“கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன்.
கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #DMK | @mkstalin
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
``ஸ்டாலின் தான் BEST CM''
``தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திய ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதார துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு அந்த துறைகளை மேம்படுத்திய பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தான் இந்தியாவில் முதலமைச்சர்களாக மிக சிறந்த பணியாற்றியுள்ளனர்’’
- இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே அளித்த பதில்
#BESTCM #MKStalin #PinarayiVijayan
#ArvindKejriwal #India #AbhijeetDipke
മണ്ണും മനുഷ്യരും ഒന്നായി ജീവിച്ച ഒരു കാലത്തിന്റെ ഓർമ്മ പുതുക്കലാണ് #ഓണം.
ജന്മം കൊണ്ട് ആരും ഉയര്ന്നവരോ താഴ്ന്നവരോ അല്ല. എല്ലാവർക്കും എല്ലാം എന്നതാവട്ടെ നമ്മുടെ ലക്ഷ്യം. മാവേലിയെ വീഴ്ത്തപ്പെട്ടവനായി അല്ല, ജനങ്ങളുടെ ഉള്ളിൽ കുടികൊള്ളുന്ന, സമൃദ്ധിയുടെയും സന്തോഷത്തിന്റെയും മന്നനായി ആഘോഷിക്കാം.
മാവേലിയുടെ മണ്ണിൽ തുല്യത പൂക്കട്ടെ. ഏവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
#Onam #HappyOnam #OnamWishes
மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.
பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.
மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!
தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்!
அவர் புகழ் ஓங்கட்டும்!
#CaptainVijayakant
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
கழகத்தின் வளர்ச்சிக்காகவும் - திராவிட இயக்கக் கொள்கைகள் திக்கெட்டும் பரவிடவும் அயராது உழைத்தவர்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உரிமைக்காக குரல் கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
திரு.முரசொலி மாறன் அவர்களின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்.
அவர் புகழ் ஓங்கட்டும்!
#MurasoliMaran
இயக்குநர் இமயம் பாரதிராஜா - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் திரையுலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
தமிழ்த்திரையுலகிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய பாரதிராஜா சார் - பாக்யராஜ் சாரின் பெருமைகளையும் - சாதனைகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினேன்.
அவர்கள் இருவரின் கலைப்பணி என்றென்றும் மக்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்!
#Bharathiraja #KBhagyaraj
#WATCH | “ஜாலியா TRIP போற மாதிரிதான் போனோம்.. அரசு செலவில் ரோடு ஷோ..”
விசாரணைக்கு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #UdhayanidhiStalin | #Thanjavur
Wishing my dear friend @ArvindKejriwal a very happy birthday. India’s future will be built by those who have the resolve to look beyond the present and the determination to transform aspirations into lasting change.
May you continue to advance that larger vision with courage, purpose and an abiding faith in the promise of our people.
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?
ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.
இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.
#TNFishermen
இந்த 'ஸ்டிக்கர்' அரசின் அடுத்த ஸ்டிக்கர், திமுக அரசு கொண்டுவந்த முதலீடுகள் மீது ஒட்டப்பட்டுள்ளது!
உண்மை வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தாலேயே, செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சொந்தமாக ஒரு முதலீட்டைக் கூடக் கொண்டுவர முடியாமல், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களால் பேசி முடிக்கப்பட்ட முதலீடுகளுக்கே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இன்று கையெழுத்தான ஒப்பந்தங்களில் 75 சதவீதம், திமுக ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை முடிந்து முதலீட்டிற்குத் தயாரானவை ஆகும்!
திமுக அரசு எட்டிய 11.19% என்ற தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர, மாநிலத்தின் பல்வேறு புதிய பகுதிகளில் வெளிநாட்டு முதலீடுகள் பரவலாக வர வேண்டும். அதற்குத் தீவிரமான தொழில் முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், திரைப்படங்களின் 'பாக்ஸ் ஆபீஸ் வசூலை' வைத்துப் போட்டி போடும் கூட்டம், மாநிலத்தின் தொழில் முதலீடுகளையும் அதே அளவுகோலில் வைத்துப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது!
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்" என்ற வள்ளுவ நெறியே என் நெறி!
இல்லம் வந்து இன்மொழியால் மனம் நிறைத்திட்ட விடுதலைப் போராளியும் அகவை நூறு கடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பெருமதிப்பிற்குரிய திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றி.