கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் @KVKSSabari அவர்களுக்கு இன்று மாலை மலுமிச்சம்பட்டி சந்திப்பு அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
வாக்குபதிவுக்கு எஞ்சி இருக்கும் அடுத்த 5 தினங்களும் நம் கழக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை வீடுதோறும் சுற்றி சுழன்று, கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொண்டோம்.
கோவையில் 10/10 எனும் வரலாற்று வெற்றியை பெற அயராது உழைப்போம்!
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
உரிமைகளைக் கேட்டால், உண்மைக்கு மாறான பொய்களைக் கட்டவிழ்த்துவிடுவது, வளர்ச்சித் திட்டங்கள் கேட்டால், வஞ்சகமான சட்ட திட்டங்களைத் திணிப்பது,
நியாயமான நிதிப் பகிர்வு கேட்டால், நம்மிடம் பிடுங்கி பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்குத் தருவது என எக்காலமும் தமிழ்நாட்டிற்குத் துரோகங்களை மட்டுமே தந்துகொண்டிருக்கும் NDA கூட்டணிக்கு,
இனி எந்தக் காலமும் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாத அளவுக்கு நம் வாக்குகளின் மூலம் தோல்வியைப் பரிசளிப்போம்.
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தொழில் வளர்ச்சிக்குப் பெயர்பெற்ற திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள் அன்புச் சகோதரர் @JayakumarTprDMK மற்றும் அண்ணன் இரா. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
திருப்பூர் மாவட்ட மக்களுக்கு, ஐந்தாண்டுக்கால திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளையும், தமிழ்நாட்டு மக்களுக்கு, பாசிஸ்ட்டுகளும் அடிமைகளும் செய்துவரும் துரோகங்களைப் பட்டியலிட்டும் உரையாற்றினோம்.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான ஜனநாயகப் போராட்டத்தில் வென்று,
வரலாறு படைப்போம்!
#DMK4TN #VoteForDMK
தன்னலமின்றி உழைக்கும் மகளிருக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும்போது, அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை ஆயிரக்கணக்கான பெண்களின் முகத்தில் ஒருசேரக் கண்டபோது நெகிழ்ந்தேன்!
ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
#SalemWithDMK#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
#SayNoToNDA@ErodeVeeramani#DMKStudentWing
நம் நெஞ்சுக்கு நெருக்கமான #ChepaukTriplicane தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்காக நம் அரசு செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்தோம்.
மதவாத பாஸிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டையும் சிறுபான்மை மக்களையும் தலைவர் தலைமையில் உறுதியுடன் காப்போம்.
பாசிச சிந்தனை ஒழியட்டும், மதச்சார்பற்ற ஒற்றுமை வளரட்டும்.
#DMK4TN #VoteForDMK
மக்களுக்குள் பாகுபாட்டை உண்டாக்கி, வடமாநிலங்களில் அரசியல் ஆதாயம் அடையும் பா.ஜ.க, அடிமை அ.தி.மு.கவின் தோள் மீது ஏறி, தமிழ்நாட்டுக்குள் வர துடிக்கிறது.
இந்த மதவாத NDA கூட்டணியை தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்! தமிழ்நாட்டின் மதச்சார்பின்மையைக் காப்போம்!
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!
🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-இல் என் உழைப்பால் பதில் சொன்னேன்.
🌄 "தி.மு.க.வில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை" என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன்.
🌄 நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; 'முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்!
#ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
Tamil Nadu Won’t Bow Down
⚖️ No compromise on State rights or federalism
✊ Yes to dignity and self-respect. No to imposition
🚀 Committed to growth with people-first, welfare-driven, inclusive governance
Sharing many more insights in this detailed conversation with @NewIndianXpress.
https://t.co/2cMYmZq8it
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!
#ECI #ElectionCommission
மாண்புமிகு முதலமைச்சருக்கு துணை முதலமைச்சராக , கழகக் தலைவருக்கு தொண்டனாக, முன்னாள் இளைஞர் அணி செயலாளருக்கு இந்நாள் இளைஞர் அணி செயலாளராக , தந்தைக்கு மகனாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு இன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாடே அன்பு செலுத்தும் நம் தலைவர் மீது கொளத்தூர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் கூடுதல் அன்பு நம்மை நெகிழ செய்தது.
கழகத்திற்கே வெற்றி என்கிற தமிழ்நாட்டு மக்களின் முடிவை கொளத்தூர் வெளிப்படுத்தியது.
தலைவர் தொடரடும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Avadi_Nasar அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் சிறப்பாகப் பங்காற்றிய அண்ணன் நாசர் அவர்களின் மக்கள் பணி தொடர்ந்திட மீண்டும் அவரை சட்டமன்றத்திற்கு அனுப்பிட வேண்டுமென ஆவடி தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் காக்க வெல்வோம் 200, படைப்போம் வரலாறு!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்