எந்த பவர்லயும் இல்லாம இந்தியாவுலயே யாரும் அண்ணாமலை அளவுக்கு ஊழல் பண்ணது கிடையாது.. Annamalai is the most corrupt politician India has ever seen.. 💯
~ Activist Piyush Manush
ஊருல உள்ள எல்லா Fraud களும் தூய சக்தி, மாற்று சக்தினு வந்துடறாங்க யா நாட்ல..🤣🚶
நான் சட்டக் கல்லூரி மாணவராக இருந்து 2007 ஆம் ஆண்டு முதன் முதலில் @BJP4India இணைந்த பொழுது, அன்று பாஜக மத்தியில் ஆட்சியில் இல்லை, மாநிலத்தில் பலராலும் புரிந்து கொள்ளப்படாத கட்சி.
தேர்தல் அரசியலில் ஈடுபாடு கொண்டு அரசியலில் நுழையும், எவரும் பாஜகவை சீண்டாத நேரம் அது. எனக்கு அத்தகைய ஆசைகள் இருந்ததில்லை! என்னுடைய ஒரே கனவெல்லாம் இந்த பாரத தேசத்தை மீட்டெடுப்பதற்கு ஒரு நல்ல ஆட்சியாளர் பாஜகவில் இருந்து மட்டுமே வர முடியும். அப்படி வருபவருக்கு நாம் களத்தில் இருந்து பணியாற்றி அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது!
இன்று நான் கண்ட கனவுகளுக்கெல்லாம் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் செயல் வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேசத்தைப் பற்றிய எனது கனவு இன்னும் பெரியது, அதை நிறைவேற்றுவதற்கு அடுத்தடுத்து பாஜகவில் இருந்து மட்டுமே தகுதியான தலைவர்கள் வருவார்கள், அவர்கள் கரத்தை வலுப்படுத்த களத்தில் பணியாற்ற வேண்டிய பெரும்பணி எனக்கு இருக்கிறது!
தேர்தல் களத்தில் கவுன்சிலர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை நான் வாக்களித்த அனைத்து பொறுப்புகளுக்கும் நான் பாஜகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறேன்! தோற்றும் போயிருக்கிறேன்!
ஆனால், பாரத தேசத்திற்கான என் கனவுகளை எப்பொழுதும் என் கட்சி தோற்க விட்டதில்லை!
இன்று எங்களுக்கெல்லாம் தலைவராக இருந்து வழிகாட்டிய திரு @annamalai_k அவர்கள் புதிய இயக்கம் கண்டு புறப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது @BJP4India வளர்ச்சிக்காக அண்ணன் திரு @annamalai_k அவர்கள் மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்போது அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படும் தனிப்பட்ட முடிவுகள், கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் தந்துள்ளது.
ஏனென்றால், பாஜக என்பது தனிநபர்களை நம்பி இருக்கும் கட்சி அல்ல; இது தூய்மையான கொள்கைகளையும், தேசபக்தியையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு இயக்கம். எந்தக் காலத்திலும் இங்கே தனிமனிதர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது கிடையாது. கட்சியில் பதவிகளும் பொறுப்புகளும் தற்காலிகமானவை, ஆனால் கட்சியின் சித்தாந்தமும் தேசப்பணியும் மட்டுமே நிரந்தரமானது.
டெல்லி தேசியத் தலைமை, அண்ணன் அண்ணாமலை அவர்களுக்குக் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெரிய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தது. அப்படி இருக்கும்போது, கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கூட, அதை தலைவர்களிடம் பேசித் தீர்த்துக் கொண்டு கட்சிக்குள்ளேயே தொடர்வதுதான் தர்மம். அதை விடுத்து, தனியாகப் புதிய பாதை தேடுவது உண்மையான தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் பாஜக இன்று வளர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் லட்சக்கணக்கான சாதாரண தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான தலைமையைப் பார்த்து பாஜகவிற்கு வந்த எந்தவொரு உண்மையான தேசபக்தனும், தனிநபர் அரசியலின் பின்னால் போக மாட்டான். நம் நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், நாம் அனைவரும் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் பின்னால் இரும்பு அரணாக உறுதியோடு நிற்க வேண்டும்.
எனவே, பாஜகவின் தேசியத் தலைமை காட்டும் பாதையில் ஒன்றிணைந்து, கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க வேண்டி அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,
@BJP4TamilNadu@blsanthosh
மாடர்ன் டே கிரிக்கெட்டில் கூட ஒருவனால் 25 பந்துகளில் 87 ரன்களை தாண்ட முடியவில்லை என்றால் அதுவரை சுரேஷ் குமார் ரெய்னாவே டி20 கிரிக்கெட்டை ஆள்கிறான் என்று பொருள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று பாஜக சொன்னால் அது மதவாதம்?
சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுகவும், தவெகவும் சொன்னால் அது மதசார்பற்ற சமூகநீதியா?
In a state where Hindu bashing seems a fashion for certain actors, we have a Superstar, simple, humble and real ,proudly flaunting his devotion and following the path of Sanatana Dharma. Super Thalaiva @rajinikanth
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே?
@PttvNewsX
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
1. தவறான இடதேர்வு.
2. போதுமான காவலர்கள் இல்லை.
3. Emergency Exit போல எதுவுமில்லை.
4. கரூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் உடனடியாக Suspend செய்ய வேண்டும்.
- அண்ணாமலை
#Annamalai | #KarurStampede