புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொட்டதெல்லாம் துலங்கும். அவர் துவக்கிய இந்த இயக்கம் ஒருபோதும் அழியாது.
இந்த இயக்கத்தை மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் காப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
-கழக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். மு. தம்பிதுரை அவர்கள்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அன���மதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை சோளிங்கர் தவெக சட்டமன்ற உறுப்பினர் கபில் உள்ளிட்ட அக்கட்சியினர் கடுமையாக தாக்கி��தாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் என்பது எளிய மக்கள் மீது அராஜகப் போக்கை கையாள்வதற்கும், அதை செய்தி சேகரிக்கும் தங்கள் கடமையைச் செய்த செய்தியாளர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக அதிகாரத் திமிரோடு தாக்குதல் நடத்துவதும் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு எந்த நோக்கத்தோடு ஆட்சிக்கு வந்தது, எதை நோக்கி ஆட்சியை நடத்துகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது தாக்குதல் நடத்தியுள்ள போலி ஜனநாயகனின் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஆ��ுங்கட்சியினரின் காட்டுமிராண்டித் தனம் கடும் கண்டனத்திற்குரியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், தவெக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குற்றம் இழைத்த அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எந்த அரசியல் குறுக்கீடும் இன்றி இந்த அரசு எடுக்க வேண்டும்.
“நம்ம ஆட்சிக்கு வந்துட்டோம்...
ஒரு ஆட்டம் ஆடி பாக்கலாம் என நினைச்சீங்க அவ்ளோதான்!” என்று நீங்கள் மனப்பாடம் செய்து ஒப்பித்த இந்த வசனம் நியாபகம் இருக்கா CM சார்?
ஆனால் இன்று நடந்தது என்ன?
உங்க கட்சி சோளிங்கர் MLA கபில் மற்றும் அவரோட கும்பல், செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை கையை முறுக்கி தாக்கிருக்காங்க..!!
இது ஆளும்கட்சி என்பதால் வந்த ஆணவ மமதை தானே? அதிகாரத் திமிர் தானே?
ஆட்சி ஆணவத்தில் ஆட்டம் போட்ட உங்க கட்சி MLA மேல என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க CM சார்? @CMOTamilnadu
இல்ல வழக்கம் போல மயான அமைதிதானா?
வாய்மூடி மௌனிதானா?
காத்திருப்போம்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
"என்னுடைய தொகுதிக்குள் வந்தால் கொன்று விடுவேன்" என்று சொந்தக் கட்சியைச் சேர்ந்த சாத்தூர் ஒன்றியச் செயலாளரை, அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ வெளியாகிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், அதிகார திமிருடன் சொந்தக் கட்சி நிர்வாகியையே ஆபாசமாகப் பேசும் இவர்களா தமிழகத்திற்கு மாற்றத்தைத் தரப் போகிறார்கள்?
ஒட்டுமொத்த அரசியல் கழிவுகளின் குவியலாக மாறியுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' மாற்றமல்ல; அது சகிக்க முடியாத துர்நாற்றமே!
#பொய்க்கால்_குதிரை_அரசு
அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் அணிஸ் என்பவர் பெண் வழக்கறிஞரிடம் 15 லட்சம் வரை அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் கேட்கும் ��டியோ வெளியாகி தமிழக வெற்றிக்கழக அரசின் முகத்திரையை கிழித்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி கமிஷன், கோவில் நிலங்களில் முறைகேடு, அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் என ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் ஊழலில் ஊறிப்போயுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இந்த, "விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்றவங்களையும் விடமாட்டான்" என்று பஞ்ச் டயலாக் பே���ிய ரீல்ஸ் முதலமைச்சரும், அஞ்சு கட்சி அம்மாவாசையான சட்டத்துறை அமைச்சரும் இந்த ஆடியோவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
🎊#கோவை மாவட்டத்தை பெருமை சேர்க்கும் விவசாயத்தையும் இயற்கையையும் போற்றும் வகையில் பஞ்சபூதம் மற்றும் நாற்று நடுதல் சிலைகள் திறுப்பு விழாவில் சிலை நிறுவி பராமரிப்பு விவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கமான விவசாயி #முள்ளுப்பாடி_R_GOLD_நிறுவனர்_திரு_MM_M_ரங்கசாமி ஐயா.🙏💐
தவெக ஆட்சியின் அவலத்தால் காவல்துறையினரின் லத்திகளுக்கு இரையாகி, தன் 24 வயது மகனை இழந்து கண்ணீருடன் ஒரு தாய் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது, அந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய ஆட்சியாளர்களோ சினிமா கொண்டாட்டங்களில் கூத்தடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
இங்கு திருந்த வேண்டியது அவர்களல்ல; 'மாற்றம் பிறக்கும்' என்று நம்பி வாக்களித்து, இன்று ஏமாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்கள்தான்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் என்ற
இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
போலீசார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் மரண வாக்குமூலம்..
ஜனநாயகத்தின் முதல் கடமை, ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான்.
இது ரீல் ஜனநாயகனுக்கு தெரிய வாய்பில்லை.
தன்னுடைய ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து ரீல் ஜனநாயகன் @CMOTamilnadu என்ன பதிலளிக்க போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்
தற்போது தவெக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் என்பவர், மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியும், வீடியோ காலில் தவறாக நடந்து கொண்டும் உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் அளித்து மூன்று நாட்களாகியும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எனப் பலர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியபோது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களா தமிழக பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போகிறீர்கள்?
@CMOTamilNadu
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாகத் திகழும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் தமிழகத்தில் ஒவ்வொரு மூலையிலும் தவெக நிர்வாகிகளால் பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள். தமிழக வெற்றி கழகம் கருவின் குற்றம்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்நாட்டில் மக்களுக்கு எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் படை,
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படை,
புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களின் படை முன்வந்து நிற்கும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
-பழனியில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் @DrVpb அவர்கள்.
#AIADMK.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
பழனி ���ண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
@Srinivasanoffl @DrVpb