அடுத்து முரசொலி, நமது அம்மா போல் வெற்றிக் கழகத்திற்கொரு நாளேடு தேவை..
📌 குறிப்பு : நாளேடுதான் தேவை, வார இதழ் அல்ல! ஏற்கனவே அரை டஜன் வார இதழ்கள், ஈர இதழ்களோடு வழிநெடுக காத்திருக்கின்றன 😎
நல்ல செய்தி! போன சனிக்கிழமை சிலிண்டர் புக் செய்து, ஏஜென்ஸி தேடிப்போய் கண் சிமிட்டி, அக்கௌண்ட் அப்டேட் ஆகி, முந்தா நாள் சிலிண்டர் வந்து சேர்ந்து, அதன் மூலம் 29 ரூபாயை மிச்சப்படுத்திய சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டிய தருணம்!
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
-------------------------------
1) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2) கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார் .
3) தேர்தலுக்கு முன்பு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
4) கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், 'கடிந்தும் -கண்டித்தும்' அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.
5) வாய்மை, நேர்மை என்னும் பெயரில் உட்கட்சி முரண்களை பொதுவெளியில் பேசுவது, கட்சியின் கட்டுக்கோப்பான வலிமையை அசைத்துப் பார்க்கும் ஆபத்தான முயற்சியாகும். அத்துடன், கட்சியைப் பின்பற்றி அரசியல் சக்தியாய் அணிதிரளும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மிகவும் தீங்கான போக்காகும்.
6) கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, 'தானே முதன்மை' என தன்னை முன்னிறுத்தும் இத்தகையபோக்கு, ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து கட்சியிலுள்ள பிறரையும் இவ்வாறு செயல்படத் தூண்டுவதாக அமையும்.
7) இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள், "கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார்."
8 .இந்த நடவடிக்கை தொடர்பாக இவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கமளிக்கவும் அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவும் இவருக்கு உரிமையுண்டு.
9) இடைநீக்க காலத்தில் இவர் கட்சியின் விதிமுறைகளை மதித்து, மேலும் முரண்பாடான செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதன் மூலமே, இவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, இடைநீக்க நடவடிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
10) ஒழுங்கு நடவடிக்கைக்குரிய காலத்தில் இவர் கட்சியின் நிகழ்வுகளில், போராட்டங்களில், கட்சி சார்ந்த இன்னபிற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டியது இவரது இன்றியமையாத அரசியல் கடமையாகும்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
சீர்காழியில் இடைத்தேர்தல் வந்தால் தொகுதி மக்களுக்கு அதிர்ஷ்டம்; மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் அதிர்ஷ்டம்தான். யாருக்கு துரதிருஷ்டம் என்பது இடைத்தேர்தலில் தெரியும். தமிழ்நாட்டு அரசியலில் அடுத்த ஸ்டாப்பிங், இடைத்தேர்தல்தான்! https://t.co/uxcd0HvCSN
அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, ஆழ்ந்து யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகத்தான் தெரிகிறது. அல்லு, சில்லு என்று யாரையும் காயப்படுத்தாமல் ஒரு பாசிடிவ் அரசியலை அண்ணாமலை முன்னெடுக்கிறார். பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் வரத்தான் செய்யும். அண்ணாமலையின் செயல்பாடுகள், பதிலடியாக இருக்கும்
காங்கிரஸ் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் தவெக போன்ற பணிவான கட்சி, இந்தியா கூட்டணி கூடாரத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது
#எங்கேயோ அல்ல சத்தியமூர்த்தி பவனில் கேட்ட குரல்
சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர்.
உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!