காலம் மாறி போச்சி
கருவேலமரத்தாலே
காடுபாழாபோச்சி
கருமேக மழை கூட
காலம்தவறி போச்சு
வளமான குளமெல்லாம்
��ற்றி நாளாச்சு
கெண்டையும் கெளுத்தியும்
காணமல் போச்சு
ஏர் உழுத மாடெல்லாம்
எங்கேயோ போச்சு
கமலையும் கலப்பையும்
காட்சி பொருளாச்சி
இயற்கை
✨✨✨✨✨
உன்னோடு
பேச ஒரு
நிமிடம் கிடைத்தால்
போதும்..!
கண்ணோடு
இருக்கும்
கண்ணீர் மட்டும்
அல்ல..!
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து
விடும் என் வாழ்வில்..!
🥰🥰
என்னவளே..
என்னை தவிக்க விட்டவளே..
உன் அன்பான குரலாலே
என்னை நேசிக்க வைத்தவளே..
உனக்கு ஒரு காயம் என்று..
நான் அறிந்த போது..
நான் கவிதை மட்டுமே..
எழுதி உனக்கு ஆறுதல் சொல்கிறேன்..
வாய்ப்பில்லா வழிப்போக்கனாக ..
நான்
அருகில் இல்லை என்றாலும்..
உன் நிழலாக..
பறவைகள்
பட்டணத்து பறவைகள்
படும்பாடு பெரும்பாடு
பறந்து திரிந்தாலும்
அருந்த நீரில்லை
கூவத்த��� நீரதனை அவை
குடித்து பார்த்ததில்லை
ஆழ்கடல் அருகிருந்தும்
அதனால் பயனுமில்லை
கோடை கதிரவனின்
கோபம் தாங்காமல்
பாவமாய் மரநிழலில்
பதுங்கி கிடக்குதப்பா
கூரைமீது தனில்