இவர்களை
பள்ளிக்கு அனுப்பினோம் ,
கல்லூரிக்கு அனுப்பினோம் ,
பாட புத்தகம் கொடுத்தோம்,
புத்தக பை கொடுத்தோம் ,
மிதிவண்டி கொடுத்தோம் ,
சீருடை கொடுத்தோம்,
மதிய சத்துணவு கொடுத்தோம் ,
இளவயது திருமணம் தவிர்த்து,
பெண்களை எப்படியேனும் ,
10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிக்க
• பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ரூ. 25,000/- நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் கொடுத்தோம் ,
பட்டப்படிப்பு / டிப்ளமோ படித்தவர்கள் ரூ. 50,000/- நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் கொடுத்தோம் ,
அதே திட்டத்தை "புதுமை பெண்" என உருவகம் செய்தோம் ,
அரசு பள்ளி பயின்று ,உயர் கல்வி சென்றால் மாதம் 1000 இருபாலருக்கும் கொடுத்தோம் ,
தொழில்நுட்பம் பயில
மடிக்கணினி கொடுத்தோம் ,
இந்தியாவிலேயே
மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என கட்டி அமைத்தோம் ,
மண்டலத்துக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைத்தோம் ,
உயர்கல்வி முதல் உயரே பறக்கும் விண்வெளி ஆராய்ச்சி வரை " நான் முதல்வன் " மூலம் பயிற்சி அளித்தோம் ,
படிக்க வச்சோம் .,
படிச்ச படிப்பிற்கான வேலையும்
TIDEL பார்க், வெளிநாட்டு நிறுவனங்கள் , அதன் கிளைகள் மூலம் இங்கேயே அமைத்து கொடுத்தோம் ,
நாட்டிலேயே முதல் பெண் காவல் நிலையங்கள் அமைத்து பாதுகாத்தோம்,
நாட்டிலேயே முதல் முறையாக அவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வராது பாதுக்காக்க, HPV தடுப்பூசி அளித்தோம்,
ஆனால்..
இந்த நடிகர்களின் பின்னால் போய் சீர்கெட்டு போய் சுற்றும் தறுதலைகளாக திரியும் என எவரும் கனவிலும் கண்டதில்லை ,
வடக்கே உள்ள மாணவிகளை பார்த்தல் உண்மையாகவே ஆற்றாமை தான் மேலோங்கி இருக்கிறது.,
தனக்கான எந்த special Privilegeகளும் இல்லாது , தாமே சுயமாக போராடி , படித்து , முன்னேறி ,இப்போது நாட்டையே வழிநடத்தும் விதத்தில் முன்னேற்றம் அடைந்து இருப்பது கண்களை நனைக்கிறது ,
என்ன தவம் செய்ய வேண்டும் .,
இப்படி பட்ட மாணவிகளை/ பெண்களை தமிழ்நாட்டில் இனி உருவாக்க ??
@mkstalin 🙏🖤❤️
கெடுவான் கேடு நினைப்பான் !
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்றோர் இந்த இடைத்தேர்தலில், நாம் இல்லாமல் திமுக டெப்பாசிட்டையே இழந்து தவிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் செய்துக் கிடந்தனர் !
எதிரிகளும் நம்மை, கூட்டணி துணையில்லாமல் திமுகவால் கணிசமான வாக்குகளையோ, வெற்றிகளையோ பெற்றதே இல்லை என்கிற அவப்பெயரை அவதூறாக பூசிக் கொண்டே கிடந்தனர் !
இந்த இடைத் தேர்தலையே திமுக தவிர்க்குமென புரளியைக் கிளப்பி விட்டனர்.
ஆனால் முதல் ஆளாய் வேட்பாளர்களை அறிவித்ததோடு அன்றி, முதல் ஆட்களாய் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தவர்களும் திமுகவினர்தான் !
மதுராந்தகத்தில் ஸ்டாலின் & உதயநிதி தலா ஒரு நாள் மட்டுமே பரப்புரையில் ஈடுபட்டனர். தாராபுரத்திலும் அதுவே. ஒருவர் வேன், இன்னொருவர் மேடைப் பேச்சு.
ஆனால் முதல்வராக இருந்தவர் தலா இரு முறை பேச்சு + சாலை உலா என அனைத்து சீன்களும் போட்டார். இடைத்தேர்தலுக்காக ஒரு முதலமைச்சர் இந்தளவு மெனக்கிட்டு யாருமே அவரவர் வாழ்வில் பார்த்ததில்லை, வரலாறுமில்லை. ஒரு முதல்வராக இருந்துக் கொண்டு மக்கள் வரிப்பணத்தை அப்படி வீணடிப்பது அறமில்லை !
எந்த நெருடலுமில்லாது தாய்மாமன் மோதிரம், வெற்றிப் பயணம், அண்ணன் சீர் திட்டங்களை இந்த இடைத் தேர்தலுக்காகச் செயல்படுத்தினார்.
அவருடன் பரப்புரைக்காக காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் என அனைவருமே பாடுபட்டனர்.
இவ்வளவு செய்த பின்னரும் அவர்களால் பிரம்மாண்ட வெற்றியைப் பெறவியலவில்லை. மாறாக, திமுக தனியாகவே போராடி இரண்டாமிடத்தில் கம்பீரமாக வந்து நிற்கின்றது !
தாராபுரத்தில் போன மே மாதத்தில் 16000 வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்றவரால் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. மதுராந்தகத்தில் போன முறை திமுகவுக்கு மூன்றாமிடம், இம்முறை இரண்டாமிடம். வாக்கு விழுக்காட்டில் திமுகவுக்கு சரிவில்லை.
கம்யூனிஸ்ட் தனியாக நின்றிருக்கத் தேவையே இல்லை. தன் பலவீனத்தை ஒருபோதும் பொதுவெளியில் வெளிப்பட யாருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் நம் முன்னாள் தோழர்கள் ஏன் அந்த ஆயுதத்தை எடுத்து தமக்குத் தாமே பாய்ச்சிக் கொண்டனர் எனத் தெரியவில்லை. இனி தவெக அவர்களை மதிக்காது, திமுக சீண்டாது !
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களை நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து அனுப்பி வைத்த திமுகவை அவர்கள் இழிவு செய்திருக்கக் கூடாது !
சமீப காலங்களில், மதிமுக, முஸ்லீம் லீக் பேசிய பேச்சுக்களெல்லாம் ரணக்கொடூரமானவை. அதற்கெல்லாம் இனி எந்தப் பிறவியிலும் மன்னிப்பில்லை !
காங்கிரசைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தன் வாழ்க்கையில் செய்த பெருங்குற்றம் தன்னை ஏற்றி அழகு பார்த்த ஏணியை எட்டிவிட்டது. திமுகவை இழந்த ஒரே ஒரு காரணத்தினால் இன்று டெல்லியில் அவர் தனித்து பரிதாபமாகத் தெரிகிறார் !
பாமக பின்னாளில் திமுகவுடன் பயணிக்கும். அதற்கு முன்னால் அது கொஞ்ச காலம் விசிலடிக்கப் போகும். அது போவது விசிகவை துரத்தியடிக்க.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். திமுகவுக்கு துரோகம் செய்த எவனுடைய வாழ்க்கையும் நிம்மதியாக முடிந்ததாக வரலாறு இல்லவே இல்லை.
இனி எப்போதும் காங்கிரஸ், விசிக, மதிமுக IUML கட்சிகள் திமுகவுடன் கூட்டு சேர்க்கப்படாது. கலைஞருக்கு மிகப் பிடித்தமானவர்கள் என்பதால் கம்யூக்களை பொறுக்கலாம், ஆனால் அதை காலம் சொல்லட்டும் !
திமுக & அதிமுகவுக்கு வாக்களித்த தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கொஞ்சமேனும் மானம், ரோஷம், பகுத்தறிவு, சூடு,சுரணை இருந்ததால் நீங்கள், கவர்ச்சிக்கோ, பரிசில்களுக்கோ மயங்காமல், உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாக்களித்தீர்கள். உங்கள் கோபத்தை தக்க வைத்திருங்கள். விரைவில் இருள் அகலும், விடியல் வரும் !!!
#திமுக
Thanks
Raja Rajendran.. Facebook.