@sangathamizhanM உங்கள் இடைக்கால நீக்கம் திரும்ப பெற பெற்றதா தோழர் ஏன் நீங்கள் கட்சியில் இருக்கும் முக்கிய நபரை விமர்சனம் செய்றீங்க கொஞ்சம் தலைவருக்கு நெருக்கடி தராத வண்ணம் நடந்து கொள்ளுங்கள்..
அ��்பறம் என்ன முன்னாள் முதல்வரே நாளை முழு அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு செய்ங்க ஜனாநாயகத்தை பாதுகாப்போம் no need #neetexam @mkstalin @Udhaystalin
நீட்டை முற்றிலுமாக ரத்து செய்ய நீட் எதிர்ப்பை பற்ற வைத்தது தமிழ்ந��டு
“நீட்”டால் இப்போது தலைநகரம் பற்றி எரிகிறது.
தமிழ்நாடு படுத்து உறங்குகிறதா?
நீட்டை நீக்க ஒன்றிய அரசை எதிர்த்து போராடிய சக்திகள் இந்த தட்பவெப்பத்தை பயன்படுத்தி மீண்டும் போராட்டத்தை உத்வேகத்துடன் முன்னெடுக்க தவறினால், கடந்த கால போராட்டங்கள் கண்துடைப்பு என்றே வரலாறு பதிவு செய்யும்.
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த ��ுற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இ���்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்த��� குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்��ிருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த ���திகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக���கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
ஆத்தூர் அருகே கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை மீண்டும் திறந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டள்ளதாம் இரண்டு பெண்கள் காயம்
ஆத்தூர் அருகே கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை மீண்டும் திறந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டள்ளதாம் இரண்டு பெண்கள் காயம்