2024 ல் இருந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி கேட்டது #FairDelimitation
2026ல் திமுக கேட்பது #FairDelimitation
2026ல் காங்கிரஸ் கேட்பது #NoDelimitaion
ஏன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்பதற்கு பதிலளிக்க வேண்டியது காங்கிரஸ் கட்சிதான்.
மீண்டும் மீண்டும் சொல்றேன்
கலைஞர் வாழ்வார்
கலைஞர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
இதை கேட்கும்போது எப்படி சிலிர்க்குதோ அதே போல் 80 வருடம் கழித்தாலும் அன்றும் ஒரு நன்றி உள்ளவன் இருப்பான்
அவன் தூக்கி பிடிப்பான்டா கலைஞரை இன்றும்
தாய் தமிழுக்கும்
கலைஞர்க்கும் சாவே கிடையாதுடா
4 மாசம் முன்னால, Delimitation issue திமுக நடத்துன நாடகம்ன்னு அடிச்சு விட்டுட்டு.. 🤡🤡🤡 இப்போ, ஆட்சிக்கு வந்த பின்னால மாத்தி பேசுறது
அது எப்படி பொய்களாலயே ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்?
முடியும், அது தான் TVK.. 🔥🔥 சங்கீகளுக்கு tough கொடுப்போம்ல
நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியாகப் போற்றப்படும் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை - அண்ணா அறிவாலயத்திலும், அரசினர் தோட்டத்திலும் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினோம்.
#KalaignarForever
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் கழகத்தினருடன் பங்கேற்றபோது.
#KalaignarForever
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?
குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget