party? பேர் சொல்ல மாட்டீங்களா Mr Minister?
நாம நாமன்ன நீங்க எப்போ வந்தீங்க......
உங்களை எல்லாம் எம்எல்ஏ ன்னு இப்போது தான் தெரிகிறது
வந்து இரண்டு மாதத்திலேயே இவ்வளவு பெரிய பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறீங்கலே.....
கோயம்பத்தூர் காரணுங��க பண்ண scam விட பெரிய scam திமுக காரங்க பண்ணது தான்……..
இந்த மக்கள் எல்லாரும் progressive, intellectual’nu நம்ப வெச்சீங்க பாருங்க,
மறக்க மாட்டேன் டா உபிஸ் ☹️🥹😤
நீ என்னா பெயர் நீக்கினாலும் பெண்களின்
இலவச பஸ் பயணம் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் அதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது நீ என்னா வேனுனாலும் போட்டுட்டு போ மக்களுக்கு எல்லாம் தெரியும்....
ஸ்டாலினை புகழேந்தி அய்யா என்று விளிக்கின்றனர்.
ஏன் என்று தெரியவில்லை. சிறிதும் எனக்குப் புரியவில்லை.
புகழேந்தி அவருடைய முதலமைச்சரிடம் மட்டும்தான் நீதி, நேர்மை, இரக்கம், நாகரீகங்களை எதிர்பார்த்தாரே அன்றி ;
நிஜத்தில் அவர் டெர்ரர். அவரிடம் அத்தகைய குணங்கள் ஏதுமில்லை.
ஒரே ஒரு நாள் முதலமைச்சர் ஆக்கியதற்கே அந்த ஒரே நாளில் ஒன்பதாயிரம் பேரை சஸ்பெண்ட் செய்து, அதே நாளில் அவரை ஒரு நாள் பதவி கொடுத்து அழகு பார்த்த முதலமைச்சரையே கைது செய்ய வைப்பார். அம்புட்டு அரகண்ட்.
ஸ்டாலின், தான் ஆண்ட ஐந்து ஆண்டுகளில் அப்படி முன்னாள் முதலமைச்சரையும் (கொடநாடு கொலைகள்) கைது செய்யவில்லை. இந்நாள் முதலமைச்சரையும் (கரூர் கொலைகள்) கைது செய்யவில்லை.
மிக இழிவாக சாதி சொல்லி அவதூறு செய்த சி.வி.சண்முகம் போன்றோரைக் கூட கைது செய்யவில்லை.
மாறாக அனிதா ராதாகிருஷ்ணனை ஆட்சிக்கு வந்த 40 வது நாளிலேயே பொட்டு மாமாவால் கைது செய்ய முடிகிறது. என் கட்சில சேந்துக்கிறியா விட்டுடறேன் என்று மிரட்ட முடிகிறது !
வேலுமணி, தங்கமணி, குட்கா பாஸ்கரையெல்லாம் அந்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை. முன்பிணைகளுக்காக கூட அவர்களை அலையவிடவில���லை.
ஆனால் வேலு சிங்கப்பூரில் முடக்கப்பட்டுள்ளார். புனைவுகளைக் கூறி செந்தில் பாலாஜி போன்றோரை முன் பிணைக்காக தலைமறைவு ஆகச் செய்ய முடிகிறது !
அதே புகழேந்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தன் ஆட்களுக்கு ஓர் ஆபத்து, பாதிப்பு என்கிற நிலையில், கொலை செய்யக் கூடத் துணிந்துவிடுவார்.
நம்மாள் ?
2021 மார்ச்சாக இருக்குமென நினைக்கிறேன். எஸ்.வி.சேகர் அவாள்களுக்கான மேடை ��ன்றில் பேசுகிறார், ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது, எனக்குத் தெரிஞ்ச ஜோதிடர் சொல்லிட்டார், பயப்படாதீங்க !
நம்மாள் அவங்கப்பா பெயரை சாலை ஒன்றிற்கு வைத்து அவரை ஆறத் தழுவிக் கொள்கிறார்.
ரங்கராஜ் புண் day ?
அவனை விட ஒரு திமுக வெறுப்பாளர் இவ்வுலகில் உண்டா ?
அவனுடைய அப்பா சாவுக்கு இவர் போகவில்லை என்றால் யார் கோபித்துக் கொள்வர் ? போனதால் நல்ல மனுஷன்டான்னு யார் இவரை ஆதரித்து விடு���ர் ?
சீமான், சேகர்ல்லாம் இப்ப எதற்கோ கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம், ஆனால் அன்று ?
புகழேந்தியை நீங்கள் ஜெயாவுடனோ, பொட்டு மாமாவுடனோ ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். ஏன்னா அவனுக்கு ராஜாஜி ஜாதகம்.
இந்த உலகில் ஸ்டாலின் ஒருவர்தான் நாகரீக அரசியலின் ஒரே அடையாளம்.
இனி நாகரீக அரசியலை யார் செய்தாலும் வாங்க ஸ்டாலின் சார், அடுத்து தோக்க ஆசையா ? என்று கேளுங்கள்.
சர்வாதிகார புகழேந்தியோடு ஒப்பிடாத��ர்கள் 🙏
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
#ராஜா_ராஜேந்திரன்
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
கழகத்தின் மீது பழி சுமத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்துள்ள தவெக அரசை கண்டித்து கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் பேட்டி.
குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏ களை ராஜ���னாமா செய்ய வைத்து சட்டமன்றத்திலேயே தவெக கட்சியில் இணைக்கின்றனர் அதுபற்றி எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறை, காவல்துறை விசாரிக்கவில்லையே ஏன்.?
தவெக அரசின் மீதான அதிருப்தி, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்பவே வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை பொய் என நாங்கள் நிரூபிப்போம்.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டிய புகாரை வழிமுறைகளை மாற்றி காவல்துறை விசாரிக்க வேண்டிய ��வசியம் என்ன.? அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு முறியடிப்போம்
தவெக கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ஒருவர் , சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக���களித்தால் 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர் ஆனால் எங்கு வைத்துள்ளனர் என இதுவரை தெரியவில்லை.
இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் மூன்று முக்கிய வாதங்களை நாங்கள் முன்வைத்தோம். அதில், ல���்ச ஒழிப்பு துறை தனி அமைப்பாக செயல்பட்டு வரும் போது அது தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்பு துறை தான் விசாரிக்க வேண்டும் . அப்படி அவர்கள் விசாரிக்க வேண்டிய ஒரு புகாரை வேறு காவல் பிரிவு விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசாங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மீதான மூன்று லஞ்ச ஒழிப்பு துறை வழக்குகளை CBCID விசாரணை நடத்த தனிபட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சென்னை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த புகார் D5 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதியப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யும் போதே அது லஞ்ச ஒழிப்பு வழக்கு என காவல்துறையை சார்ந்த ஆணையர், துணை ஆணையர், ஆய்வாளர் என அனைவருக்கும் தெரி��்துள்ளது.
அப்படி இருந்தும் ஏன் இந்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பவில்லை என்றால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு புகார் சென்று அதை விசாரிக்கவேண்டும் என்றால் அதற்கு முறையான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளை பின்பற்றாமல் தவிர்க்க திருவல்லிக்கேணி காவல் நிலையம் மூலம் புகார் பெறப்பட்டுள்ளது.
அப்பநாங்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதம், உச்ச நீதிமன்றம் வழிகாட்டல் படி குற்றம் சுமத���த பட்டவர்களுக்கு இரண்டு அடிப்படை உரிமைகள் உள்ளன. ஒன்று 7 வருடங்களுக்கு குறைவாக தண்டனை பெற கூடிய குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு கைது செய்யும் முன் கட்டாயமாக நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தான் கைது செய்து விசாரிக்க வேண்டும். இரண்டாவது கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை எழுத்து மூலமாக தர வேண்டும்.
இந்த இரண்டையும் செய்���து போல ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் கேட்ட போது 30 ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் கொடுத்தோம் என்றனர். ஆனால் அவர்கள் கொடுத்த ஆவணத்தில் 29 ஆம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தது. ஆனால் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டதே 30 ஆம் தேதி தான். 30 ஆம் தேதி பதிந்த வழக்கிற்கு 29 ஆம் தேதி எப்படி நோட்டீஸ் கொடுத்தீர்கள் என நீதிமன்றம் கேள்வி கேட்டது. அதற்கு காவல்துறை தரப்ப��ல் சரிவர பதில் அளிக்கப்படவில்லை.
என்இப்போது எம்.எல்.ஏ க்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக கூறி இவ்வளவு விரைவாக செயல்படும் காவல்துறை, அதிமுக எம்.எல். ஏ கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்திலேயே தவெக கட்சியில் இணைகிறார்களே அதை பார்த்தும் காவல்துறையும், லஞ்ச ஒழிப்பு துறையும் ஏன் அமைதியாக இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையும் நீதிபதி முன���பு வைத்துள்ளோம்.
அதிமுக எம்.எல். ஏ கள் எம்.எல். ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைவதற்கு பின்னால் குதிரை பேரம் நடந்துள்ளது. தவெக செய்யும் குதிரை பேரத்தை மதிமுக தலைவர் வைகோ அவர்களே வெளிப்படையாக கூறி உள்ளார். குற்றத்தை தடுக்கும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எங்களது வாதங்களை வைத்துள்ளோம் மேலும் இனிவரும் நாட்களிலும் இதனை முன் வைப்போம். எங்களின் கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி அவர்கள் ஆளுநருக்கும் , லஞ்ச ஒழிப்பு துறைக்கும் இதுபற்றி ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.
இந்த ஆளும் அரசின் மீது மக்கள் வைத்துவரும் பல்வேறு குற்றச்சாட்டுகள், அரசின் தவறுகள், இயலாமை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்ப இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்கிறது இந்த அரசு.
இந்த வழக்கு என்பது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வ��க்கு இதை பொய் என நாங்கள் நிரூபிப்போம்.