கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா வி.எஸ்.பாபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனத்துயரடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும், தவெகவின் தொண்டர்களுக்கும், கொளத்தூர் தொகுதியின் மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வி.எஸ்.பாபுவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக 'இன்று' அறிவிக்கப்பட்டிருக்கிறது.
70 நாட்களுக்கு மேலாக வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியே தெரியாததால், அதனைக் கேட்டு கொளத்தூர், தொகுதி செம்பியத்தைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் 'நேற்றையதினம்' சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள் விக்னேஷ், ரவிசங்கர் மீதும் அப்படியே வழக்குப் பதிவு செய்யச் சொன்னால் நன்றாக இருக்கும்.
இவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் வாய்திறந்தது போலவே தெரியவில்லையே!
சாட்டை மேல வழக்கு போட்டா பயந்துருவான்னு நினைச்சி வழக்கு போட்டானுங்க..ஆனா அவன் இப்ப தான்டா உக்கிரமாவே அடிக்கிற மாதிரி தெரியுது.🤣🤣
இது மூலமா தவெக அரசு ஒரு பாசிச அரசுன்னு தற்குறிங்களே தங்கள மக்கள் கிட்ட expose பண்ணிகிட்டானுங்க.
தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத கோழை!
நூற்றுக்கணக்கான (சீக்கியர்கள் உட்பட) மக்களை கொண்டுகுவித்த பாவி!
பிறவி சர்வாதிகாரி!
என்று தான் இந்திரா காந்தியை வரலாறு பதிவு செய்யும்...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கு முந்தைய திமுக, அதிமுக ஆட்சிதான் காரணம் என்கிறார் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணியார்.
இந்த ஆட்சில நடக்குற எதுக்குத்தான் பொறுப்பேற்பீங்க மணியாரே? முந்தைய ஆட்சியைச் சொல்லி, இன்னும் எத்தனைக் காலம் தப்பிக்கப் போறீங்க?
புலிகளைத் “தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டுள்ள புத்தகத்தை வெளியிட புறவாசல் வழியே சென்ற Cute CM 👹😤
விஜய் ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கும், ஈழத்து அணிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!🙏
💐 RiP 🪦
When TVK leaders like C. Arul Vignesh and Deputy Speaker M. Ravishankar cross the line, the government looks the other way...
But keeps filing cases against @Saattaidurai for speaking out against TVK's arrogance..
Why is the government so afraid of him?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழ்நாட்டு இளைஞர் ஸ்டீபன் ராஜாவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்! அவரது உடலை உடனடியாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், அரணையூர் அருகேயுள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் – ஆரோக்கிய சீலா இணையரின் மகன் ஸ்டீபன் ராஜா, சிங்கப்பூரில் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மகனை இழந்து துயருறும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஸ்டீபன் ராஜா, ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்து, பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த 11.11.2026 அன்று அவர் காணாமல் போனதாக, பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, மகனைக் கைப்பேசி வழியாகத் தொடர்புகொள்ளப் பெற்றோர் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் நேரில் சென்று விசாரித்தபோது, அவருடன் பணியாற்றியவர்கள் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்ததாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், 13.11.2026 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய தங்கள் மகனுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கும் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? அவர் கடைசியாக எப்போது, எங்கு காணப்பட்டார்? அவர் காணாமல் போனது எப்போது காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது? அவரது உயிரிழப்புக்கான காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு முழுமையான விசாரணை மூலம் விடையளிக்க வேண்டியது அரசுகளின் கடமை.
எனவே, இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் மூலமாக அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, ஸ்டீபன் ராஜாவின் உயிரிழப்பு குறித்து முழுமையான விசாரணை நடைபெறச் செய்ய வேண்டும். உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் குடும்பத்தினருக்குப் பெற்றுத்தருவதோடு, விசாரணையின் முன்னேற்றத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உயிரிழப்பில் குற்றச்செயல் ஏதும் நடந்தது விசாரணையில் தெரியவந்தால், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், ஸ்டீபன் ராஜாவின் உடலை அரசுச் செலவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து, அவரது பெற்றோரிடம் விரைந்து ஒப்படைக்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய நிலுவை, காப்பீட்டுத் தொகை மற்றும் சட்டப்படி உரிய இழப்பீடு ஆகியவற்றைப் பெற்றுத்தர வேண்டும். மகனை இழந்த குடும்பத்துக்கு ஒன்றிய அரசு உரிய துயர்துடைப்பு நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் நலத்துறை மூலம் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
தங்கள் மகனின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக் காத்திருக்கும் பெற்றோரை மேலும் காக்க வைக்காமல், இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உடனடியாகச் செயல்பட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தொடர்ந்து அவதூறும், கேலியும், கிண்டலும் செய்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பல லட்சமும், பல கோடியும் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்றுவிட்டார் எனத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து, யூடியூபில் தொடர்ந்து மோசடியாகப் பேசிவரும் YouTuber சவுக்கு சங்கர் மீதும் மற்றும் மாலதி, நித்திஷ் மீதும் நடவடிக்கை எடுத்தும், சவுக்கு மீடியா சேனலை (Savukku Media Network) தடை செய்யக்கோரி மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக இன்று (17.11.2026) புகார் மனு கொடுக்கப்பட்டது.
என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் பெற முடியாமல் "நீயா நானா" கோபிநாத்தே தனது இத்தனை வருட ஷோ அனுபவத்தில், இவங்கள எப்படி கையாள்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்பதை பார்க்க முடிந்தது.
நீங்க படித்த பகுத்தறிவு உள்ள பேச்சாற்றல் பெற்ற புத்திசாலியாகவே இருக்கலாம்.
ஆனால் எதிரில் இருப்பவர்கள் தற்குறிகளாக இருப்பின் ...
சொல்வதற்கு ஒன்றுமில்லை
சாத்தான்குளம் காவல்துறை லாக்கப் மரணத்துக்கு மக்கள் பொங்கி எழுந்தாங்க, அரசும் மக்கள் எழுச்சிய பார்த்து வேற வழி இல்லாம நடவடிக்கை எடுத்தது..
அடுத்த அரசு அதன்பின் நடந்த காவல்துறை அராஜக மரணத்துக்கு பொறுப்பேத்து மன்னிப்பு கேட்டு நடவடிக்கை எடுத்தது.
அதுக்கு சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்று 5 நிமிடங்கள் போராடியவர் இப்ப ஆட்சியில் இருக்காரு ஆனா லாக்கப் மரணங்கள் தொடருது, அதுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது மிகப்பெரிய முரண்.