ஸ்டாலின் கைது செய்யாமல் விட்டது தவறென்று உணர்ந்திருப்பார் என பலரும் எழுதுகின்றனர்
நல்லவேளை கைது செய்திருந்தால் இன்னும் மோசமாக விக்டிம் கார்டு எடுத்திருக்பார்
ஆனால் விஜயை ஒரு தேவதூதன் போல கருதிய பலரும் இன்று முகம் சுளிக்க ஆரம்பித்திருக்கின்றனர்! அதுதான் ஸ்டாலின்களின் அரசியல்
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
இந்த ரெண்டு ப்டங்களுமே பொது மக்களின் பயன் பாட்டிற்காக, புதிய பேருந்துகளை இயக்குவதற்கான விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான். ஆனால் இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
இதில் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைப்பது அவர் அரசு பிளான் செய்து, நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டு, ஒப்பந்தம் செய்து பேருந்துகளை வாங்கியபோது செய்தது.
முதல்வர் விஜய் அவர்கள் செய்வது திமுக அரசில் பெரும்பாலானவற்றை செய்து விட்டுப் போன பின்பு அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக அஷோக் லெய்லாண்ட் வழங்கிய பேருந்துகளை துவக்கி மட்டும் வைப்பதற்காக வந்த போது எடுத்தது.
மசாலாவிற்காக பெரம்பூர் டிக்கெட் ஒண்ணு சேர்த்து எடுத்திருக்காரு. அது தன்னுடைய ரசிகர்களின் அண்ணன் கியூட்ல என்ற ரசிகத் தன்மைக்காக போடப்படும் தீனி.
அதைத்தாண்டி உண்மைத் தன்மையை அறிய விரும்பும் மக்களுக்காக
2025 ஏப்ரல் 30
Institute of Road Transport (IRT) மூலம் 2,134 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டது.
2025 அக்டோபர் 16
டெண்டர் முடிவடைந்து Ashok Leyland நிறுவனத்திற்கு 1,937 பேருந்துகளுக்கான ஒப்பந்தம் (Letter of Award / Work Order) வழங்கப்பட்டது.
மொத்த மதிப்பு: - ₹669 கோடி
விநியோக அட்டவணை:
1,701 BS-VI Low Floor பேருந்துகள் - வழங்க வேண்டிய காலம் அக்டோபர் 2025 → மார்ச் 2026
236 Semi Low Floor பேருந்துகள் - வழங்க வேண்டிய காலம் செப்டம்பர் 2026 → ஜனவரி 2027
முதல்வர் விஜய் அவர்களே, எங்களது அப்பா, இதோ இன்று நீங்கள் தொடங்கி வைத்த பேருந்துகளில் கூட இருக்கிறார்.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.
#StopSexualHarassment #LawAndOrder
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
ரீல் அந்து போச்சு அமைச்சரே !
வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன்.
அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார்.
1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார்.
50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார்.
விருகம்பாக்கத்தில் சொந்த வீடு
உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
One final time… Tamil Nadu bows its head in gratitude to its Chief Minister
▫️For your visionary leadership
▫️For your unwavering and uncompromising governance
▫️For your transformative welfare schemes that reached every section of society
▫️For the unprecedented industrial growth across the state
▫️For attracting billions worth of foreign investments into Tamil Nadu
▫️For your compassion and care towards school children through the Breakfast Scheme
▫️For empowering the youth through sports development initiatives and special support via your Deputy CM, Udhayanidhi
▫️For extending solidarity and assistance even to the Manipur sports team during difficult times
▫️For your women-centric welfare schemes, financial aid programs, and empowerment initiatives
▫️For revolutionary schemes such as Free Bus Travel for Women, Kalaignar Magalir Urimai Thogai, Pudhumai Penn, Naan Mudhalvan, and many more that transformed millions of lives
▫️For building modern hospitals, roads, bridges, libraries,Stadiums,co-working spaces, and Thozhi hostels for women across the state
What is it that you have not done for Tamil Nadu?
From the homeless to the elite…
From a fetus in the womb to the final journey of human life…
Your governance touched and transformed every stage of life and every section of society across Tamil Nadu.
The list is endless.
Even if we attempt to document everything you have done for this state, words alone would never be enough.
You assumed office during one of the darkest and most challenging phases in modern history — the COVID crisis.
When uncertainty surrounded the people, you stood firm.
When fear gripped the state, you gave confidence.
When Tamil Nadu needed leadership the most, you delivered with determination and humanity.
And by the end of your governance, Tamil Nadu recorded continuous double-digit economic growth for two successive years.
Not even for a single day did you slow down.
You met countless citizens, delegates, investors, workers, students, and officials.
You travelled tirelessly across Tamil Nadu and represented the state with pride across the globe.
One of the finest administrators India has ever witnessed.
Hard work.
Relentless hard work.
That was the philosophy you lived by.
You treated everyone with dignity and kindness.
Even your critics, political opponents, and those who abused you personally were met with patience and forgiveness.
Such grace is rare in public life.
You are truly one of the greatest Chief Ministers and national leaders India has ever produced.
Your humility, generosity, decency, compassion, and humanity are unparalleled.
Tamil Nadu will miss you.
History will honour you.
And generations to come will remember your contributions with gratitude, admiration, and pride.
Thank you, Sir.
Thank you, Thalaiva.
Thank you, Father.
Thank you, Brother. 🙏🏾
With deepest gratitude, utmost respect, and heartfelt humility,
-We Dravidians
From the land of Delta
Our heads held high.
Our resolve is stronger than ever.
Our tribe will continue fighting for the people.
We are DMK.
Lead by the best of the best.
🫡 Thalaivar 🙏🏽 #DMKForever